உங்களுக்கு ஆயுள் அதிகமாகணுமா?! (மருத்துவம்)

Read Time:2 Minute, 24 Second

ஹெல்த்

சரிவிகிதமான உணவுமுறை என்பதில் காய்கறி, பழங்கள் என்பது எத்தனை முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் பருப்பு வகைகளுக்கும் உண்டு. மருத்துவர்களும் இதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இதை நிரூபிக்கும் வகையில் சமீபத்திய ஆய்வு ஒன்று வெளியாகி இருக்கிறது.பாதாம், பிஸ்தா, அக்ரூட், முந்திரி, வேர்க்கடலை, பாக்கு(Betal Nuts), வாதுமை கொட்டை(Wal Nuts) ஆகிய பருப்பு வகைகளை உண்பதால் இளம் வயது மரணம், ரத்தகுழாய் சார்ந்த இதய நோய், பலவிதமான புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என கண்டறியப்பட்டு உள்ளது.

இதில் துல்லியமாகவும் குறிப்புகள் உண்டு. இதய நாள நோய் 21 சதவீதமும், நீரிழிவு நோய் 39 சதவீதமும், தொற்று மூலம் பரவுகிற நோய்கள் 75 சதவீதமும், சிறுநீரக பாதிப்புகள் 73 சதவீதமும், பக்கவாதம் 7 சதவீதமும், சுவாசக் கோளாறு தொடர்புடைய ஆஸ்துமா, வீசிங் ஆகிய நோய்கள் 52 சதவீதமும் குறைவதாகத் தெரிய வந்துள்ளது.

தனியா இருந்தா ஆப்பிள் சாப்பிடுங்க…

ஆப்பிள் என்றதும் நமக்கு உடனே An Apple a Day Keeps The Doctors Away என்ற ஆங்கில பழமொழிதான் உடனடியாக நினைவுக்கு வரும். ஆனால், இந்தப் பழமொழி உணர்த்துகிற பொருளையும் மீறி, பச்சை நிற ஆப்பிளுக்குப் பலவிதமான மருத்துவ குணங்கள் இருப்பதாக, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

மனரீதியான அடிப்படையில் தனிமையைக் கண்டு பலர் பயப்பட(Claustrophobia) செய்வார்கள். அந்த தனிமை பயத்தைப் போக்க, ஆப்பிள் உதவுகிறது. வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் கொண்ட ஆப்பிளின் மணம் மன அழுத்தத்தைக் குறைக்கவும் செய்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என் பாதை தனித்துவமானது!! (மகளிர் பக்கம்)
Next post சிறுநீரகம்: உடலின் கழிவுத் தொழிற்சாலை!! (மருத்துவம்)