உஷ்ட்ராசனம்!! (மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 38 Second

உலகமயமாக்கல் எனும் சூழலினால் மனிதன் தினமும் பல்வேறு கடினமான வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பல்வேறு மாறுபட்ட உணவுப் பழக்க வழக்கங்களினால் புதிய புதிய நோய்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். கடினமான. அவசர வேலைகளினால் மிகுந்த மன அழுத்தத்திற்கும், உளைச்சலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். இவ்வாறு பாதிப்பிற்கு உள்ளாகும், மக்கள் எளிய மருத்துவ முறைகளினால் விடுபட, யோகாசனங்கள் நல்வழியை காட்டுகிறது. இந்த யோகாசனங்களினால் உடலும் மனமும் வன்மையடைந்து நாம் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.

உடலையும் மனதையும் காக்க வேண்டும் என்பதை திருமூலர் பெருமான் திருமந்திரத்தில் பின்வரும் பாடலை கூறுகிறார்.

உஷ்ட்ராசனம் பெயர் காரணம்

உஷ்ட்ரம் என்றால் ஓட்டகம். இந்த ஆசனத்தை செய்யும் போது ஓட்டகத்தைப் போன்று தோற்றம் தருவதால் இதற்கு உஷ்ட்ராசனம் என்று பெயர்.

விதிமுறைகள்

ஆண், பெண் பாகுபாடின்றி வயது பாகுபாடின்றி இளையோர் முதல் பெரியோர் வரை அவர்களது உடல் அமைப்பிற்கும் ஏற்றவாறு இவ்வாசனத்தை செய்யலாம்.

மலசலம் கழித்த பின்னரே இதை செய்ய வேண்டும். உணவு உண்டபின் ஆசனம் செய்யலாகாது. இவ்வாசனம் செய்யும் போது உடலில் வலி ஏற்பட்டால் ஆசனம் செய்வதை நிறுத்தி விட வேண்டும். எந்த ஒரு உறுப்பும் இறுக்கம் இன்றி தசைகள் தளர்ந்த நிலையில் இருக்க வேண்டும். பயிற்சியின் போது வாயினால் மூச்சு விடக்கூடாது. உடல் குறுகுதலை தவிர்க்க வேண்டும். ஆடைகள் தளர்ச்சியாக இருத்தல் நல்லது. ஆசனம் நிதானமாகவும் மெதுவாகவும் படிப்படியாகவும் செய்ய வேண்டும். இவ்வாசனம் செய்ய காலை 4 மணி முதல் 6 மணி வரை செய்யலாம்.

ஆசனம் செய்யக்கூடாதவர்கள்

இதய நோயாளிகள், அதிகுருதி அழுத்தம் உள்ளவர்கள், முதுகுதண்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் இவ்வாசனத்தை செய்யக்கூடாது.

எப்படி செய்ய வேண்டும்.

முதலில் தரையில் முட்டி போட்டு நிற்கவும். அதாவது முழங்கால்களும் கணுக்கால்களும் தரையில் படுமாறு நிற்கவும். இரு பாதங்களும் மேல்நோக்கி இருக்க வேண்டும். இருபாதங்களையும் ஒன்றோடொன்று சேர்த்து வைக்கவும். மெதுவாக மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்துக் கொண்டே பின்பக்கமாக சாய வேண்டும். இடது உள்ளங்கையை இடது கால் பாதத்திலும் வலது உள்ளங்கையை வலது கால் பாதத்திலும் வைக்கவும்.

முதுகை எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு நன்றாக வளைக்கவும். தலையை பின்பக்கமாக தொங்கவிடவேண்டும். தலையின் உச்சிப்பகுதி தரையை பார்த்தபடி இருத்தல் சிறப்பானது. தொடைப்பகுதி உள்பக்கமாக சாய்ந்திருக்கக் கூடாது. தரைக்கு செங்குத்தாக இருக்க வேண்டும். இந்த நிலையில் சுமார் 30 நிநாடிகள் இருந்த பின் சாதாரண நிலையில் மூச்சு விடவும். பிறகு கைகளை ஒவ்வொன்றாக மேலே எடுத்து இயல்பு நிலைக்கு திரும்பவும்.

உஷ்ட்ராசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

இவ்வாசனம் முதுகு தண்டை உறுதி செய்வதில் மிக முக்கியமானதாகும். கல்லீரல், மல்லீரல் இவற்றின் இயக்கங்களை சீராக்குகிறது. எளிதில் உணவுகளை ஜீரணிக்க செய்கிறது. குடல் இறக்கத்தை சரிசெய்து உணவு செரிமானத்தை சீராக்குகிறது. கூன் விழுந்த முதுகுடன் இருப்பவர்கள் முதுகை சீராக்க உஷ்ட்ராசனம் உதவுகிறது. கணையத்தின் சுரப்பு தன்மையை சீராக்குகிறது.

தோள் மூட்டுகளில் உள்ள குறைகளை தீர்க்க உதவுகிறது. கண்களின் பார்வை திறனை அதிகரிக்க செய்கிறது. இதயத்தை வன்மையடையச் செய்து இரத்த ஒட்டத்தை சீராக்குகிறது. கழுத்துபகுதி தசைகளை வலுப்படுத்துகிறது. மார்பு பகுதியை விரிவடையச் செய்து மார்பு தசைகளை வன்மையடையச் செய்கிறது. சிறுநீரக பிரச்சனைகளை சீர் செய்கிறது. நரம்பு தளர்ச்சியை நீக்கி புத்துணர்வு அளிக்கிறது. ஞாபக சக்தி, மன ஒருமைப்பாடு இவற்றை அதிகரிக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் ஆச்சரியமான நிகழ்வுகள்!! (வீடியோ)
Next post மலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க!! (அவ்வப்போது கிளாமர்)