தூக்கத்தைக் கெடுக்கும் வேலை!! (மருத்துவம்)

Read Time:13 Minute, 9 Second

Good Night

நவீன வாழ்வியல் காரணமாகவும், பொருளாதார மாற்றங்கள் காரணமாகவும் இன்று எல்லோருமே கூடுதலாக உழைக்க ஆரம்பித்துவிட்டோம். இந்த கடும் உழைப்பு பொருளாதார நிலையை மேம்படுத்துவது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொருபுறம் மனித வாழ்வின் அத்தியாவசியத் தேவையான தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது.

அதிலும் தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கும், தொழில்முனைவோர்களுக்கும் இது இன்னும் கூடுதல் சிக்கலாகிவிட்டது. இது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய பிரச்னை என்கிறார் தூக்கம் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் பிரபல அமெரிக்க மருத்துவரான சார்லஸ் செஸ்லர். இந்நிலையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள சில மாற்றங்களையும் மேற்கொள்ள வலியுறுத்துகிறார். அவைகளைப் பார்ப்போம்…

இன்று கூடுதல் கமிட்மென்ட்கள் காரணமாக பல மணி நேரம் உழைக்க வேண்டி உள்ளது. அதனால் மன அழுத்தத்துக்கு ஆளாகிறோம். குறிப்பாக தொழில் முனைவோர்கள் உறங்கும்போதும் கூட தொழில் வளர்ச்சி சம்பந்தமான தங்களது எதிர்காலம் குறித்து தீவிர சிந்தனையில் சில முக்கிய முயற்சிகளை மறந்துவிடாமல் இருக்கவும், அதை மனதில் வைத்து சிந்தித்துக் கொண்டு உறங்குகின்றனர். ஏன் விழித்தெழும்போதும் கூட தங்களை சுற்றி மில்லியன் கணக்கான யோசனைகளுடனும், படுக்கையிலிருந்துதான் எழுகின்றனர்.

சுயதொழிலும் அல்லது நல்ல தூக்கமும் நாம் தேர்ந்துகொள்ளும் வாழ்க்கைப் பாதையைப் பொறுத்து அமைகிறது. தனது ஆய்வின்போது தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை மனிதர்கள் உணரவில்லை. தொழில் முனைவோர் பகல் தூக்கத்தைவிட இரவு நன்கு உறங்குவது மன செயல்பாட்டை அதிகரிப்பதுடன், யோசிக்கும் திறனையும் மூளைக்கு சுறுசுறுப்பையும் கூட்டுகிறது. தூக்க நேரத்தை குறைக்கும் போது பல இன்னல்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுவதை பார்க்க முடிகிறது.

என்னதான் கடினமான உழைப்பைத் தொழிலில் முதலீடாக வைத்து செய்தாலும் அதில் புத்திசாலித்தனம் இல்லை என்றால் அனைத்து முயற்சி
களும் வீணாகிவிடுகிறது. நன்கு தூங்குவதால் தொழிலில் இன்னும் சிறப்பான முன்னேற்றங்களை அடைய முடியும்.

காலையில் நல்லது… மாலையில் கெட்டது…

காலை மற்றும் பகல் நேரங்களில் Caffeine நிறைந்த காபி போன்ற பானங்கள் உற்சாகம் தருவதாக இருக்கின்றனதான். ஆனால், இவற்றை மாலை வேளைக்குப் பிறகு அருந்துவதால் தூக்கம் தடைபடுகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் காஃபி அருந்துவதை நிறுத்துவதால் நல்ல தூக்கம் கிடைக்கும். பல பக்க விளைவுகளிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

படுக்கைக்கு முன்பாக உண்ட உணவை ஆய்வு செய்யுங்கள்

உணவியல் ரீதியாக பார்க்கும்போது தூங்கச் செல்வதற்கு முன் அதிக சர்க்கரை உள்ள உணவை உட்கொள்வது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். அதற்கு பதில் கொழுப்பு மற்றும் புரதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. இது உடலுக்கு ஊட்டச்சத்தினையும், நல்ல தூக்கத்தையும் தரும். முக்கியமாக இந்த உணவுகளை தூங்கச் செல்லும் 2 அல்லது 3 மணி நேரங்களுக்கு உண்பதே சரியானது. மேலும் காரம், மசாலா நிறைந்த உணவுகளை உட்கொள்வதைத் தவிர்ப்பதும் முக்கியம்.

செல்போனை படுக்கைக்குக் கொண்டு வராதீர்கள்

அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய தொலைபேசிகள் நாம் செய்யும் தொழிலுக்கு துணை நிற்கிறதுதான். இமெயில் பார்க்கவும் தொழில்ரீதியாக பயன்படுத்திக் கொள்ளவும் செல்போன் உதவுகிறது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற திட்டமிடுதலுக்கும் வழி காட்டுகிறது. அதே நேரத்தில் வீட்டில் உறங்கச் செல்லும்போதும் அருகில் செல்போன் இருப்பது தூக்கத்தை இரண்டாம்பட்சமாக நினைக்க வைத்துவிடும். ஏதேனும் வலைதளங்களில் உலாவலாம் என்ற எண்ணத்தையும் உண்டாக்கி தூக்கத்தைப் பறிக்கும்.

திட்டங்களை தள்ளி வைத்தல்

தொழிலை சிறப்பாக நடத்திட எத்தனையோ யோசனைகளை திட்டம் தீட்டி வைத்திருக்கலாம். ஆனால், தூங்கும்போது அனைத்தையும் ஓரம் கட்டிவிட்டு தூங்குவதே நல்லது. உங்கள் தொழிலை முன்னேற்ற பாதையில் நடத்திட சிறந்த சிந்தனை உங்கள் மனதில் அல்லது மூளையில் எழுந்திருக்கலாம். அப்படி எழுகின்றவற்றை மனதில் வைத்துக் கொண்டு உங்களால் உறங்க முடியாதுதான். அதைப்பற்றி சிந்திக்க, சிந்திக்க தூக்கம் கெடும். அப்படி இருக்கும்போது ஒரு புத்தகத்தில் தெளிவாக எழுதி வைப்பதால், உங்கள் மனதையும் மன சுமையிலிருந்து தளர்த்திக் கொள்வதன் மூலம் நன்கு உறங்கலாம். உங்கள் மனதில் பதற்றம் ஏற்படாமல் நிம்மதி தூக்கம் போகலாம்.

படுக்கைக்கு முன் பின்பற்ற வேண்டிய கடமைகள்

தூக்கம், தொழில் இரண்டும் ரயில் தண்டவாளங்களைப் போன்றது. நாம் செய்யும் தொழிலை அதாவது வேலையை நிறுத்தி விட்டு அல்லது முடித்துவிட்டு உடனே படுக்க செல்லக் கூடாது. வேலையை முடித்துவிட்டு 2 மணி நேரம் கழித்துதான் உறங்க செல்ல வேண்டும் அல்லது சிறிது நேரம் ரிலாக்ஸ் பண்ணிவிட்டுதான் தூங்க ெசல்ல வேண்டும். தூங்கச் செல்லும் முன்பாக அறையில் உள்ள விளக்குகளை மங்கலாக(Dimming light) எரிய விட வேண்டும். குடும்பத்தினருடன் நல்ல விஷயங்களைப் பேசுவதும், புனை கதைகளை படிப்பதும் நல்லது.

படுக்கை அறையை புனிதமாக நினையுங்கள்

உங்கள் படுக்கை அறையை புனிதமாக கருத வேண்டும். அதை உணவு மேஜையாக்குவதோ, படிக்கும் அறையாக்குவதோ, மடிக்கணினியை பயன்
படுத்துவதோ, தொலைக்காட்சி பார்ப்பதோ அல்லது தூக்கத்திற்கு இடையூறாக எதையும் செய்யக் கூடாது. இரவாக இருந்தாலும், பகலாக இருந்தாலும் படுக்கையறையை ஓய்வுக்கானதாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்படி உங்கள் படுக்கை அறையை எந்த ஒரு இடையூறும் இல்லாமல் புனிதமாக பயன்படுத்தும்போதுதான் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

தரமான தூக்கத்திற்கு முதலீடு செய்யுங்கள்

வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதியை படுக்கையறையில் ஓய்வுக்காக ஒதுக்குகிறோம். உங்கள் வாழ்க்கையில் ஏற்படுகிற அனுபவங்கள் உங்களை கீழ் நிலையில் இருந்து மேல் நிலைக்கு ஏணியாக உயர்த்துகிறது. எனவே, தங்களை மேம்படுத்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்பவர்கள்தான் தொழில் முனைவோராகவும், தொழிலதிபராகவும் உயர்வதற்கு வழிவகுக்கும்.

எனவே, தூங்கும் அறையை தூங்கும் இடத்தை அதற்கேற்றவாறு மாற்ற வேண்டும். இதமான வெளிச்சம் தரும் விளக்குகள், தூக்கத்தைத் தரும் உணவுகள், சுத்தமான படுக்கைவிரிப்புகள், நல்ல நிறம் கொண்ட போர்வை என சின்னச்சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்தும்போது அதுவே சிறந்த முதலீடாகும்.

காலை பொழுதிலும் கவனம்

ஒவ்வொரு நாளும் வேலைகளை எளிதாக முடிக்க திட்டமிடுதல் அவசியமாகும். அப்படியாக கால அட்டவனணயின்படி தூங்குபவராக இருந்தால் அட்டவணையை பின்பற்றுவது முக்கியமாகும். இரவில் நன்கு தூங்குவதால் காலையில் எந்த ஒரு மன அழுத்தமும் இல்லாமல் எழ முடியும். உறங்கப் போகும் முன் அதிகாலையில் விழித்தெழ கடிகாரத்தில் அலாரம் வைத்து தூங்குவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

காலை 8 மணி வரையிலான உங்கள் நேரத்தை வேறு யாருக்கும் நேரம் ஒதுக்காமல் இருப்பதும் நல்லது. காலை 10 – 11 மணிக்கு மேல் தொழில்ரீதியான காரியங்களை பற்றி யோசிக்கவும் தொழில் வளர்ச்சிக்காக மற்றவர்களை பார்க்க நேரம் ஒதுக்குவதும் தொழில் முனைவோரின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

உங்களைப் பற்றி சிந்தியுங்கள்

தூங்கும்போது உங்கள் எண்ணங்களுக்கு தொழிலில் ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து கூக்குரலிட்டால் நிம்மதியாக உறங்க முடியாது. உங்களை பற்றியான அவநம்பிக்கை எண்ணங்களை உங்களில் இருந்து அகற்றிவிட வேண்டும். அவநம்பிக்கையுடனும், சிந்தனையுடனும் தூங்கினால் தூக்கம் வராது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மனதில் உங்களை பற்றிய தவறான கருத்துகள் தேவையில்லாமல் மனதில் பதிந்திருந்தால், சுயபச்சதாபத்திற்கும் கோபத்திற்கும் தள்ளப்படுவீர்கள்.

தூங்கச் செல்லும் முன் உங்கள் மனதை தளர்வடையச் செய்து தூங்குவதால் பாதி பிரச்னை முடிவுக்கு வருவதுடன் தூக்கத்தின் முழு பலனையும் அடைவீர்கள். அதிகமாக யோசித்து உங்களை நீங்களே கடினப்படுத்திக் ெகாள்வதற்கு பதிலாக நேர்மாறாக சிந்தியுங்கள். அன்றைய தினம் என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தி பார்ப்பதும், சிந்திப்பதும் தங்களை திருத்திக் கொள்வதும் தூக்கத்திற்கு வழிவகுக்கும். நீங்கள் உங்கள் தொழில் பற்றி எதிர்மறையாக சிந்திப்பது, தேவையில்லாத எண்ணங்களுக்கு இடம் கொடுப்பது போன்றவற்றால் நன்கு தூங்க முடியாது. நன்றாக தூங்குவதால் மட்டுமே நன்கு யோசிக்க முடியும். மூளையும் புத்துணர்வு பெறும். தொழிலிலும் வளர்ச்சி அடையலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது !! (உலக செய்தி)
Next post ஆரோக்கியத்துக்கு அருமையான ஏரோபிக்ஸ்! (மகளிர் பக்கம்)