மாயவித்தை செய்யும் வெந்தயம்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 29 Second

பொதுவாக எல்லாருடைய அஞ்சறை பெட்டியிலும் வெந்தயம் இல்லாமல் இருக்காது. இது மசாலா பொருள் மட்டுமல்ல, மூலிகையும் கூட. மேலும் இது மிகவும் பழமையான மருத்துவ செடி என்றும் கூறலாம். வெந்தயம் என்ற மூலிகை நம் உடலுக்கு மட்டுமல்ல நம் அழகிற்கும் பல விதமான மாயவித்தைகளை செய்யக்கூடியது. அது என்ன என்று பார்க்கலாம்…

* வெந்தயத்தில் உள்ள புரதம் மற்றும் நிக்கோடினிக் முடி உதிர்வதை தடுப்பதும் மட்டுமில்லாமல் பொடுகு பிரச்னையில் இருந்து பாதுகாக்கிறது. இதில் உள்ள லெசிதின் முடி வறண்டு போகாமல் இருக்கவும், பளபளப்பாகவும் மற்றும் முடியின் வேர் பகுதியை வலுவாக வைத்துக் கொள்ள உதவும்.

* வெந்தயத்தை இரவே ஊறவைக்கவும். மறுநாள் அதை மிக்சியில் மைய அரைத்துக் கொள்ளவும். இதனை தலைமண்டையில் தடவி பிறகு குளித்தால் தலைமுடி உதிர்வதை கட்டுப்படுத்தி முடி வலுவாக இருக்க உதவும்.

* வெந்தயத்தை தயிரில் ஊறவைத்து அரைத்து தலையில் தடவினால் பொடுகு பிரச்னை இருக்காது. முடியும் பளபளப்பாக இருக்கும்.

* மருதாணியை தலையில் தடவும் முன் அதனுடன் சிறிதளவு வெந்தய பவுடரை சேர்த்து கலந்த தடவினால் முடி வறண்டு போகாமல் பாதுகாக்கும்.

* வெந்தயத்தை ஊற வைத்த தண்ணீரைக் கொண்டு தலைமுடி அலசினாலும் முடி பளபளப்பாகும்.

* வெந்தயத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால், அது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் வல்லமை கொண்டது. மேலும் இருதய பிரச்னை, மூட்டு வலி மற்றும் உடல் பருமன் போன்றவற்றுக்கு நல்ல மருந்து. இதனை தினமும் ஊறவைத்து சாப்பிடலாம். அல்லது அப்படியே தண்ணீர் கொண்டு முழுங்கலாம்.

* நீரிழிவு பிரச்னை உள்ளவர்களின் டயட்டில் ஏதாவது ஒரு வகையில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்வது அவசியம். இதனை பொடித்து மோருடன் கலந்து சாப்பிடலாம். பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்ைன உள்ள பெண்களும் இதனை சாப்பிட்டு வந்தால் பிரச்னை நீங்கும்.

* வெந்தயக்கீரையை சமைத்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்லது. கீரையில் போலிக் அமிலம், விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் கே, பொட்டாசியம், கால்சியம், இரும்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

* வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கும் கெட்ட கொழுப்பு நீக்கும். மேலும் கொழுப்பு நிறைந்துள்ள உணவில் இருக்கும் டிரைகிளரசைட் என்ற கொழுப்பினை ரத்தத்தில் சேர்க்காமல் பாதுகாக்கும்.

* இதில் உள்ள அமினோ அமிலம், உடலில் இன்சுலின் சுரப்பதை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டோடு வைத்துக் கொள்ள உதவும்.

* நார்சத்து அதிகம் இருப்பதால், உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்னை ஏற்படாமல்
பாதுகாக்கும்.

* அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுவலிக்கு வெந்தய கஷாயம் மிகவும் நல்லது. வெந்தய பவுடரை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி காலை வெறும் வயிற்றில் குடித்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும்.உணவில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காலத்தின் கட்டாயம் !! (கட்டுரை)
Next post ரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை! (சினிமா செய்தி)