ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் முதல் முறையாக தேர்தல்

Read Time:2 Minute, 12 Second

election-box2.gifஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் முதல்முறையாக தேர்தல் நடத்தப்படஇருக்கிறது. டிசம்பர் மாதம் தேர்தல் நடக்கிறது. வளைகுடாநாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் மன்னர்ஆட்சி நடந்து வருகிறது. இந்த நாட்டில் அரசியல் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக அங்கு முதன்முதலாக தேர்தல் நடக்கிறது.

பெடரல் நேஷனல் கவுன்சில் என்ற பெயரிலான பாராளுமன்றத்துக்கு வருகிற டிசம்பர் மாதம் தேர்தல் நடக்கிறது. வருகிற 16,18,20 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கிறது.

40 பேர் கொண்ட பாராளுமன்றம்

மொத்தம் 40 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் பாதிப்பேர் தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். மீதிப்பேரை மன்னர் நியமிப்பார். மொத்த மக்கள் தொகையில் 6 ஆயிரத்து 689பேர் மட்டும் ஓட்டுப்போடத்தகுதி பெற்றவர்கள். அவர்களில் 1189 பேர் பெண்கள். மொத்த வாக்காளர்களில் 18 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள். பெண்களும் இந்த தேர்தலில் போட்டியிட முடியும். எலக்ட்ரானிக் இயந்திரம் மூலமும் ஓட்டுப்போடமுடியும்.

இங்கிலாந்தில் வருகிற நவம்பர் மாதம் 25-ந் தேதி நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் ஓட்டு போட அந்த நாட்டு அரசு தடை விதித்து உள்ளது. இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு இதற்கு அனுமதி வழங்கி உள்ளது.வாக்காளர்களாக இருப்பவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அப்சலை தூக்கிலிட ஏற்பாடுகள் தொடங்கின
Next post ஆபாச வீடியோவில் நடிகை சொர்ணமால்யா!?