குழந்தைகளின் ரத்தப்புற்றுநோயை தடுக்க முடியும்! (மருத்துவம்)
புற்றுநோய் பற்றிய அச்சம் உலகளவில் பரவி வரும் நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த இந்த புற்றுநோய் நிபுணர் மெல் கீரிவ்ஸ் நம்பிக்கை அளிக்கும் ஆய்வு முடிவு ஒன்றை அறிவித்திருக்கிறார். குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த புற்றுநோய்(Leukaemia) எளிதாக கட்டுப்படுத்தக் கூடியது என்பதைக் கண்டுபிடித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில், குழந்தைகள் நலனில் ஒவ்வொரு பெற்றோரும் கவனம் செலுத்துவது இன்றியமையாதது ஆகும். ஏனென்றால், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு திறனைச் சரியாக கணிப்பது என்பது இயலாத செயல். இது மாதிரியான சூழலில் மழலைப்பருவத்தில் ஏற்படுகிற ரத்தப்புற்றுநோய்(Leukaemia) எளிதாக கட்டுப்படுத்தக்கூடியது.
சளி, காய்ச்சல் முதலான தொற்றுக்களால் குழந்தைகளைப் பெருமளவில் பாதிக்கிற ரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தக்கூடிய வாய்ப்புகளும், சாத்தியங்களும் நிறைய உள்ளன. குறிப்பாக, பெரும் மாற்றங்களை உள்ளடக்கிய அதிநவீன சிகிச்சை முறைகள் இத்தகைய நோய்கள் வராமல் தடுக்கக்கூடியவை.
இந்த ஆய்வின் அடிப்படையில் ஃப்ளு மாதிரியான தொற்றுக்கள், மரபியல் அடிப்படையில் முன் பாதுகாப்பு கொண்டுள்ள குழந்தைப் பருவத்தினரிடம் நிணவணு ரத்தப்புற்று நோயைத்(ALL) என குறிப்பிடப்படுகிற Accute Lympho Leukaemia(ALL)-வைத் தூண்டக்கூடிய தன்மை உடையனவாக காணப்படுகின்றன. ஆனால், யார் யாரெல்லாம் ஆரம்பகட்ட சுற்றுச்சூழலை உயர்த்துகிறார்களோ அவர்கள் எல்லாம் இதில் அடங்குவர்.
அதாவது பச்சிளம் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் பழக விடுவதன் மூலமாக ஒருவேளை அவர்கள் பிற குழந்தைகளை, முதன்மையான நோய் எதிர்ப்பு அமைப்பின் அடிப்படையில் நோய்களில் இருந்து பாதுகாத்து, பின்னர் ஏற்படுகிற நோய்த்தொற்றுகளின் பாதிப்புக்களில் இருந்தும் அவர்களைப் பாதுகாக்க முடியும்.
இத்தகைய உயர்ந்த செயல்பாட்டினால், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்படுகிற எண்ணற்ற மழலைப் பருவத்தினரைப் பாதுகாக்க முடியும். மேலே குறிப்பிடப்பட்ட கோட்பாடு அடிப்படையில் இது நிறைவேற்றப்படலாம். தற்போது, இந்த ஆய்வு முயற்சி, தன்னுடல் தாங்கு திறன் நோய்(Auto Immune Disease) மற்றும் ஒவ்வாமை போன்ற பாதிப்புக்கள் அடிப்படையில் பரிசீலனையில் உள்ளது.
இங்கிலாந்தில் ஒவ்வொரு வருடமும் 500 குழந்தைகள் Accute Lympho Leukaemia-வால் பாதிக்கப்படுவதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. மேலும், இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டே போகிறது. இதனால், பொதுவான வடிவில், குழந்தைகளிடம் புற்றுநோய் உருவாகிறது.
இது பற்றித்தான் எழுதிய மருத்துவ கட்டுரையில், ALL என சுருக்கமாக குறிப்பிடப்படுகிற ரத்த புற்றுநோயை கருவில் உண்டாகிற மாற்றங்களைத் தொடர்ந்து மரபணு மாற்றம் அடிப்படையில் ஆய்வு செய்வதற்கு இரண்டுவிதமான முறைகள் தேவைப்படுகின்றன. 20 குழந்தைகளில் ஒரு குழந்தை முதற்கட்ட ரத்த புற்றுநோய் மாற்றத்துடன் பிறப்பதாகவும், ஒரு சதவீத குழந்தைகள் மட்டும் இந்நோயைப் பரப்புகின்றனர்’ என்று கூறியிருக்கிறார்.
இந்த புற்றுநோய் ஆய்வை மேற்கொண்டிருக்கும் பேராசிரியர் மெல் கீரிவ்ஸ், 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திய ஆய்வின் முடிவில் குழந்தைப் பருவத்தில் ஏற்படுகிற ரத்த புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுரையை, தன்னுடைய ஆய்வு நடவடிக்கைகளுடன் ஒருங்கே கொண்டு வந்தவர். தற்போது இவ்வகை புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான சிகிச்சை முறைகள் தொடர்பாக பணியாற்றவும் திட்டமிட்டு உள்ளார்.
Average Rating