தினமும் 12 மாத்திரைகள் சாப்பிடும் நடிகை! (சினிமா செய்தி)

Read Time:2 Minute, 3 Second

நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஆண்ட்ரூவை தீவிரமாக காதலித்து வந்தார். இலியானாவுக்கும் அவரது காதலருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்துவிட்டனர்.

காதல் முறிந்ததை அடுத்து அவர் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருந்தார். தன் காதலரை விட்டு பிரிந்ததால் இலியானா மிகவும் மன அழுத்தத்துக்கு உள்ளானதாகவும், அதிலிருந்து மீண்டது குறித்து அவர் கூறியதாவது:- வாரந்தோறும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று வருவதால் படங்களில் நடிப்பதை கூட ஒத்தி வைத்திருக்கிறேன்.

மன அழுத்தத்தால் சில சமயங்களில் ஒரு நாளைக்கு 12 மாத்திரைகள் சாப்பிட்டு வந்தேன். அதனால் உடல் எடையும் அதிகமாக கூடி விட்டது. உடல் எடையை குறைப்பதற்காக ஜிம்முக்கு சென்று விட்டு வெளியே வரும்போது அந்த புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பலர் பதிவிடுகிறார்கள். இதனாலேயே நான் ஜிம்முக்கு செல்வதையும் தவிர்த்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க விஞ்ஞானிகளை அலறவிட்ட கொல்லிமலை சித்தர்!! (வீடியோ)
Next post அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் மோதி என்ன செய்திருப்பார்? (உலக செய்தி)