அலைபேசியில் அலையும் குரல்!! (அவ்வப்போது கிளாமர்)
அது கேட்கப்படுகிறது
நாம் கேட்கிறோம்
அத்தனை வன்மத்துடன்
அவ்வளவு பிடிவாதமாக
அப்படி ஓர் உடைந்த குரலில்
யாரும் அதற்கு பதிலளிக்க
விரும்பாதபோதும் – மனுஷ்யபுத்திரன்
திவ்யஸ்ரீ சில நாட்களாக வெளியில் சொல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாள். அவளது அலைபேசிக்கு தெரியாத எண்ணில் இருந்து போன் அடிக்கடி வந்தது. எடுத்து ‘ஹலோ’ சொன்னால் எதிர்முனையில் யாரும் பேசுவதில்லை. பெருமூச்சு விடும் சத்தம் மட்டும் கேட்கும். அந்த தொல்லை தாங்க முடியாமல் அலைபேசியை ஆப் செய்துவிட்டாள். அவள் வேலை செய்யும் தனியார் ஹெல்ப் லைனுக்கே இதே விதமான அழைப்பு வர ஆரம்பித்தன.
யாரோ ஓர் ஆண் செய்யும் சில்மிஷ வேலைதான் என்பது மட்டும் திவ்யஸ்ரீக்கு புரிந்தது. அவளுடைய மேலதிகாரிக்கு இந்தப் பிரச்னையை வேறுவழியின்றி சொன்னாள். அவர் எவ்வளவு சமாதானம் சொல்லியும் கேட்காமல் வேலையை விட்டு நின்று கொள்வதாக தெரிவித்தாள். இப்படி பெண்களுக்கு போன் செய்து தொல்லை தருபவர்கள் யார்? எந்த நோக்கத்துக்காக செய்கிறார்கள்? பெண்களுக்கு போன் செய்து பேசி, அதன் மூலம் தனது செக்ஸ் ஆர்வத்தை பூர்த்தி செய்து கொள்பவர்கள்தான் இக்காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.
இவர்களை Phone Sex Abusers என அழைப்போம். உலகில் அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் ஒரு சாதனம் போன். தகவல்தொடர்பு முதல் பொழுதுபோக்கு வரை ஏதேனும் ஒரு தேவைக்காக போனை பயன்படுத்தி வருகிறார்கள். இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 10 லட்சம் பேர் போனை தவறான விஷயங்களுக்கு தான் பயன்படுத்துகிறார்கள் என்கிறது ஒரு சர்வே. பொதுவாக ஆண்கள்தான் இத்தகைய வேலைகளில் ஈடுபடுகிறார்கள். பெண்கள்தான் இந்தப் பிரச்னையில் அதிகமாக பாதிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள்.
ஒரு வகை கிக், திரில்லுக்காக இம்மாதிரி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அதிகம். வெறுமனே பெண்களின் குரலைக் கேட்பதன் மூலம் செக்ஸ் உணர்ச்சிகளை அடைபவர்களும் இருக்கிறார்கள். இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே சுய இன்பத்தில் ஈடுபடு
பவர்களும் உண்டு. சிலர் ‘உன்னை விரைவில் மீட் பண்ணுவேன்’ என்றெல்லாம் பேசுவார்கள். ஆனால், நேரில் வர மாட்டார்கள். சிலர் மார்பு, உதடு போன்ற அங்கங்களை வர்ணித்து பேசுவார்கள்.
ரேப் செய்யப்போவதாகக் கூட மிரட்டுவார்கள். பெண்களிடம் தனது அந்தரங்க உறுப்புகளை காட்டுவதில் கிடைக்கும் சந்தோஷம் இவர்களுக்கு இப்படி போன் கால் செய்வதில் கிடைக்கிறதாம். இதனால் இவர்கள் ஒருவித கிளர்ச்சி மனநிலையை அடைகிறார்கள். தங்களுக்கு ஓர் அதிகாரம் இருப்பதாக செயற்கையாக நினைக்கிறார்கள். இவர்கள் Coward எனப்படும் கோமாளி வகையைச் சேர்ந்தவர்கள். நேரில் பேச தைரியம் இல்லாமல்தான் போனில் பேசிக்கொண்டு அலைகிறார்கள். இவர்களை கண்டு பயப்படாமல் எதிர் கொண்டாலே ஓடிவிடுவார்கள்.
இப்படி ஒரு பெண்ணிடம் போனில் ஆபாசமாக பேசுவதை Symbolic Rape எனவும் அழைப்பார்கள். தொண்டு நிறுவனங்களில் தகவல்கள் சொல்வதற்காக வேலை செய்யும், டெலிபோன் ஹெல்ப்லைனில் வேலை பார்க்கும் பெண்கள்தான் இப்பிரச்னையில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பிடிக்காத பெண்களை டார்ச்சர் செய்யக்கூட இப்படி போனில் பேசுபவர்களும் உண்டு. அந்நியர் போன் செய்தால், தொடர்ந்து அவர்களிடம் பேசக்கூடாது.
சந்தேகம் வந்தால் போனை கட் செய்து அந்த நபர் மீது கஸ்டமர் கேரில் புகார் கொடுங்கள். ஹெல்ப்லைனில் வேலை செய்யும் பெண்களுக்கு இத்தகைய கால்கள் வந்தால் அதை மேலதிகாரிக்கு டிரான்ஸ்ஃபர் செய்துவிட்டு முறையாக புகாரையும் பதிவு செய்யுங்கள். டெலிபோன் பயன்படுத்துபவர்கள் காலர் ஐடியை போனில் இணையுங்கள். இதன் மூலம் கால் செய்யும் நபரின் முகவரியை எளிதாக கண்டுபிடித்து விடலாம். நம்பரையும் நபரையும் கண்டறிந்து போலீசில் புகார் செய்தால் அவர்கள் தகுந்த நடவடிக்கையை எடுப்பார்கள்.
Average Rating