சிறுநீரக கற்களை கரைக்கும் கற்பூரவல்லி !! (மருத்துவம்)

Read Time:4 Minute, 19 Second

அழகுக்காக வளர்க்கப்படும் செடி கற்பூரவல்லி. நறுமணத்தை தரக்கூடிய இதற்கு ஓமவல்லி என்ற பெயரும் உண்டு. தொட்டால் மணம் தரக்கூடியது. சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டது. சளியை கரைத்து வெளிதள்ள கூடியது. உள் உறுப்புகளை தூண்ட கூடியது. காக்கா வலிப்புக்கு மருந்தாகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. ஒரு கிளையை மட்டும் எடுத்து தொட்டியில் நட்டு வைத்தால் அது நன்றாக வளரும்.

கற்பூரவல்லியை பயன்படுத்தி சைனஸ், நெஞ்சக சளியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். கற்பூரவல்லி இலை சாறு எடுத்துக்கொள்ளவும். பெரியவர்கள் என்றால் 2 ஸ்பூன், குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவர சளி குணமாகும். குழந்தைகளுக்கு மாந்தத்தை போக்கும். இருமல் இல்லாமல் போகும். பசியை தூண்ட கூடியது. மூக்கடைப்பு, தலைவலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், அரை ஸ்பூன் கற்பூரவல்லி இலை பசை, சிறிது சர்க்கரை சேர்த்து லேசாக சூடு செய்தபின் மூக்கு, நெற்றியில் பத்தாக போடும் போது மூக்கடைப்பு, தலைவலி சரியாகும். தலைபாரம், சைனஸ் குணமாகும். இதயம், உணவுப்பாதை, சிறுநீரக பாதைக்கு பலம் கொடுக்கும். அக்கி, அம்மை கொப்புளங்களுக்கான மருந்து தயாரிக்கலாம். கற்பூரவல்லி இலை சாறு அல்லது பசையை கொப்புளங்களுக்கு மேல் பூசினால் அவைகள் சரியாகும்.

கற்பூரவல்லி இலையை பயன்படுத்தி வெள்ளைபோக்கு, சிறுநீரக கற்களை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒருவேளைக்கான தேனீர் தயாரிக்க 3 இலைகளை எடுத்து துண்டுகளாக்கி போடவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தனியா, சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சிறுநீர் பையில் தங்கியிருக்கும் கற்களை கரைத்து வெளித்தள்ளும்.

வெள்ளைப்படுதல் சரியாகும். கற்பூரவல்லியை பயன்படுத்தி குளிர் காய்ச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். 3 கற்பூரவல்லி இலைகள், அரை ஸ்பூன் சீரகத்துடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி காலை, மாலை குடித்துவர குளிர் காய்ச்சல், மலேரியா காய்ச்சல் குணமாகும். கல்லீரல், மண்ணீரல் பலப்படுவதுடன் அவைகளின் செயல்பாடுகள் சீராகும். கற்பூரவல்லி வீட்டில் இருக்க வேண்டிய உன்னதமான மூலிகை.

இதன் மணம் கொசுக்கள், பூச்சிகளை விரட்ட கூடியது. கடலை மாவுடன் கற்பூரவல்லியை பஜ்ஜியாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கும்போது இருமல், சளி, காய்ச்சல் குணமாகும்.கற்பூரவல்லி செரிமானத்தை தூண்டக் கூடியது. வலியை குறைக்கும். புண்களை ஆற்றும். மருக்களை கரைக்கும் தன்மை கொண்டது. ஆண்கள் ஓரிரு இலைகளை சாப்பிடுவதால் கற்கள் கரைந்து போகும். கற்பூரவல்லி சாற்றை மேலே பூசுவதால் அக்கி கொப்புளங்கள் வற்றும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபலங்களின் அண்ணன் மற்றும் தம்பி!! (வீடியோ)
Next post சிறுநீரகத்தை சுத்தம் செய்ய என்ன உணவை சாப்பிடலாம்!! (மருத்துவம்)