மசூதிக்காக எந்த நிலமும் தேவையில்லை !! (கட்டுரை)

Read Time:2 Minute, 42 Second

அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பினருக்கு 5 ஏக்கர் நிலம் அளிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து 5 ஏக்கர் நிலமும் தேவையில்லை அதையும் ராமர் கோவிலுக்கே வழங்கத் தயாராக இருக்கிறோம் என்று ஜாமியாத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மௌலானா பத்ஷா கான் தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி-ராம ஜென்ம பூமி வழக்கில் இந்த அமைப்பும் முஸ்லிம்கள் தரப்பில் இருந்தது. இந்நிலையில் அமைப்பின் தலைவர் மௌலானா பத்ஷா கான் கூறும்போது, “பாபர் மசூதி நிலத்துக்காகவே சட்ட ரீதியாக வழக்காடினோம். வேறொரு நிலத்துக்காக அல்ல. வேறு எங்கும் மசூதிக்காக எந்த ஒரு நிலமும் எங்களுக்குத் தேவையில்லை. இந்த 5 ஏக்கர் நிலத்தையும் கூட ராமர் கோவிலுக்கு வழங்கத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

“நாங்கள் நிலம் வாங்கி அதில் மசூதிக் கட்டிக் கொள்வோம். நாங்கள் எந்த ஒரு அரசையும் இதற்காக நம்பியிருக்கவில்லை. நீதிமன்றமோ, அரசோ எங்கள் உணர்வுகளை மட்டுப்படுத்த வேண்டும் என்று விரும்பினால் 5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட அந்தப் பகுதிக்குள்ளேயே தர வேண்டும்” என்று மௌலானா ஜலால் அஷ்ரப் என்ற உள்ளூர் மதகுரு தெரிவித்தார்.

இந்த வழக்கில் முக்கிய மனுதாரரான இக்பால் அன்சாரி என்பவர் கூறும்போது, “அவர்கள் எங்களுக்கு நிலம் அளிக்க வேண்டும் என்று விரும்பினால், எங்கள் வசதிக்கேற்பவே அளிக்க வேண்டும். அதாவது அந்த 67 ஏக்கர் நிலப்பகுதியில்தான் அளிக்க வேண்டும்” என்றார்.

அயோத்தியில் உள்ள முஸ்லிம் சமூக ஆர்வலர் டாக்டர் யூசுப் கான், “எங்கள் சமயத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அயோத்தியில் நிறைய மசூதிகள் உள்ளன. உச்ச நீதிமன்றம் ராமர் கோவில் சார்பாக தீர்ப்பளித்து விட்டதால் இனி இந்த விவகாரம் முடிந்த ஒன்று” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எனக்கு கிடைத்த உணவு தேவதைகள்!! (மகளிர் பக்கம்)
Next post “தீரா காதல்” – முதற்பார்வை வெளியீடு! (சினிமா செய்தி)