ஆஹா… ஆப்ரிகாட்! (மருத்துவம்)

Read Time:5 Minute, 25 Second

உணவே மருந்து

* ஆப்ரிகாட் கனியின் தாவரவியல் பெயர் புருனஸ் ஆர்மெனியேகா(Prunus Armeniaca) என்பதாகும். பாதாமி பழம், துருக்கி ஆரஞ்சு(Turkey Orange), சர்க்கரை பாதாமி ஆப்ரிகாட் பழம் என்பவை இக்கனியின் வேறு பெயர்களாக கூறப்படுகின்றன.

* தற்போது உலக நாடுகள் முழுவதிலும் இந்தப் பழம் காணப்பட்டாலும், நமது அண்டை நாடான சீனா(வடகிழக்கு சீனா)தான் இதனுடைய தாயகமாகக் கருதப்படுகிறது.

* மருத்துவ குணம் அதிகமுள்ள ஆப்ரிகாட் பழத்தின் தோல் பொன் நிறத்தில் காணப்படும். இதனுடைய சதைப்பகுதி ஒருவிதமான புளிப்புசுவை கொண்டு இருக்கும்.

* வரலாற்று ஆய்வாளர்கள், சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, இப்பழம் சீன நாட்டில் பயிரிடப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுகின்றனர். பின்னர், அங்கிருந்து ஆசியா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிக்கு(Mediterranean Region) ஆப்ரிகாட் தாவரம் பரவியதாக அறியப்படுகிறது.

* ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த ஆப்ரிகாட் பழத்தை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், சுவாசப் பிரச்னைக்குக் காரணமான மார்புச்சளி, காச நோய் முதலானவை குணமாகும்.

* உலக நாடுகள் அனைத்திலும் இந்தக் கனி பெருமளவில் பயன்படுத்தப்பட்டாலும், 95% ஆப்ரிகாட் அமெரிக்காவில்தான் பயிரிடப்படுகிறது.

* நமது நாட்டில் மார்ச் முதல் மே வரை இப்பழம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதனுடைய தனித்தன்மையைப் பறைசாற்றும் வண்ணம் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 9-ம் தேதி ‘தேசிய ஆப்ரிகாட் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.

* வாழ்க்கை முறை மாற்றம், பணிபுரியும் சூழல் ஆகியவற்றால், நம்மில் பெரும்பாலானோர், அதிக உடல் எடையால் அவதிப்படுவது வாடிக்கையாகி விட்டது. இதற்கு நல்ல தீர்வு ஆப்ரிகாட் பழம்.

* நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் காணப்படுகிற உணவுப்பொருளாக ஆப்ரிகாட் திகழ்வதால், மழலைப்பருவம் தொடங்கி, முதுமைப் பருவத்தினர் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதாக இப்பழம் உள்ளது.

* ஆப்ரிகாட் பழத்தில் காணப்படுகிற சத்துக்கள் கொஞ்சமும் பாதிக்கப்படாமல், அதிலுள்ள நீர்ச்சத்தை மட்டும் வெளியேற்றிவிட்டு, காய வைப்பதன் மூலமாக நமக்கு உலர்ந்த ஆப்ரிகாட் கிடைக்கும்.

* ஆப்ரிகாட்டில் உள்ள கரோட்டினாய்டு உடலுக்குத் தேவையில்லாத கெட்ட கொழுப்பை அகற்றுகிறது; இதன் காரணமாக, இதயம் தொடர்பான நோய்கள் வருவது முற்றிலும் தடுக்கப்படுகிறது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைச் சீரான அளவில் வைத்திட உதவுகிறது.

* ரத்த சோகை நோயால் அவதிப்படுபவர்களுக்கு, ஆப்ரிகாட் சிறந்த மருந்தாக திகழ்கிறது. ஏனென்றால், இதில் உள்ள இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை ரத்த சுரப்பை அதிகரிக்க செய்யும் ஆற்றல் வாய்ந்தவை.

* நமது உடலில் காணப்படுகிற செல்கள் முதிர்ச்சி அடைவதை, லைகோபின் என்ற சத்து தடுக்கிறது. ரத்த அழுத்தம் ஏற்றத்தாழ்வு இல்லாமல், ஒரே சீராக இருப்பதற்குப் பொட்டாசியம் உதவி செய்கிறது. டிரிப்போடோபேன்கள் நரம்பு மண்டலம் வலுவாக இருக்க செய்கிறது.

* மற்ற பழ வகைகளில் இருப்பதைப்போலவே, இதிலும், நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டசத்துக்கள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக, பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின்-ஏ, சி மற்றும் இரும்புசத்து ஆகியவை அதிகளவில் இப்பழத்தில் அடங்கி உள்ளன.

* நமது உடல் எடையைக் குறைப்பதில், இக்கனியின் பங்கு அளப்பரியது. ஆகவே, எங்கு பார்த்தாலும், இதை வாங்கி சாப்பிட மறந்து விடாதீர்கள்!

* ஒரு கப் உலர்ந்த ஆப்ரிகாட்டில் சராசரியாக 158 மைக்ரோகிராம் அளவிற்கு வைட்டமின்-ஏ கிடைக்கும்.

* ஆப்ரிகாட்டில் உள்ள வைட்டமின்-ஏ, கண் பார்வை தொடர்பான குறைபாடுகள், தோல் பாதிப்புகள்(முகப்பரு போன்றவை) மேலும் பரவாமல் தடுக்க வல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மண்ணில் இருந்து மன அழுத்த தடுப்பூசி!! (மருத்துவம்)
Next post எல்லை நிர்ணய பிரச்சனைகள்!! (கட்டுரை)