முதியோருக்கான உணவுமுறை!! (மருத்துவம்)

Read Time:8 Minute, 41 Second

இளமை என்ற ஒன்று இருந்தால் நிச்சயம் முதுமையும் வரும். இதற்காக நிறைய ஆன்டி ஏஜிங் க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், அதற்கான தீர்வு சிறிது நாட்கள் மட்டும்தான். இந்த பிரச்னைக்கு உணவுகளால் தீர்வு காண முடியும். நல்ல ஆரோக்கியமான இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுகளைச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள டாக்ஸ்பின்களை வெளியேறி உடலே நன்கு பொலிவோடு அழகாக மின்னும். ‘இருப்பினும் சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவை சாப்பிட்டால் அல்லது சாப்பிடாமல் இருந்தால் பல்வேறு பிரச்னைகள் உடம்பில் ஏற்படும்.

வயதானவர்களுக்கு ஃபோலேட் குறைபாடு(Folate deficiency), ரத்த சோகை மற்றும் டிமென்ஷியா குறைபாடு ஏற்படும். ஜிங்க் பற்றாக்குறை (Zinc deficiency)-யினால் அவர்களுக்கு மனநோய் உண்டாகும் மற்றும் பசி ஏற்படாது. பொட்டாசியம் குறைபாடு உண்டாவதினால் மனதில் குழப்பம் ஏற்படும். மற்றவர்கள் மீது அல்லது தன் மீதுகூட அக்கறையில்லாமல் இருப்பார்கள். வெளிமம் குறைபாடு(Magnesium deficiency) காரணமாக அடிக்கடி எரிச்சல் உண்டாகும். வைட்டமின் டி குறைபாடு (Vitamin D deficiency) காரணமாக எலும்புகள் பலவீனமாக இருக்கக் கூடும்.

இதனால் Osteoporosis உண்டாகும். எலும்பு முறிவு எளிதில் ஏற்படும். இதில் அதிகபட்சமாக பெண்கள் பாதிப்பு அடைகிறார்கள். புரதம், ஜிங்க், செலினியம், வைட்டமின் பி6 இந்த ஊட்டச்சத்து உணவை குறைவாக எடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்பு உண்டாகும்.
வயதானவர்களில் ஏற்படும் நோய்கள் இதய நோய், சர்க்கரை நோய், உடல் பருமன், Osteoporosis, ரத்த சோகை, வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் ஆசிட் குறைபாடு ஏற்படும். இதனை சரி செய்ய வேண்டும் என்றால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

வயதானவர்கள் சரியாக உணவு சாப்பிட முடியாததற்கு காரணங்கள்

தனிமை, ஒதுக்கப்படுவது, குறைவான வருமானம், பல் பிரச்னை, நாக்கில் சுவையில்லாமல் போவது, நோயினால் பாதிப்பு அடைந்து இருப்பது, உளவியல் மாற்றங்கள், இரைப்பை குடல் பிரச்னைகள், பற்கள் பிரச்னை, ஈறுகளில் தொந்தரவு போன்ற காரணங்களால் சரியாக சாப்பிட முடிவதில்லை. முதுமையில் உணவு மென்று சாப்பிடுவதில் பிரச்னை ஏற்படுவதால் செரிமான மண்டலத்தில் பாதிப்பு உண்டாகும். நாக்கில் சுவை குறைந்துவிடும். வாசனை தெரியாது. இதனால் பசி குறைந்துவிடும். உணவின் அளவும் குறைந்துவிடும்.

சுவை அரும்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், உணவு சுவையாக இருந்தால்கூட அந்த சுவை அவர்களுக்குத் தெரியாது. எச்சில் சுரப்பதும் குறைவாக இருப்பதால் வாய் வறட்சி உண்டாகும். இதனால் உணவு விழுங்குவதில் பாதிப்பு ஏற்படும். செரிமான மண்டலத்தில் சுரக்கும் அமிலம் குறைவாக இருப்பதால் உணவு சாப்பிட்டால் சீக்கிரமாக செரிமானம் ஆகாது. இதயம் மற்றும் சிறுநீரக பிரச்னைகள் ரத்தக் குழாய்களை குறுக்கிவிடும் மற்றும் நெகிழ்ச்சி இழப்பு(Loss of elasticity) ஏற்படும். இதய வெளியீட்டில் சரிவு ஏற்படுவதுடன் ரத்த ஓட்டத்திலும் பாதிப்பு உண்டாகும்.

குறைவாக ரத்த ஓட்டம் இருப்பதால் செரிமானம் ஆவதிலும், உறிஞ்சுதலிலும் ஊட்டச்சத்தை பிரிச்சு உடலில் தருவதிலும் பிரச்னை ஏற்படும். ரத்த ஓட்டம் குறைவாக ஏற்படுவதினால் நெஃப்ரான்களின் செயலும் குறைந்து கழிவுகளை வெளியேற்றுவதில் பிரச்னை உண்டாகும். வயதானாலே எலும்புகளில் பிரச்னை ஏற்படும். கனிமங்கள் குறைந்துவிடும். ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும். இதனால் எலும்புகள் பலவீனமாக இருக்கும். எளிதில் உடைந்துவிடும். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு உணவுமுறையை மாற்ற வேண்டும்.

முதியோருக்கான உணவு மாற்றங்கள்

மூன்று வேளை உணவு உண்ண வேண்டும். அளவாக சாப்பிட வேண்டும். எளிதில் செரிக்கும் உணவை சாப்பிட வேண்டும். ஊட்டச்சத்து மிகுந்த உணவை சாப்பிட வேண்டும். முதியவர்களை உற்சாகப்படுத்தி சாப்பிட வைக்க வேண்டும். உணவு சாப்பிடும்போது தட்டில் அடிக்கடி உப்பு தூவி உண்ணக்கூடாது. அதிக அளவு மசாலா சேர்க்கக் கூடாது. பற்கள் இல்லாமல் இருப்பது மற்றும் ஈறுகள் பிரச்னையினால் சரியாக சாப்பிட முடியாது. அதனால் உணவின் பதம் கொஞ்சம் மிருதுவாக சாப்பிடும் பதத்தில் இருக்க வேண்டும்.

உணவில் மாவுச்சத்து அதிகமாக இருக்கக் கூடாது. புரதம், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள், கால்சியம் நிறைந்த உணவுகளை சேர்க்க வேண்டும்.
எச்சில் சுரப்பது குறைவாக இருப்பதினால் உணவை விழுங்குவதில் பிரச்னை இருக்கும். அதனால் அவர்களுக்கு சூப், கிரேவி, தயிர், பால் போன்ற உணவுகளைத் தரலாம். நார்ச்சத்து மிகுந்த உணவை சாப்பிடும்போது அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் ஒரு நாளைக்கு பருக வேண்டும்.

இல்லையென்றால் செரிமானத்தில் பிரச்னை ஏற்படும். பழங்கள் மற்றும் காய்கறிகள் உணவில் சேர்க்க வேண்டும். இரும்புச்சத்து உணவை சாப்பிட வேண்டும். கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், ஆன்டி ஆக்ஸிடனட் நிறைந்த உணவை சாப்பிட்டால் நோய்களில் இருந்து தப்பிக்க முடியும். முதியோரின் உணவு விரும்பும் (likes) மற்றும் பிடிக்காதவை (dislikes) தெரிந்து உணவு அதற்கேற்ப தர வேண்டும். சிலருக்கு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் இருந்தால் அதற்கேற்ற உணவைத்தர வேண்டும்.

குடிப்பழக்கம், புகை பிடிப்பது தவிர்க்க வேண்டும். Fortified foods உணவில் சேர்க்க வேண்டும். பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள், கொழுப்பு ஆகியவை குறைவாக இருக்க வேண்டும். இதனால் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி சத்து கிடைக்கும். எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு நல்லது.
புரதச்சத்து நிறைந்த கறி, மீன், கோழிக்கறி, முட்டை, நட்ஸ், பருப்பு வகைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு உணவுகளை நன்கு தேர்ந்தெடுத்து உண்ண தர வேண்டும். ஏஜிங் மற்றும் நோய்களில் இருந்து அவர்கள் பாதுகாக்கப்பட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வரும் முன் காப்போம்!! (மருத்துவம்)
Next post சிவப்பு மஞ்சள் பச்சை… மறக்க முடியாத அனுபவம்!! (மகளிர் பக்கம்)