அருங்குணங்கள் கொண்ட ஆலிவ் எண்ணெய்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 24 Second

‘‘ஆலிவ் எண்ணெய் என்பது மற்ற தாவர எண்ணெய்களைப் போல் விதையிலிருந்தோ அல்லது கொட்டையிலிருந்தோ எடுக்கப்படுவதில்லை. முற்றிலும் பழத்திலிருந்து எடுக்கப்படும் ஒரு முக்கியமான தாவர எண்ணெய் ஆகும். பல்வேறு மருத்துவ குணம்கொண்ட இந்த ஆலிவ் எண்ணெயில் பல போலிகளும் புழங்குகின்றன. எனவே, தரமான எண்ணெயைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கும் முழுமையான மருத்துவப்பலன்கள் கிடைக்கும்’’ என்கிறார் Bilginoglu என்ற ஆலிவ் எண்ணெய் நிறுவனத்தின் உரிமையாளரான முரளி.

‘‘ஆலிவ் எண்ணெயானது ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ் மற்றும் துருக்கி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த எண்ணெய் குளிர்காலங்களில் குழந்தைகளின் சருமத்தை மென்மையாக்குவதுடன் சரும நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதனால் குழந்தைகளின் சருமம் பளபளப்பாகவும் ஆரோக்கியத்துடனும் திகழ ஆலிவ் எண்ணெய் வழி வகுக்கிறது. மேலும் உடல் முழுவதும் ஆலிவ் எண்ணெயினைத் தடவுவதால் குழந்தைகள் நன்கு வளர்ச்சியையும், ஊட்டத்தையும் பெறுகின்றனர்.

இத்துடன் எலும்பு மற்றும் தசைகளுக்கு உறுதியையும் எடை ஏற்றத்தையும் சீரான ரத்த ஓட்டத்தையும் குழந்தைகள் பெறுகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு டயாபர் போடுவதால் ஏற்படும் புண்ணிலிருந்தும் குழந்தைகளைப் பாதுகாக்கிறது. அருங்குணம் கொண்ட இந்த ஆலிவ் எண்ணெயானது குழந்தைகளுக்குக் கிடைத்த இயற்கைப் பரிசு என்றால் அது மிகையில்லை. அதேபோல் பெரியவர்களுக்கு குளிர் காலத்தில் மூட்டுவலி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதற்கும் ஆலிவ் எண்ணெய் சிறந்த மருந்து.

ஆலிவ் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடு பண்ணி தேய்க்கும்போது வலி நிவாரணியாக செயல்பட்டு மூட்டு வலியைப் போக்குகிறது. ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்த விரும்புகிறவர்கள் அதனை கவனமுடன் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில், மார்க்கெட்டில் ஆலிவ் எண்ணெய் என்ற பெயரில் இரண்டு அல்லது மூன்று எண்ணெய்களை கலப்படம் செய்து விற்பனை செய்து வருகின்றனர். சிவப்பு நிற டின்களில் விற்கப்படும் எங்களுடைய Bilginoglu oil, உணவுக்கட்டுப்பாடு துறையின்(FSSAI) முறையான அனுமதி பெற்றே இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகிறது!”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாஸ்து பிரச்சினையையும் தீர்க்க இந்த விஷயத்தை பண்ணுனா போதும்…! (வீடியோ)
Next post புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு – 6 பேர் பலி!! (உலக செய்தி)