ஹனுமானாசனம்!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 46 Second

நாம் நீண்ட நாட்கள் உலகில் வாழ்வதற்கு நோய் வராமல் நம்மை பாதுகாக்க வேண்டும். அவ்வாறு நோய் வந்தாலும் அந்நோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு நோயிலிருந்து காத்துக்கொள்ள யோகா அவசியம். இன்றைய யுகத்தில் அனைவரின் உடலும், மனமும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றது. இவ்வாறு உடல், மனதை பாதுகாத்துக்கொள்ள யோகாசனம் சிறந்த பயிற்சியாகும். எல்லோரது வீட்டிலும் செய்யக்கூடிய ஆசனங்கள் எண்ணற்றவை உள்ளன. அந்த வகையில் நாம் தெரிந்துகொள்ளும் ஆசனம் ஹனுமானாசனம்

ஏன் இப்பெயர்?

ராமதூதனான ஹனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதால் இதற்கு ஹனுமானாசனம் என்று பெயர் பெற்றது.

எப்படி செய்ய வேண்டும்.

முதலில் குத்துகாலிட்டு உட்காரவும். பிறகு வலது காலை பின் பக்கமாக நீட்டவும். இரண்டு உள்ளங்கைகளையும் உடலை ஒட்டியபடி பக்கவாட்டில் தரையில் பதிக்கவும். பிறகு இடது காலை கொஞ்சம் கொஞ்சமாக முன் பக்கமாக நீட்டவும்.

அடுத்து இடுப்புப் பகுதியில் நன்கு அழுத்தத்தைக் கொடுத்து தொடைகள் நன்கு தரையில் பதியும்படி செய்யவும். இந்த நிலையில் வலது காலை பின்நோக்கி நீட்டி முழங்காலில் வளைவு இல்லாமல் தரையில் நன்கு பதிக்கவும்.

அதே போல் இடது கால் தொடையின் அடிப்பகுதி, கெண்டைக்கால், குதிக்கால் மூன்றும் தரையில் நன்றாக பதிந்திருக்க வேண்டும். அதாவது வலது கால் முனையிலிருந்து இடது கால் முனை வரை ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். பிறகு இரண்டு கைகளையும் வணக்கம் தெரிவிப்பது போல் ஒன்று சேர்த்து மார்பில் வைக்கவும்.

முகமும் மார்பும் இடது காலைப் பார்த்தபடி இருக்கவும். முடிந்தால் கூப்பிய கைகளை தலைக்கு மேலே தூக்கி நீட்டவும். இந்த நிலையில் எவ்வளவு நேரம் இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் சாதாரண சுவாசத்தில் இருக்கவும். பிறகு கால்களை மாற்றி மேலே செய்தது போல செய்யவும்.

என்ன பயன்கள்

முகதுகு தண்டுவட எலும்புகளும், தண்டுவடமும் உறுதி தன்மை அடைவதற்கு இந்த ஆசனம் உறுதி செய்கிறது. இடுப்பு எலும்புகளுக்கு வன்மை அளிக்கிறது. தொடைப்பகுதி தசைகளை வனஙமை அடையச் செய்கிறது.

கழுத்து எலும்பு தேய்வை கட்டுபடுத்தி கழுத்து எலும்பு மற்றும் நரம்புகளுக்கு உறுதி அளிக்கிறது. கணையம் கல்லீரல் மண்ணீரல் இவற்றின் சுரப்புத்தன்மையை சீர் செய்கிறது. பசியை தூண்டி ஜீரண மண்டலத்தின் இயக்கத்தை சரி செய்கிறது. கண்களின் பார்வையைக் கூர்மையடையச்செய்கிறது. வயிற்றுப்பகுதியில் ஏற்படும் அதிகப்படியான தசைப்பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேருதான் சிறு! பலன்கள் பெரு! (மருத்துவம்)
Next post கல்யாணத்துக்கு ரெடியா?! # Premarital Special Counselling!! (மருத்துவம்)