மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் கோலங்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 33 Second

வாசகர் பகுதி

மார்கழி மாதம் என்றாலே காலையில் வீட்டு வாசலில் வண்ணக்கோலங்களை நாம் காணமுடியும். புள்ளிக் கோலங்கள், கலர் கோலங்கள் என பல கோலங்கள் இருந்தாலும் அதை போடுவதற்கு முன் என்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

* எப்போதும் வாசலை தண்ணீரால் கழுவிய பிறகு தான் கோலம் போடணும். மண் தரை என்றால் முதலில் பெருக்கி பிறகு நீர் தெளித்து கோலம் போடலாம்.

* சிமென்ட் தரையாக இருந்தால், கோலத்தை சுற்றி செம்மண் அல்லது காவி கரை கட்டினால் பளிச்சென்று இருக்கும்.

* வாசலில் வண்ணக் கோலங்கள் போடும்போது சலித்த மணலுடன், வண்ணப் பொடியுடன் கலந்து போட வேண்டும்.

* மாக்கோலம் போடும்போது பச்சரிசி மாவோடு மைதா மாவு அல்லது சிறிது ஒயிட் கம் கலந்து விட்டால் கோலம் பல நாட்கள் ஒளி வீசும்.

* கோலப்பொடி வாங்கும்போது வெளுப்பு அதிகமுள்ள பொடியை வாங்க வேண்டும் அல்லது கோலப்பொடியுடன் பச்சரிசி மாவைக் கலந்து கொள்ளலாம்.

* நீர் மேல் கோலமிடும்போது வண்ணப்பொடியுடன் மணல், அரிசி மாவு சேர்க்காமல் தூவவும்.

* புள்ளியில்லாமல் கோலம் போடும்போது முதலில் ஒரு புள்ளியை மையமாக வைத்து அதைச்சுற்றி கோலத்தை விரிவாக்க வேண்டும்.

* ஈரத்தரையில் கோலப்பொடியால் கோலம் போடும்போது காய்ந்த பின்பும், மாக்கோலமானால் ஈரம் காயும் முன்பு செம்மண் பூச வேண்டும்.

* அபார்ட்மென்ட்டில் வசிப்பவர்கள் தங்களது வீட்டின் முன் செம்மண்ணால் மெழுகி விட்டு அதன்மேல் கோலமிட்டால் பளிச்சென்று தெரியும்.

* பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷ தினங்களில் இழை கோலம் போடும் மாவில் சில துளிகள் சென்ட் சேர்த்தால் வீடே மணக்கும்.

* பெயிண்ட் கோலம் போடும்போது ஒரு கலர் காய்ந்த பின் அடுத்த கலரைத்தீட்ட வேண்டும்.

* அரிசி கோல மாவு தயாரிக்கும்போது அதனுடன் வடித்த கெட்டியான கஞ்சியை சேர்த்துக்கொண்டால் இழுக்கும் பக்கமெல்லாம் கோலம் அழகாக வரும். காய்ந்தவுடன் பளிச்சென்று இருக்கும்.

* கலர் கோலம் போடும்போது வௌிர் நிறத்தின் மேல் சிறிது ஜிகினாத்துகள்களை தூவி விட்டால் எடுப்பாகத் தெரியும்.

* ரங்கோலி கோலம் நீண்ட நேரம் அழியாமல் இருக்க மைதா மாவை பசை போல நீர்க்க காய்ச்சி லேசாகத் தடவி விட்டு கோலம் போட்டால் அழியாது.

* கோலம் போடுவது மனதிற்கு மகிழ்ச்சி. பெண்களின் இடுப்பிற்கு குனிவதால் பலம் தரும் பயிற்சி!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாம்புகள் கொட்டி கிடக்கும் மர்ம தீவு! (வீடியோ)
Next post இதய கோளாறுகளை தவிர்க்கும் பூசணி விதை!! (மருத்துவம்)