முருங்கையின் மருத்துவ மகத்துவம்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 24 Second

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைக் கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும். முருங்கை கீரையில் இரும் புச்சத்து, சுண்ணாம்பு சத்து கணிசமாக உள்ளது. முருங்கை கீரையை வேகவைத்து அதன்சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற் படும் மலச்சிக்கல் நீங்கும். முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும் பெருகும்.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கிவிட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாள்ப் புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கைகண்டமருந்து.

முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண் நோய் ஆகி யவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.வாரத்தில் ஒரு முறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சீறுநீரும் சுத்தம் அடையும். வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல்,மூட்டு வலியையும் போக்க வல்லது.

கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம் தாய்ப் பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்பு சளி போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது.ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

முருங்கைக் கீரையில் உள்ள வைட்டமின்கள்

முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது. புரதம் 6.7 சதவிதமும், கொழுப்பு 1.7 சத விதமும், தாதுக்கள் 2.3 சதவிதமும் மற்றும் கார்போஹைட்ரேட்கள் 12.5 சதவிதமும் உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முருங்கையின் மருத்துவ பயன்கள்!! (மருத்துவம்)
Next post பொறுத்தார் பூமி ஆள்வார்! (வீடியோ)