சுவிஸ் புலிகளின் “தூஷணப் போராட்டத்துக்கு” எதிரான வழக்கின் தீர்ப்பு: சொல்வது என்ன?.. (படங்கள் & வீடியோ)

Read Time:9 Minute, 32 Second

ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை நடாத்தி வந்த முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, கடந்த வருடம் பத்தாம் மாதம் சுவிஸ்லாந்து நாட்டுக்கும் விஜயம் செய்தார். சுவிஸில் கடந்த 11.10.2018 அன்று நடைபெற்ற, வடமாகாண முன்னாள் ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே, மற்றும் அவரது செயலாளரும், இலங்கையின் மூத்த சிவில்சேவை அதிகாரிகளில் ஒருவரும், புங்குடுதீவு மண்ணின் மைந்தருமான திரு.இலட்சுமணன் இளங்கோவன், டான் டிவி நிறுவனர் திரு.குகநாதன் ஆகியோருடனான, “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலைக் குழப்பும் நோக்கில், மண்டபத்துக்கு முன்பாக “சுவிஸ் புலிகள்” எனும் “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் (ரி.சி.சி)” ஆர்ப்பாட்டம் எனும் பெயரில், மிகக் கேவலமான முறையில் “தூஷணப் போராட்டம்” நடைபெற்றது அனைவரும் அறிந்ததே.

இதன் எதிரொலியாக “தனதும், தனது குடும்பத்தின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவித்ததுடன், தன்மீது கொலை செய்யும் நோக்கில் தாக்குதல் முயற்சி மேற்கொள்ள முயற்சித்தமை, முகநூல்களில் தன்னையும், தான் சார்ந்த அமைப்பையும் மிரட்டும் வகையில் பதிவுகள் இட்டமை, தன்னைக் குறித்து “உண்மைக்கு புறம்பான” செய்திகளை வாட்சப் போன்ற சமூகவலைத் தளங்களில் பகிர்ந்தமை” ஆகிய குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு,…

இலங்கையில் இணுவிலை சேர்ந்தவரும், “சுவிஸ் புலிகளின்” நிதி பொறுப்பாளரான “குட்டி” எனும் திரு.நாகராஜா மகாராஜா, இலங்கையில் குருநகரை சேர்ந்தவரும், “சுவிஸ் புலிகளின்” முன்னாள் கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளரும், தற்போதைய அரசியல் பொறுப்பாளருமான திரு.வளத்தீஷ் கொலம்பஸ், “சுவிஸ் புலிகளின்” மகளிர் அணிப் பொறுப்பாளரான சண்டிலிப்பாயை சேர்ந்த திருமதி.சசியின் கணவரும், இலங்கையில் இணுவிலை சேர்ந்தவருமான திரு.பிரபாகரன் ராஜதுரை, இலங்கையில் கோண்டாவில் வடக்கை சேர்ந்தவரும், “சுவிஸ் புலிகளின்” வீடியோப் படப் பிடிப்பாளரும், தகவல் வழங்குநருமாக செயற்படும் “வெடிமுத்து” அல்லது “யதி” எனும் திரு.கந்தவனம் தஜீபன், இலங்கையில் மட்டக்களப்பை சேர்ந்தவரும் (தாய் -மட்.கொத்தியாதுளை, தந்தை -மட்.அரசடித்தீவு) “சுவிஸ் புலிகளின்” அரசியல்துறை முக்கியஸ்தரான “தீபன்” அல்லது “தீபராஜ்” எனும் “தூஷண வித்தகரான” திரு.தில்லையம்பலம் தீபராஜ் ஆகியோர் மீது,..

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய தலைவரான “புலிக்குட்டி” அல்லது “சுவிஸ்ரஞ்சன்” எனும் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது, சுவிஸ் பேர்ண் விசாரணை நீதிமன்றில், சுவிஸ் விசாரணை நீதிபதி திரு.கம்யூஸியன் அவர்களின் முன்னிலையில் பலகட்ட விசாரணைகள் நடைபெற்று, தற்போது தீர்ப்பு வெளியாகி உள்ளது.

இதன்படி குற்றம் சாட்டப்பட்ட ஐவரும், “தூஷண (தகாத) வார்த்தைகளில் பேசியது உண்மை தான்” என்பது வீடியோ ஆதாரங்கள் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது. ஆயினும் இதுவோர் நேரடி மிரட்டலோ, அன்றில் கொலை முயற்சியோ இல்லையென்பதை அடிப்படையாகக் கொண்டு இவ்வழக்கை நிறுத்துவதாகவும், தேவையெனில் இவர்களின் குற்றங்களுக்கு எதிராக “சிவில் நீதிமன்றத்தில்” வழக்கு தாக்கல் செய்யலாம் எனவும், அதேவேளை மேற்படி ஐவருக்கு எதிரான இவ்வழக்கு ஒருவருட காலத்துக்கு “நன்னடத்தை நிலுவையில்” இருக்கும் எனவும், அதாவது இந்த ஒரு வருட காலத்துக்குள் இவர்கள் எந்தவொரு குற்றம் புரிந்தாலும், இந்த வழக்கும் இணைத்தே விசாரிக்கப்படும் எனவும்” தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இதேவேளை தன்னைக் குறித்து “உண்மைக்கு புறம்பான” செய்திகளை “வாட்சப்” போன்ற சமூகவலைத் தளங்களில் பகிர்ந்தது” எனும் குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் குருநகரை சேர்ந்தவரும், “சுவிஸ் புலிகளின்” முன்னாள் கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளரும், தற்போதைய அரசியல் பொறுப்பாளருமான திரு.வளத்தீஷ் கொலம்பஸ் அவர்களுக்கு எதிராக (இந்த வழக்குடன் இணைத்து) திரு.சுவிஸ்ரஞ்சன் தாக்கல் செய்த வழக்கில்,…

“சுவிஸ் புலிகளின்” அரசியல் பொறுப்பாளரான திரு.வளத்தீஷ் கொலம்பஸ் “குற்றவாளி” எனவும், இவர் நீதிமன்ற செலவான 800 சுவிஸ் பிராங்கை உடன் செலுத்த வேண்டுமெனவும், அத்துடன் இருபத்தைந்து நாள் சிறைத்தண்டனை அல்லது 1500 சுவிஸ் பிராங் பணத்தை மூன்று வருட காலத்துக்குள் அதாவது, “நன்னடத்தை நிலுவையில்” இருக்கும் எனவும், அதாவது இந்த மூன்று வருட காலத்துக்குள் இவர் எந்தவொரு குற்றம் புரிந்தாலும், இத்தண்டனை நிறைவேற்றப்படும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

மேற்படி தீர்ப்புக் குறித்து “சுவிஸ்ரஞ்சன்” எனும் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களிடம் “அதிரடி” இணையம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “இவ்வழக்கின் தீர்ப்பு முழுமையான திருப்தியை எனக்கு தராவிட்டாலும், “சுவிஸ் புலிகள்” ஆர்ப்பாட்டம் எனும் பெயரில், புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தையும், புலிக் கொடியையும் கைகளில் தாங்கிய வண்ணம் “தூஷணப் போராட்டம்” நடத்தியது உண்மை என்பதை நீதிமன்றம் மூலமே நிரூபித்து உள்ளதுடன், அதுக்குரிய தண்டனையையும், கட்டுப்பாடுகளையும் வழங்க வைத்து உள்ளேன்” என்பதோடு..,

என்னைக் குறித்து “உண்மைக்கு புறம்பான” செய்திகளை “வாட்சப்” போன்ற சமூகவலைத் தளங்களில் பகிர்ந்தது” எனும் குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு, சுவிஸ் புலிகளின் அரசியல் பொறுப்பாளரான திரு.வளத்தீஷ் கொலம்பஸ் “குற்றவாளி” எனவும், அதுக்குரிய தண்டனையும் வழங்கப்பட்டது, இது பலருக்கு “பாடமாக” அமையும். ஏனெனில் “வாட்ஸாப், முகநூல்” போன்ற சமூகவலைத் தளங்களில், ஒருவரைக் குறித்து உண்மைக்கு புறம்பாகவோ, தவறாகவோ எழுதுவதும் குற்றம், மற்றவர்கள் எழுதியதை “வந்ததை பகிர்ந்தோம்” எனப் பகிர்வதும், சுவிஸ் சட்டப்படி குற்றம்” என்பதை பலர் அறியாமல் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு இதுவோர் பாடமாக அமைந்துள்ளது”.

இதேவேளை இவ்வழக்கை மேன்முறையீடு செய்வது குறித்து, எனது சட்டத்தரணியிடம் ஆலோசித்தே முடிவெடுக்க உள்ளேன்” எனவும், இவர்களுடன் சம்பந்தப்பட்ட இன்னுமொருவருக்கு எதிரான வழக்கும் தற்போது விசாரணையில் உள்ளதினால், எதையும் சிந்தித்தே செயல்பட வேண்டுமெனவும்” திரு.சுவிஸ்ரஞ்சன் தெரிவித்தார்.
நன்றி… “அதிரடி” இணையம்..
https://www.facebook.com/askmediadannews/videos/283513175837767/

http://www.athirady.com/tamil-news/howisthis/1314255.html

http://www.athirady.com/tamil-news/howisthis/1210570.html

http://www.athirady.com/tamil-news/howisthis/1282446.html

http://www.athirady.com/tamil-news/howisthis/1209287.html

http://www.athirady.com/tamil-news/howisthis/1209292.html

http://www.athirady.com/tamil-news/howisthis/1209915.html

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நம்ப முடியாத நட்புகள்!! (வீடியோ)
Next post நல்ல சிந்தனைகளே வாழ வைக்கும் ! (கட்டுரை)