சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் செம்மந்தாரை!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 8 Second

செம்மந்தாரை சாலை ஓரங்களில் காணப்படும். அழகிய இப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சர்க்கரை நோய், இதய நோய், இருமல், ரத்தப்போக்கு ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. செம்மந்தாரை இலைகள் ஈரலுக்கு மருந்தாகி பயன் தருகிறது. இருமலை போக்குகிறது. உடல் வலியை தீர்க்கிறது. மரப்பட்டைகளும் பயனுள்ளதாகிறது. இது, சிவப்பு மந்தாரை என்றும் அழைக்கப்படுகிறது. செம்மந்தாரை பூக்களை பயன்படுத்தி இருமலை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: செம்மந்தாரை பூக்கள், திப்பிலி, இஞ்சி, தேன். செம்மந்தாரை பூக்களை அரைத்து அரை ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் 2 திப்பிலி, சிறிய துண்டு இஞ்சி சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குடிப்பதால் இருமல், சளி சரியாகிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. செம்மந்தாரை நோய் நீக்கும் தன்மையை கொண்டது. ஒவ்வாமையை சரிசெய்கிறது.

சளியை கரைத்து இருமலை நிறுத்த கூடியது. செம்மந்தாரை பூக்களை பயன்படுத்தி மூலம், ரத்த மூலம், அதிக அளவிலான ரத்தபோக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். பூக்களை நீர்விடாமல் அரைத்து ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து சாப்பிடும்போது மூலத்தினால் ஏற்படும் கடுப்பு, மாதவிலக்கு சமயத்தில் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.

செம்மந்தாரை ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டதால், ஆசனவாயில் ரத்தம் வெளியாவதை தடுக்கிறது. செம்மந்தாரை இலைகளை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்து தயாரிக்கலாம். காம்புகளை நீக்கிவிட்டு இலைகளை எடுத்து துண்டுகளாக்கி, அதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். ரத்தம் சுத்தமாகும்.

சர்க்கரை நோய்க்கு அற்புதமான மருந்தாக இதன் இலைகள் விளங்குகின்றன. மேலும், கட்டிகளை கரைக்க கூடியது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். புற்றுநோயை குணப்படுத்த கூடியது. செம்மந்தாரை பட்டையை பயன்படுத்தி கழுத்தில் ஏற்படும் வீக்கம், எவ்வித கட்டிகளையும் கரைக்கும் மருந்து தயாரிக்கலாம். செம்மந்தாரை மரப்பட்டை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அரை ஸ்பூன் செம்மந்தாரை பொடியுடன், 5 மிளகு தட்டி போடவும்.

ஒரு டம்ளர் நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி 50 முதல் 100 மில்லி வரை எடுத்துக்கொண்டால் சுரப்பிகளில் ஏற்படும் வீக்கம் கரையும். செம்மந்தாரை மரப்பட்டை வீக்கத்தை கரைக்கும் தன்மை கொண்டது. வலியை தணிக்க கூடியது. நீர் கட்டி, சதை கட்டி உள்ளிட்ட அனைத்து கட்டிகளையும் கரைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “உலகம் முழுவதும் படைகளை குவித்துள்ள அமெரிக்கா!! (வீடியோ)
Next post சிறுநீர் பாதையில் நோய் தொற்றை தவிர்ப்பது எப்படி? (மருத்துவம்)