கல்லீரலை பலப்படுத்தும் பீர்க்கன்காய்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 0 Second

மஞ்சள் காமாலை வராமல் தடுக்க கூடியதும், உடலுக்கு குளிர்ச்சி தரவல்லதும், இளநரையை போக்க கூடியதும், அல்சரை குணப்படுத்த கூடியதுமான பீர்க்கன்காயின் மருத்துவ குணங்களை நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். கோடைகாலத்தில் எளிதாக கிடைக்க கூடியது பீர்க்கன்காய். பல்வேறு நன்மைகளை கொண்ட இது, உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. மேல்பூச்சு மருந்தாகவும் பயன்படுகிறது. நச்சுக்களை வெளியேற்றுவதுடன், கல்லீரலுக்கு பலத்தை கொடுக்கிறது. பீர்க்கன்காயில் நீர்ச்சத்து உள்ளது.

இதை பயன்படுத்தி மஞ்சள் காமாலைக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பீர்க்கன்காய், சீரகம். தோல் சீவிய பீர்க்கன்காய் துண்டுகள் 50 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் வீட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர கல்லீரல் பலப்படும். இது மஞ்சள் காமலை வராமல் தடுக்கிறது. ஈரல் வீக்கத்தை சரிசெய்கிறது. பித்தத்தை குறைப்பதுடன் உடல் சூட்டை தணிக்கிறது. பீர்க்கன்காயை தோலுடன் பசையாக அரைத்து தலையில் பூசி சுமார் 10 நிமிடங்கள் வரை ஊறவைத்து குளித்தால் இளநரை சரியாகும்.

பீர்க்கன்காயை பயன்படுத்தி அல்சரை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். வேகவைத்த பீர்க்கன்காய் துண்டுகளுடன் தேவையான அளவு உப்பு, புளிப்பில்லாத தயிர் சேர்த்து கலக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், வரமிளகாய் துண்டு, சிறிது உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். இதை பீர்க்கன்காயுடன் சேர்த்து சாப்பிட்டுவர அல்சர் குணமாகும். கோடைகாலத்தில் ஏற்படும் நீர் இழப்பை சரிசெய்யும். வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கும். வயிற்று எரிச்சல், வலி போகும். உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும். உடலுக்கு ஆரோக்கியம், பலம் தருகிறது.

பீர்க்கன்காய் தோலில் மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்குகிறது. செரிமானத்தை தூண்டுகிறது. பீர்க்கன்காய் தோலை பயன்படுத்தி துவையல் தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடுடவும். எண்ணெய் சூடானதும் உளுந்தம் பருப்பு, சீரகம், பூண்டு, வரமிளக்காய், வெங்காயம், சிறிதளவு புளி, பீர்க்கன்காய் தோல், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பீர்க்கன்காய் தோலின் நிறம் மாறும்போது எடுத்து ஆறவைத்து அரைத்து எடுக்கவும். இதை தாளித்து மதிய உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால், மலச்சிக்கல் பிரச்னை சரியாகிறது. பீர்க்கன்காய் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டதால் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த உலகின் மிகவும் ஆபத்தான 10 பூச்சிகள்!! (வீடியோ)
Next post ஆண்களை பின்பக்கமாக கட்டி அணைத்தபடி படுத்துறங்க பெண்கள் விரும்புகின்றனராம்!! (அவ்வப்போது கிளாமர்)