மைக்கேல் ஜாக்சன் உருவத்தில் வாலிபர்! (சினிமா செய்தி)
பாப் உலக மன்னன் மைக்கேல் ஜாக்சன். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் இறந்தார்.
இந்த நிலையில் அர்ஜென்டினாவின் பார்சிலோனாவில் பிறந்தவரும், தற்போது பாப் உலகில் வளர்ந்து வரும் கலைஞரான செர்ஜியோ கோர்டெஸ், மறைந்த மைக்கேல் ஜாக்சனின் உருவத்துடன் அச்சு அசலாக உள்ளார்.
உலகம் முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மைக்கேல் ஜாக்சனின் பாடல்களுக்கு நடனம் ஆடி வருகிறார். மைக்கேல் ஜாக்சனின் தோற்றத்துடன் இருக்கும் செர்ஜியோ கோர்டெஸ் தற்போது புகழ்பெற்று வருகிறார்.
சமீபத்தில் செர்ஜியோ கோர்டெஸ் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதில் அவர், அனைத்து மைக்கேல் ஜாக்சன் ரசிகர்களுக்கும் வணக்கம். நான் உங்களை நேசிக்கிறேன். எனது இசை நிகழ்ச்சியை பாருங்கள் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் செர்ஜியோ கோர்டெஸ் தான், உண்மையான மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்கள் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். மைக்கேல் ஜாக்சன் மறைந்து வாழ்வதற்காக தான் இறந்துவிட்டதாக நாடகம் ஆடுகிறார் என்றும் செர்ஜியோ கோர்டெஸ் தான் மைக்கேல் ஜாக்சன் இல்லை என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதுபற்றி செர்ஜியோ கோர்டெஸ் கூறும்போது, என்னை பார்த்த ஒரு பத்திரிகையாளர், நான் மைக்கேல் ஜாக்சன் தோற்றத்தில் இருப்பதாக கூறினார். என்னை மைக்கேல் ஜாக்சன் போன்று மேக்கப்அப் போட்டு அவரது பத்திரிக்கையில் வெளியிட விரும்பினார்.
நான் அதை வேடிக்கையாக செய்தேன். பின்னர் அவர் என்னை சில சுவிஸ் தயாரிப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் எனது புகைப்படத்தை வாசனை திரவிய விற்பனைக்கு பயன்படுத்த விரும்பினர். இது எல்லாம் எனது அன்றாட வாழ்க்கையில் தற்செயலாக நடந்தது என்றார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating