ஆரோக்கியத்துக்கு அருமையான ஏரோபிக்ஸ்! (மகளிர் பக்கம்)
இனிமையான பின்னணி இசையோடும், பயிற்சியாளர் கட்டுப்பாடுடன் எண்ணும் எண்களின் வரிசைப்படியும் மேலும் கீழுமாக, இடம் வலமாக, வலம் இடமாக, சிறிது நடப்பது போல, சிறிது ஓடுவது போல, சிறிது குதிப்பது போல, சிறிது உட்கார்ந்து எழுந்திருப்பது போல, சிறிது படுத்து எழுந்திருப்பது போல, கைகள், கால்களை சிறிய அசைவுடன் தொடங்கி பின்பு வேகமாக அசைத்து, சுற்றுவதின் மூலம் வேர்வையின் மழையில் நனைந்து, ஒரு மாபெரும்நடனப்பயிற்சி முடிந்தது போல எண்ணி, இன்பமான களைப்போடு, தண்ணீர் அருந்திக்கொண்டு மெல்லிய துண்டால் வியர்வையை அகற்றி பெருமூச்சு விடும் சுகம் கிடைப்பது ஏரோபிக்ஸில்தான்!
ஏரோபிக்ஸின் பயன்கள்
* இதயத்தை வலுப்படுத்துகிறது.
* அளவுக்கு அதிகமான கொழுப்புச் சத்துகளை அகற்றுகிறது.
* உடலை மாசுபடுத்தும் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது.
* தேவைக்கு அதிகமான கலோரிகள் எரிக்கப்படுகிறது.
* அதிகமான ஆக்சிஜனை உடலில் செலுத்துகிறது.
* ரத்த ஓட்டம் சீராகவும் அதிகரிக்கவும் உதவுகிறது.
* முக்கியமாக வயிற்றுப் பகுதியில் உண்டாகும் பெரும் தொப்பையை குறைக்க உதவுகிறது
* உடல் தசைகளை இறுக்கி உறுதியாக்குகிறது.
* எடை குறைத்து, அதன் மூலமாக கால் மூட்டுகளில் உண்டாகும் அழுத்தம் குறைய உதவுகிறது.
* உடலில் உண்டாகும் முழுப்பருமன் (ளிதீமீsவீtஹ்) குறைக்கப்பட்டு அடித்தளமுதுகுவலி வராமல் பாதுகாக்கிறது.
* உடலின் அனைத்துப் பாகங்களும் உள் உறுப்புகளும் புத்துணர்ச்சி பெற்று, உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள பேருதவி புரிகிறது.
கவனம் தேவை…
’எல்லோரும் ஏரோபிக்ஸ் போகிறார்கள்… அதனால் நானும் போகிறேன்’ என ஏதாவது ஒரு பயிற்சிக்கூடம் சென்று உடலை கெடுத்துக் கொள்ளக் கூடாது. சரியாக செய்யாவிட்டால் உடலின் தசைகளில், எலும்பு இணைப்புகளில், அதிமுக்கியமாக முதுகெலும்பில் பயங்கர காயங்கள் (சிலீக்ஷீஷீஸீவீநீ வீஸீழீuக்ஷீவீமீs) உண்டாக வாய்ப்புகள் அதிகம். எனவே, நன்றாக பயிற்சி பெற்ற, அனுபவம் வாய்ந்த ஏரோபிக்ஸ் பயிற்சியாளரிடம் தனிப் பயிற்சி பெற்று, ஒவ்வொரு நாளும் உங்களின் பயிற்சியின் முன்னேற்றம் (றிக்ஷீஷீரீக்ஷீமீssவீஸ்மீ tக்ஷீணீவீஸீவீஸீரீ க்ஷீமீநீஷீக்ஷீபீ) கண்காணிக்கப்பட வேண்டும். ஏற்கனவே உடலில் ஏதாவது காயம், அடிபட்ட வலி உண்டெனில், அதை பயிற்சியாளர் உதவியோடு சரிசெய்த பின்னரே ஏரோபிக்ஸில் சேரவோ, தொடரவோ வேண்டும்.
ஏரோபிக்ஸின் வகைகள்
ஏரோபிக்ஸில் பலவிதப்பட்டபயிற்சிகள் உள்ளன. யாருக்கு எந்தவிதமான பயிற்சி தேவைப்படுகிறதோ அல்லது சரியாக இருக்குமோ அதற்கு ஏற்றவாறு தேர்வு செய்து பயிற்சியை தொடங்கலாம்.
ஏரோபிக்ஸின் சில வகைகள்…
1. Step
2. Gymnastic
3. Dance
4. Funk
5. Dumb Bell
6. Kick Boxing
7. Pump
8. Body Balance
இதில் நிஹ்னீஸீணீstவீநீ ணீமீக்ஷீஷீதீவீநீல் உலகத்தில் தலைச்சிறந்த வீரர்களை பாராட்டி, கௌரவிக்க உலக சாம்பியன்ஷிப் உள்ளதுகுறிப்பிடத்தக்கது.
படிப்படியான பயிற்சி முறைகள்
* முதலில் உங்களின் உடல் உறுதி, வலிமையை (திவீtஸீமீss ணீஸீணீறீஹ்sவீs) சோதிப்பது முக்கியம்.
* ஒவ்வொரு மனிதனின் உடல் அமைப்பும் உடல் உறுதியும் மனவலிமையும் வேறுபடுவதால், அதற்கு ஏற்ப ஏரோபிக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
* இதன் பிறகு உடலுக்கு உறுதியான, மனதுக்குத் திடமான, இதயத்துக்குத் தேவையான, உறுதியான பயிற்சி அளிக்க நல்ல வார்ம் அப் செய்து உடலின் நெகிழ்தன்மையை படிப்
படியாக கூட்டி கார்டியோ ரிதமிக் ஏரோபிக்ஸ் பயிற்சிகளை செய்ய தொடங்கலாம்.
* பயிற்சி முடிந்த பின்பு மறக்காமல் ஷிtக்ஷீமீtநீலீவீஸீரீ மற்றும் நீஷீஷீறீ பீஷீஷ்ஸீ பயிற்சிகளை செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
ஏரோபிக்ஸ் எப்போது? ஏன்? எதற்காக? யாரெல்லாம் செய்ய வேண்டும்?
* 10 வயது முதலே சிறிய அளவில் ஏரோபிக்ஸை ஆரம்பிக்கலாம். 16 வயது இளைஞர்கள் முதல் இதற்கு மிகவும் பொருத்தமானவர்கள்.
* உணவுக்குழாய் உறுதியாகி சாப்பாடு நன்கு செரிமானம் உண்டாகும்.
* உடலின் சர்க்கரை அளவை மிகவும் குறைக்க ஏதுவாகிறது.
* ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி அழகான இதயத்தை (ஜிஷீஸீமீs tலீமீ லீமீணீக்ஷீt) அன்பளித்து, வேளாவேளைக்கு நல்ல பசி எடுக்க உதவுகிறது.
* சர்க்கரை நோயை அண்டவிடாமல் உங்களைப் பாதுகாக்கிறது.
* குறிப்பாக இளைஞர்களை குண்டாக்காமல் அழகாக வைத்திருக்கிறது.
* உடல் மற்றும் உள்ளச் சோர்வினை நீக்கி, எப்போதும் புத்துணர்ச்சியோடு, உற்சாகமாக இருக்க உதவுகிறது.
* இந்த சிறப்புமிக்க ஏரோபிக்ஸ் கூட நல்ல உணவு வகைகளையும் சேர்த்துக் கொண்டால், நீங்கள்தான் உடல் உறுதியின் ராஜா / ராணி!
* ஏரோபிக்ஸில் சேருவதற்கு முன்பு உங்கள் குடும்ப டாக்டரிடம் ஆலோசித்த பிறகு, நல்ல பயிற்சிக்
கூடத்தில் சேர்ந்து உடலையும் உள்ளத்தையும் உறுதிப்படுத்துங்கள்!
Average Rating