சிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 19 Second

கணையத்தில் ஏற்படும் அழற்சி மற்றும் தொற்று காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படும். சிறுநீர் பையில் ஏற்படும் கற்கள், வீக்கம், கட்டிகளாலும் உடல் உபாதைகள் உண்டாகும். திராட்சை, செம்பருத்தி ஆகியவற்றை கொண்டு இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்.

திராட்சை பழத்தை கொண்டு சிறுநீர் பையில் ஏற்படும் அழற்சி, கட்டிகளை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: திராட்சை பழம், வேப்பங்கொழுந்து, பனங்கற்கண்டு. ஒரு பாத்திரத்தில் 10 திராட்சை பழங்களை போடவும். இதை லேசாக நசுக்கவும். இதனுடன் சிறிது வேப்பங்கொழுந்து, பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி எடுக்கவும்.

இந்த தேனீரை காலை, மாலை வேளைகளில் 50 முதல் 100 மில்லி வரை குடித்துவர கல்லீரல், மண்ணீரல், கணையம், சிறுநீர் பை ஆகியவற்றில் ஏற்படும் கட்டிகள் கரையும். வலி விலகிப் போகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.பன்னீர், பச்சை என அனைத்து வகை திராட்சைகளையும் பயன்படுத்தி தேனீர் தயாரிக்கலாம். திராட்சை நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. வேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.

செம்பருத்தியை பயன்படுத்தி சிறுநீர் பை, கணையத்தில் ஏற்படும் அழற்சி மற்றும் தொற்று பிரச்னைகளை தீர்க்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: செம்பருத்தி பூ, பனங்கற்கண்டு. ஒரு பாத்திரத்தில் செம்பருத்தி பூவின் இதழ்களை போடவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சிறுநீர் பையில் ஏற்படும் அழற்சி, தொற்று குணமாகும்.

கணையத்தில் உண்டாகும் கட்டிகள் கரையும். சிறுநீர் பையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். செம்பருத்தி இதயத்தை பலப்படுத்துகிறது. காயவைத்த செம்பருத்தி பூ நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை பயன்படுத்தியும் தேனீர் தயாரிக்கலாம். செம்பருத்தி பூக்களின் இதழ்களை சாப்பிட்டுவர பல்வேறு நன்மைகள் உண்டாகும். செம்பருத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. புற்றுநோயை உருவாக்கும் நச்சுக்களை செம்பருத்தி வெளியேற்றும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாறுகள்!! (மருத்துவம்)
Next post இதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…! (அவ்வப்போது கிளாமர்)