புத்தாண்டு மது விற்பனை 300 கோடி? (உலக செய்தி)

Read Time:3 Minute, 9 Second

புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மது விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று புத்தாண்டு கொண்டாடும் நிலையில் நேற்று மாலையில் இருந்தே சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு பீர், விஸ்கி, பிராந்தி, வோட்கா, ரம் உள்ளிட்ட பல்வேறு மது வகைகளை பாட்டில் பாட்டிலாக வாங்கிச்சென்றனர்.

மாலையில் இருந்து இரவு வரையிலும் மதுக்கடைகளில் கட்டுக்கு அடங்காத கூட்டம் காணப்பட்டது.

இதற்கு இடையே ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளது. அன்றைய தினம் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட உள்ளன. இதன் காரணமாக குடிமகன்கள் முன்கூட்டியே மதுபானங்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்வார்கள்.

இதனால் மதுக்கடைகளில் இன்றும் மதுபிரியர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே போதுமான அளவு மது வகைகளை இருப்பு வைக்குமாறு சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

விடுமுறை தினம் மாறி, மாறி வந்ததால் போதுமான அளவு மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு சேர்ப்பதில் சிரமம் ஏற்பட்டதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.

புத்தாண்டு கொண்டாட்ட மது விற்பனை எதிர்பார்ப்பு குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: வழக்கமாக டிசம்பர் 31 ஆம் திகதி மற்றும் ஜனவரி 1 ஆம் திகதி ஆகிய 2 நாட்களில் 150 கோடி முதல் 200 கோடி வரையிலும் மதுபானங்கள் விற்பனையாகும். இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 2 ஆம் திகதி (நாளை) எண்ணப்படுகிறது. அன்றைய தினம் விடுமுறை என்பதால் மதுபானங்களை முன்கூட்டியே வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இதனால் இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி மற்றும் ஜனவரி 1 ஆம் திகதி ஆகிய 2 தினங்களில் மட்டும் 250 கோடி முதல் 300 கோடி வரையிலும் மதுபானங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் இலக்கு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெட்டல் டிடெக்டர் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட 7 வினோதமான பொருட்கள்..! (வீடியோ)
Next post 20 ஆண்டுகளாக பதவியில் நீடிக்கும் புதின் !! (உலக செய்தி)