அம்பாந்தோட்டையின் ஆதிக்கத்தை சீனா விட்டுக்கொடுக்காது – கேர்ணல் ஹரிகரன் விசேட செவ்வி ! (கட்டுரை)

Read Time:23 Minute, 18 Second

அம்­பாந்­தோட்டை துறை­மு­க­மா­னது, கொழும்பு துறை­முக நகர அபி­வி­ருத்தி திட்­டத்­தினை விடவும் சீனாவின் பிராந்­திய பாது­காப்­புக்கும் வளர்ச்­சிக்கும் மிகவும் முக்­கி­ய­மா­னது. அத்­துடன் இத்­து­றை­மு­க­மா­னது இந்து சமுத்­தி­ரப்­பி­ராந்­தி­யத்தில் சீனாவின் கன­வுத்­திட்­டத்தின் ‘கரு’ ஆகும். ஆகவே அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் சீனா தனது ஆதிக்­கத்தை விட்டுக் கொடுக்கும் என எதிர்­பார்ப்­பது ஏமாற்­றத்­தி­லேயே முடியும் என்று இந்­திய இரா­ணு­வத்தின் ஓய்வு நிலை மூத்த அதி­கா­ரி­யான கேர்ணல் ஆர்.ஹரி­கரன் வீர­கே­சரிக்கு தொலை­பேசி மூலம் வழங்­கிய விசேட செவ்­வி­யின்­போது இவ்­வாறு தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­ வ­டிவம் வரு­மாறு,

கேள்வி:- இலங்கை ஜனா­தி­பதி கோத்­தா­ப­ய­வுக்கும், இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடிக்கும் இடையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­யின்­போது, முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்ட விட­யங்­களை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- எனது பார்­வையில், இரு தலை­வர்­க­ளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்­தையின் முக்­கிய தொனி­யாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் தலை­மை­யி­லான கடந்த கால ஆட்­சியில் இரு நாடு­க­ளுக்கும் இடையே ஏற்­பட்ட கசப்­பான உணர்­வு­க­ளையும், அனு­ப­வங்­க­ளையும் மறந்து, புதிய பாதையில் நல்­லு­றவு ஏற்­ப­டுத்­து­வதை மையப்­ப­டுத்­தி­யுள்­ளது.

குறிப்­பாக, மஹிந்த ராஜ­பக் ஷ இந்­தி­யா­வுடன் கொண்­டி­ருந்த காழ்ப்­பு­ணர்ச்­சியால் சீனா­விடம் காட்­டிய விசேட கரி­ச­னையும் உள்­ள­டங்­கு­கின்­றது. அதன் பிர­தி­ப­லிப்­பா­கவே ஜனா­தி­பதி கோத்­தா­பய இலங்கை இந்­தியா, சீனா ஆகிய இரு வல்­ல­ர­சு­க­ளுக்கும் இடையே நடு­நி­லை­யாக செயல்­படும் என வெளிப்­ப­டை­யாக கூறி­யுள்ளார்.

அத்­துடன் இரு நாடு­களும் பிராந்­திய மற்றும் பாது­காப்பு அமைப்­பு­களை எவ்­வாறு மேம்­ப­டுத்தி செயல்­ப­டு­வது, அதற்கு இலங்­கைக்கு வேண்­டிய தேவை­களை நிறை­வேற்­று­வதில் இந்­தியா எவ்­வாறு உத­வலாம் என்­ப­­வற்­றுக்கும் முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தியா நெடுங்­கா­ல­மாக பல்­வேறு தீவி­ர­வாத அமைப்­பு­களை உள்­நாட்டில் பிர­வே­சிப்­ப­தற்கோ, காலூன்­று­வ­தற்கோ அனு­ம­திக்­காது உரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வெற்றி கண்­டுள்­ளது. அவ்­வா­றான நிலையில், இலங்­கையில் புதி­தாகத் தோன்­றி­யுள்ள இஸ்­லா­மிய தீவி­ர­வாத அச்­சு­றுத்­தலை ஒடுக்­கு­வ­தற்­காக இந்­தி­யாவின் உத­வியை பிர­தமர் மோடி­யு­ட­னான பேச்­சு­வார்த்­தையின்போது ஜனா­தி­பதி கோத்­தா­பய நாடி­யுள்ளார்.

பிர­தமர் மோடி இலங்­கைக்கு இந்த விட­யத்தில் முழு­மை­யான ஒத்­து­ழைப்­புக்­க­ளையும் உத­வி­க­ளையும் வழங்­கு­வ­தற்கு ஒப்­புதல் அளித்­துள்ளார். இதன் ஓர் அங்­க­மா­கவே இலங்­கையின் பாது­காப்பு கட்­ட­மைப்­புக்­களை வலுப்­ப­டுத்தி 50மில்­லியன் டொலர் உதவித் தொகையை இந்­தியா முதற்­கட்­ட­மாக வழங்­கு­கின்­றது.

கேள்வி:- இச்­சந்­திப்பில் இலங்­கையின் தேசிய பாது­காப்பு, பிராந்­திய பாது­காப்பு தொடர்பில் அதி­க­ளவு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்­டுள்ள நிலையில் இந்­தி­யாவின் நிதி­யு­த­வியை இலங்கை எவ்­வாறு பயன்­ப­டுத்த முடியும்?

பதில்:- குறிப்­பாக இலங்கை புல­னாய்­வுத்­து­றையை மேம்­ப­டுத்­து­வதே இந்த நிதி­யு­த­வியின் பிர­தான நோக்­காக இருக்­கின்­றது. இந்­நி­லையில் இரு நாடு­களின் புல­னாய்வு அமைப்­புக்­க­ளுக்கு இடை­யே­யான செய்திப் பரி­மாற்­றத்தை உட­னுக்­குடன் ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக உப­யோ­கிக்­கலாம். வினைத்­தி­ற­னான செயற்­பா­டு­க­ளுக்­காக, கண்­கா­ணிப்பு கரு­வி­க­ளையும், அதற்­கான மென்­பொ­ருட்­க­ளையும் கொள்­வ­னவு செய்­வ­தற்­காக இந்த நிதியை பயன்­ப­டுத்த முடியும். இரு­நா­டு­களும் இந்த விட­யத்தில் ஆராய்ந்து அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் என்றே கரு­து­கின்றேன்.

கேள்வி:- இந்­தியா உட்­பட இந்து சமுத்­திர பிராந்­திய நாடு­க­ளுக்கு பாது­காப்பு அச்­சு­றுத்தல் தொடர்ந்தும் காணப்­ப­டு­வ­தாக கரு­து­கின்­றீர்­களா?

பதில்:- இந்து மற்றும் பசுபிக் பெருங்­க­டல்­களில் பாரிய அளவில் பாது­காப்பு மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ள­மையால் அதன் பாதிப்­புகள் எதிர்­வ­ரும்­கா­லத்தில் அதி­க­ரிப்­ப­தற்­கான வாய்ப்­புக்­களே உள்­ளன. இவ்­வா­றான மாற்­றங்கள் ஏற்­ப­டு­வ­தற்கு முக்­கிய கார­ண­மாக இருப்­பது சீனாவின் இரா­ணுவ வலிமை மற்றும் பண பலம் தான். இந்த இரண்டு விட­யங்­க­ளையும் தன்­வசம் வைத்­தி­ருக்கும் சீனா உலக அளவில் தனது வல்­லா­திக்க தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

சீனாவின் பிர­வே­சத்தால் இந்து- பசுபிக் பெருங்­க­டலில் வல்­ல­ர­சாக உலாவி வரும் அமெ­ரிக்கா மற்றும் அதைச் சார்ந்த நாடு­க­ளுக்கும், இந்­தி­யா­வுக்கும் அந்­நாட்டைச் சார்ந்த நாடு­க­ளுக்கும் பாரிய சந்­தே­கங்­களை அதி­க­ரிக்கச் செய்து வரு­கின்­றது. ஆகவே இந்த பிரச்­சினை உட­ன­டி­யாக தீர்க்­கப்­ப­டாது நீடித்தால் ஓர­ள­வுக்கு பதட்­ட­மான சூழ்­நிலை இப்­பி­ராந்­தி­யத்தில் அவ்­வப்­போது இருந்­து­கொண்டே இருக்கும் என்­பதே எனது கணிப்­பாக இருக்­கின்­றது. அந்த அடிப்­ப­டையில் இந்தப் பிராந்­தி­யங்­களின் பாது­காப்பு என்­பது இன்­றி­ய­மை­யா­த­தாக இருக்­கின்­றது.

கேள்வி:- பிர­தமர் மோடியின் வெற்­றிக்கு புல்­வாமா தாக்­கு­தலும், ஜனா­தி­பதி கோத்­தா­ப­யவின் வெற்­றிக்கு ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தலும் கார­ணி­க­ளாக அமைந்­துள்­ளன என்ற கருத்­தினை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- இந்தக் கருத்தை முழு­மை­யாக நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். பிர­தமர் மோடியின் வெற்­றிக்கு முக்­கிய காரணம் அவர் அரசின் செயல்­பாட்டில் மேற்­கொண்ட சீர்­தி­ருத்­தங்­களே ஆகும். அவற்றில் இலஞ்ச ஒழிப்பு, பொது­வி­நி­யோகம் மற்றும் அரசு உத­வியை நேர­டி­யாக பெற எடுக்கப்பட்ட முயற்­சிகள் மற்றும் மக்­க­ளி­டையே அவர் ஒரு செயல்­பாட்டு வீரர் என்று பெற்ற பெரு­ம­திப்பு ஆகி­யவை அடங்கும். இந்தக் கருத்­துக்கள் மக்­க­ளி­டையே புல்­வாமா தாக்­கு­த­லுக்கு முன்பே பர­வி­யி­ருந்­தன.

இலங்­கையில் 2015இல் ஆட்­சிப்­பொ­றுப்­பினை ஏற்­றி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல-­ – பி­ர­தமர் ரணில் கூட்டு ஆட்­சியின் இரண்­டாண்டு செயல்­பாட்­டுக்கு பின்னர், மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தி­களை அவர்கள் மறந்­தார்கள். இரு­த­ரப்­பி­ன­ருக்கும் இடையில் உட்­பூ­சல்கள் மேலோங்­கின. அத­னை­ய­டுத்து, ஆட்­சியை முன்­ன­கர்த்த முடி­யாத அரசின் கையா­லா­காத நிலை­மைகள் உரு­வா­கின. அதனால் மக்கள் அந்த ஆட்­சியின் மீது வைத்­தி­ருந்த மதிப்பு குலைந்­தது.

அத்­துடன் மிக முக்­கி­ய­மாக ஈஸ்டர் தினத்தில் நடை­பெற்ற தாக்­கு­த­லுக்கு முன்பும் பின்பும் அரசு பாது­காப்­புத்­து­றையில் காட்­டிய மெத்­த­ன­மான போக்கு வெட்­ட­வெ­ளிச்­ச­மா­கி­யது. ஆகவே மக்­க­ளி­டையே நாட்டின் பாது­காப்பு மற்றும் பயங்­க­ர­வாதம் பற்­றிய அச்சம் அதி­க­மா­யிற்று. ஏற்­க­னவே கோத்­தா­பய சிங்­களப் பொது­மக்­க­ளி­டையே ஈழப்­போரில் வெற்றி கண்ட பெரு­ம­திப்­பினை பெற்­றி­ருந்தார்.

அவ்­வா­றான ஒரு­வ­ரி­டத்தில் நாடு ஒப்­ப­டைக்­கப்­பட்டால் பாது­காப்பு உறு­தி­யாகும் என்ற மன­நி­லைக்கு மக்கள் மாறி­னார்கள். அத்­துடன் அவ­ருக்கு உட­னுக்­குடன் முடி­வெ­டுத்து செய­லாக்கத் திறமை உள்­ளவர் என்ற கருத்து மக்­க­ளி­டையே நில­வி­யது. அதுவே அவர் வெற்றி பெற கார­ண­மாக அமைந்து விட்­டது.

கேள்வி:- ராஜ­பக் ஷ தரப்­பினர் சீன சார்பு நிலை கொண்­ட­வர்கள் என்ற பொது­வான கணிப்­புக்­களே இருக்­கின்ற நிலையில் அவர்கள் மீண்டும் ஆட்­சிக்கு வந்­தி­ருப்­பதில் இந்­தியா எத்­த­கைய கரி­ச­னையைக் கொண்­டுள்­ளது?

பதில்:- வெளி­நா­டு­களின் தலை­யீடு பெரு­ம­ளவில் இல்­லா­ததே இந்த தேர்­த­லுக்கும் முந்­தைய ஜனா­தி­பதித் தேர்­தல்­க­ளுக்கும் இருந்த முக்­கி­ய­மான வேறு­பா­டாக உள்­ளது. அத்­துடன் 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்தல் தோல்­விக்கு பின்­னரும் மஹிந்த ராஜ­பக் ஷ இந்­தியப் பிர­தமர் மோடி­யுடன் தொடர்பு வைத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இருந்­தாலும், கோத்­தா­பய ராஜ­பக் ஷ சீன சார்பு நிலை இல்லை என்­பதை இந்­தியா நிச்­சயம் செய்­வது அவ­ரு­டைய அடுத்த கட்ட செயற்­பா­டு­களை பொறுத்தே அமையும். ஆகவே இந்­தியா ஜனா­தி­பதி கோத்­தா­ப­யவின் அடுத்த கட்ட செயற்­பா­டு­களில் நிச்­ச­ய­மாக கரி­சனை கொண்­டி­ருக்கும்.

கேள்வி:- அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்தம் மீள்­ப­ரி­சீ­லனை செய்­யப்­ப­ட­வுள்ள நிலையில் அச்­செ­யற்­பாடு சீனாவின் ‘பிடியை’ தளர்த்­து­வ­தாக அமையும் என்று கரு­த­லாமா?

பதில்:- இந்த துறை­முகம் சார்ந்த ஒப்­பந்­தத்தை திருத்த முதலில் சீனாவின் ஒப்­பு­தலைப் பெற­வேண்­டி­யுள்­ளது. அதைப் பெறு­வது அவ்­வ­ளவு எளி­தான விட­ய­மல்ல. முன்­ன­தாக முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால அரசு, கொழும்பு துறை­முக நகர அபி­வி­ருத்தித் திட்ட ஒப்­பந்­தத்தை திருத்­தி­ய­மைப்­ப­தற்கு ஏறத்­தாழ மூன்று ஆண்­டு­க­ளா­கி­யி­ருந்­தன.

அவ்­வா­றான நிலையில், சீனா அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்­தத்­தினை திருத்­தி­ய­மைப்­ப­தற்கு இணங்­கி­னாலும் மேற்­கு­றிப்­பிட்ட விட­யத்தின் பிர­காரம் பார்க்­கையில், அது உடன் முடி­வுக்கு வரும் என்று எதிர்­பார்க்க முடி­யாது. அம்­பாந்­தோட்டை துறை­மு­க­மா­னது, கொழும்பு துறை­முக நகர அபி­வி­ருத்தி திட்­டத்­தினை விடவும் சீனாவின் பிராந்­திய பாது­காப்­புக்கும் வளர்ச்­சிக்கும் மிகவும் முக்­கி­ய­மா­னது.

ஆகவே ஜனா­தி­பதி கோத்­தா­பய இந்த விட­யத்தை கையி­லெ­டுத்­தாலும் ஐந்து ஆண்­டு­க­ளுக்குள் எவ்­வி­த­மான முடி­வு­களும் கிடைக்­காது. பேச்­சு வார்த்­தை­க­ளி­லேயே ஆட்­சிக்­காலம் நிறை­வுக்கு வந்­து­விடும்.

கேள்வி:- சீனா, தனது கன­வுத்­திட்­ட­மான ‘ஒரே­பட்டி ஒரே மண்­டலம்’ (BRI) திட்­டத்­தினை நிறை­வேற்­று­வ­தற்கு பல்­வேறு முயற்­சி­களை எடுத்­து­வரும் கேந்­திர ஸ்தான­மான அம்­பாந்­தோட்­டையில் ஆதிக்­கத்தை தளர்த்­து­வ­தற்கு முன்­வ­ருமா?

பதில்:- இல்லை, அம்­பாந்­தோட்டை துறை­மு­க­மா­னது ஒரே பட்டி ஒரே மண்­டலம் திட்­டத்தின் இன்­றி­ய­மை­யாத அங்­க­மா­க­வுள்­ளது. ஏனெனில் இலங்கை பூகோள ரீதியில் இந்து சமுத்­தி­ரத்தின் ஆளு­மைக்­கான கேந்­திர முக்­கி­ய­மான பகு­தியில் அமைந்­துள்­ளது. அம்­பாந்­தோட்டை துறை­முகம் இந்து சமுத்­தி­ரப்­பி­ராந்­தி­யத்தில் சீனாவின் கன­வுத்­திட்­டத்தின் கரு என்று கரு­தலாம். ஆகவே அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் சீனா தனது ஆதிக்­கத்தை விட்டுக் கொடுக்கும் என எதிர்­பார்ப்­பது ஏமாற்­றத்தில் முடியும். அவ்­வாறு சீனா முடி­வெ­டுக்கும் வகை­யி­லான அழுத்தம் எதுவும் தற்­போது இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. சீனாவின் இரா­ணுவ மற்றும் பண­பல வளர்ச்­சியைக் கண்டால் அத்­த­கைய சூழ்­நிலை எதிர்­கா­லத்­திலும் தோன்­று­வ­தற்கு வாய்ப்­புக்கள் இல்லை.

கேள்வி:- புதிய ஜனா­தி­பதி கோத்­தா­பய அமெ­ரிக்கா, சீனா, இந்­தியா ஆகிய நாடு­க­ளுக்கு இடை­யி­லான சம­நி­லையை பேணுவார் என்று எதிர்­பார்க்­கின்­றீர்­களா?

பதில்:- இலங்­கைக்கு ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார மற்றும் வல்­ல­ர­சு­களால் ஏற்­படும் பாது­காப்பு அழுத்­தங்­களால் ஜனா­தி­பதி கோத்­தா­ப­ய­வுக்கு நடு­நிலை பேணு­வதைத் தவிர வேறு வழி­யில்லை.

கேள்வி:- புதிய ஆட்­சியில் இரா­ணுவ புல­னாய்வுக் கட்­ட­மைப்­புக்­களை வலுப்­ப­டுத்தி அவற்றை அன்­றாட செயற்­ப­டு­களில் ஈடு­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­னையும், போர் நிறை­வ­டைந்து பத்­தாண்­டு­க­ளா­கின்ற போதும் வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் இரா­ணுவ முகாம்கள் நீடிக்­கப்­பட வேண்டும் என்றும் கூறப்­ப­டு­வதை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- உள்­நாட்டில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான வேறு­பா­டுகள் நீடிக்­கின்ற நிலையில் இவ்­வா­றான நிலைப்­பா­டுகள் விரி­சல்­களை மேலும் அதி­க­மாக்கும் செயற்­பா­டு­க­ளா­கவே இருக்கும் என்று கரு­து­கிறேன். வட­கி­ழக்கில் இரா­ணுவ முகாம்கள் தொடர்ந்து நிலை கொண்­டி­ருப்­பதில் தவ­றில்லை. ஆனால் அதற்­கான சமூக சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்த அரசு தவ­றி­விட்­டது. ஆகவே முத­லா­வ­தாக அரசு வட­கி­ழக்கில் இரா­ணுவ செயல்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்த வேண்டும்.

கேள்வி:- இரா­ணுவப் பின்­ன­ணியைக் கொண்­டுள்ள ஜனா­தி­பதி கோத்­தா­பய முன்னாள் படை­வீ­ரர்­களை முக்­கிய பத­வி­களில் அமர்த்­து­கின்­ற­மை­யையும் அவ­ரு­டைய போக்கு சர்­வா­தி­கா­ரத்­தி­னையே நோக்கி நகரும் என்றும் எதிர்வு கூறப்­ப­டு­வதை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- இரா­ணுவ செயல்­பா­டு­களை அர­சாண்­மைக்கு உப­யோ­க­மாக்­கு­வது ஜன­நா­யக வளர்ச்­சிக்கு புறம்­பா­னது. பாகிஸ்­தானில், அதிக அளவில் அர­சி­யலில் இரா­ணுவம் ஈடு­பட்டால் நடக்கும் அவ­லங்கள் இதற்கு எடுத்­துக்­காட்­டா­கின்­றன. கோத்­தா­ப­யவின் கடந்­த­கால செயல்­பா­டு­களில் சில எதேச்­ச­தி­கா­ரத்­தன்மை கொண்­டவை என்று பொது­வான கருத்­துக்கள் நிலவும் போது இத்­த­கைய அச்­சங்கள் ஏற்­ப­டு­கின்­றன. ஆகவே அவர் தனது செயல்­பா­டு­களை கவ­னத்­துடன் செய்ய வேண்டும். அவ­ருக்கு உத்­தி­களைக் கூறு­வது பிர­தமர் மஹிந்த மற்றும் பத­வியில் உள்ள பழுத்த அர­சி­யல்­வா­தி­களின் கட­மை­யா­கின்­றது. இவற்றை எல்லாம் கடந்து இலங்­கையில் ஜன­நா­யகம் தொடர்ந்து நிலை பெற­வேண்டும் என்று எதிர்­பார்க்­கின்றேன்.

கேள்வி:- சீன ஜனா­தி­ப­திக்கும், இந்­தியப் பிர­த­ம­ருக்கும் இடையில் மாமல்­ல­ பு­ரத்தில் நடை­பெற்ற சந்­திப்பின் பின்­ன­ரான சூழலில் இந்­தி­யாவின் சீன சார்பு நிலைப்­பாட்டில் மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ள­னவா?

பதில்:- செயற்­பாட்டு ரீதி­யாக இந்­தி­யா-­ – சீனா உறவில் ஏற்­படும் விரி­சல்கள் கட்­டுக்குள் அடங்­காது போர்ச் சூழலை உரு­வாக்கக் கூடாது என்­பதே ஊஹான் மற்றும் மாமல்­ல­புரம் ஆகி­ய­வற்றின் இரு தலை­வர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­புக்­களின் கருத்­தாகும். அதற்­கான சுமுக சூழலை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இந்தச் சந்திப்புக்கள் பெரிதும் உதவியுள்ளன. ஆனால் இரு நாடுகளின் அடிப்படை நிலைப்பாட்டில் மாற்றங்கள் அதிகம் இல்லை. மாமல்லபுரம் போன்ற சந்திப்புகளின் குறிக்கோள்கள் அதிகாரபூர்வமான அடிப்படை நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதல்ல.

கேள்வி:- பொருளாதார ஸ்திரத்தினை பேணுவதற்கு தவிர்க்க முடியாதவொரு சூழலில் இலங்கை, சீனாவுடன் நெருங்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றபோது இந்தியாவின் பிரதிபலிப்பு எவ்வாறு இருக்கும்?

பதில்:- எந்த காரணத்துக்காக, எத்தகைய சூழலில் சீன பொருளாதார உதவியை இலங்கை பெறுகிறது என்பதைப் பொறுத்தே, இந்தியா தனது நிலைப்பாட்டை எடுக்கும். அந்தப் பிரதிபலிப்புக்களை தற்போதே கூற முடியாது.

கேள்வி:- இந்தியா -– இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசியலமைப்பில் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தினை இலங்கையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதுகின்றீர்களா?

பதில்:- 13ஆவது திருத்தச் சட்டத்தை கோத்தாபய முழுமையாக செயல்படுத்துவார் என்பது வீணான எதிர்பார்ப்பு. அதை அவரே பலமுறை கூறியுள்ளார். ஏனெனில், அவருக்கு வாக்களித்த சிங்களப் பெரும்பான்மையினருக்கு அதில் உடன்பாடு இல்லை.

கேள்வி:- பிரதமர் மோடி அதற்கான வலியுறுத்தலை செய்துள்ளபோதும் கோத்தாபய இந்து நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் அதற்கு மாறுபட்ட கருத்தினையே முன்வைத்துள்ளாரே?

பதில்:- இருவரும் தமது கருத்துக்களை வெளிப்படையாக கூறியுள்ளார்கள். அதற்கு மேல் முன்னேற்றம் காண இரு நாடுகளில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் முயற்சி எடுப்பார்களா என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாக இருக்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 35 வருடத்திற்கு பிறகு தரை இறங்கிய அதிசய விமானம்!! (வீடியோ)
Next post பெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும் !! (அவ்வப்போது கிளாமர்)