“தீரா காதல்” – முதற்பார்வை வெளியீடு! (சினிமா செய்தி)

Read Time:2 Minute, 15 Second

SS Production தயாரிப்பில் Reji Selvarasa ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பில் Shameel J மற்றும் Shazna Shameel நடிப்பில் Satheeskanth வரிகளில் Shameel J குரல் மற்றும் இசையில் Sri Shanker இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் #Theera_Kadhal காணொளிப்பாடலின் முதற்பார்வை மற்றும் முன்னோட்டம் கடந்த 09 ஆம் திகதி அன்று, நெடுஞ்சாலை மாயா புகழ் தென்னிந்திய நடிகர் ஆரியினால் வெளியிடப்பட்டது.

இந்த பாடலின் சொந்தக்காரரான ஷமீல், 3 ஜனாதிபதி விருதுகள் உள்ளிட்டு 12 தேசிய விருதுகளை சிறுவயதிலேயே பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, பாடலில் சொல்லிசை மற்றும் நடிப்பில் பங்கெடுத்த ஷஸ்னா, 3 முறை தொடர்ச்சியாக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதுகளையும், இப்பாடலை அழகான வரிகளால் மேலும் அழகு சேர்த்த , பாடலாசிரியர் சதீஷ்காந்த், சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை ஒரு முறையும் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சம்.

இப்பாடலின் முன்னோட்டமும் முதற்பார்வையும் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் பாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இலங்கை தமிழ் இசைத்துறையில் Trend Setter ஷமீலின் “தீரா காதல்” பாடல் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள். ஷமீல் தற்போது , நடிகர் ஆரி நடித்து வெளிவந்த ” நாகேஷ் திரையரங்கம்” திரைப்படம் மற்றும் ஒரே படமாக்கலில் கின்னஸ் உலக சாதனை புரிந்த இயக்குனர் இஷாக்கின் அடுத்த திரைப்படத்துக்கு இசையமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மசூதிக்காக எந்த நிலமும் தேவையில்லை !! (கட்டுரை)
Next post ஆச்சரியமான மீன்கள் !! (வீடியோ)