ப்ளாக் மேஜிக் நிகழ்த்திய பிரபஞ்ச அழகி!! (மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 49 Second

பெண்கள் சமூகத்தில் தங்களுக்கென ஓரிடத்தை உருவாக்கிக் கொண்டு, அதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் துன்ஷி மேலும் தெரிவித்தார். இந்த பதில்தான் அவருக்கு வைர மகுடத்தைப் பெற்றுத் தந்து இந்த ஆண்டின் பிரபஞ்ச பிரபஞ்சமின்ன வைத்துள்ளது. சமூக வலைத் தளங்களிலும் அவரது பதில் வைரலாகி பாராட்டைப் பெற்று வருகிறது.

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் இந்த ஆண்டுக்கான ‘மிஸ் யூனிவர்ஸ்’ அழகிப் போட்டி மிகவும் கோலாகலமாக நடந்தது. இதில், இந்தியா உட்பட உலகம் முழுவதிலுமிருந்து 90 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ள, இறுதிச் சுற்றுக்கு 10 அழகிகள் தேர்வாகினர். இதில் போர்டோரிகோ மற்றும் மெக்ஸிகோ நாட்டுப் பெண்களை பின்னுக்குத் தள்ளி, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்ஷி ‘மிஸ் யூனிவர்ஸ்’ பட்டத்தை தட்டிச் சென்றார். 2018-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி கேட்ரியோனா கிரே, துன்ஷிக்கு வைரத்தால் ஆன பிரபஞ்ச அழகி மகுடத்தைச் சூட்டி பெருமைப்படுத்தினார்.

“என்னைப்போல் நிறமும், முடியும் உள்ள பெண்கள் அழகில்லாதவர்கள் என நினைக்கும் உலகில் நான் வளர்ந்தேன். அந்த எண்ணங்களுக்கு இன்றோடு முற்றுப்புள்ளி. பெண் குழந்தைகள் என்னையும் என் முகத்தையும் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பின்னர் அவர்களின் முகங்களில் என்னுடைய பிரதிபலிப்பைக் காண வேண்டும்’ எனத் தான் தேர்வாகுவதற்கு முன்பு சோசிபினி துன்ஷி அழுத்தமான வார்த்தைகளை மேடையில் உதிர்த்தார்.

துன்ஷியின் இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் வரலாற்றின் மிகப் பெரும் வலி இருக்கிறது. 400 ஆண்டுகால வரலாற்றுப் பின்னணியுள்ள ‘அட்லாண்டிக் அடிமைகள் பரிவர்த்தனை வழி’ (atlantic slave trade route என்று அதற்குப் பெயர். ஆப்பிரிக்க ஐரோப்பிய ஆசிய நாடுகளின் வணிகர்கள், அமெரிக்க வணிகர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த அடிமைகள் பரிவர்த்தனை பலநூறு ஆண்டுக்காலம் தொடர்ந்து நடைபெற்றது. ஆப்பிரிக்க பெண்கள் அமெரிக்கக் காலனிகளுக்கு அடிமைகளாக அழைத்துவரப்பட்டு அவர்களின் தலைமுடிகள் மழிக்கப்பட்டு மொட்டை அடிக்கப்பட்டன. மொட்டையடித்த கறுப்பினப் பெண்கள் தங்கம் மற்றும் வைரச் சுரங்கங்களில் அடிமைகளாக உழைக்க நிர்பந்திக்கப்பட்டார்கள். கறுப்பின அடிமைகளான தனது மூதாதையர்கள் சுரங்கங்களிலிருந்து எடுத்த வைரங்களை, மழிக்கப்படாத தனது சுருள் முடியில் கிரீடமாகச் சூட்டி மேடையை அலங்கரித்தார் சோசிபினி துன்ஷி.

துன்ஷியைப் பற்றிய முன்னுரை அறிவிப்பில், பெண்களிடையே இயற்கை அழகை ஊக்குவிப்பவர், பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர் என்று புகழாரம் சூட்டப்பட்டது. இறுதிச்சுற்றில் மேடையில் தோன்றியபோது சில்வர் மற்றும் நீல நிறத்திலான கவுனை அணிந்திருந்த துன்ஷியை கேமராக்கள் விடாமல் க்ளிக்கின. இந்திய மதிப்பில் சுமார் 85 லட்சம் மதிப்புடைய வைரத்தால் செய்யப்பட்ட பிரத்யேக கிரீடத்தை அணிந்து தன்னம்பிக்கையுடன் காட்சியளித்த துன்ஷி, தான் அணிந்து கொண்ட கிரீடத்தைவிட பெண்களின் சுயமரியாதையை பளிச்சென மேடையேற்றிய அவரின் நம்பிக்கை விலை உயர்ந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை? (அவ்வப்போது கிளாமர்)
Next post உட்லாண்ட்ஸ் டிரைவ் இன்னில் எனக்கு நிறைய மலரும் நினைவுகள் இருக்கு!! (மகளிர் பக்கம்)