கடற்கரையில் மீண்டும் தோன்றிய பின்லேடன் !! (உலக செய்தி)

Read Time:1 Minute, 54 Second

இங்கிலாந்தின் கடலோர பகுதியில் உள்ளது சசெக்ஸ் நகரம். அழகிய கடற்கரைகளை கொண்ட இந்த பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம். கிழக்கு லண்டனின் பிரெண்ட்ஃபோர்டு நகரை சேர்ந்தவர் டெப்ரா ஆலிவர். இவர் தனது 42 வது திருமண நாளை கொண்டாடுவதற்காக கிழக்கு சசெக்ஸ் பகுதியில் உள்ள வின்செல்சியா கடற்கரைக்கு தனது கணவருடன் சென்றுள்ளார்.

கடற்கரையில் கிடந்த சங்குகளையும், சிறு சிறு சிப்பிகளையும் வேடிக்கை பார்த்த வண்ணம் ஆலிவர் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது மனித முகம் போன்று இருந்த சிப்பி ஒன்றை கண்டறிந்தார். அது கிட்டத்தட்ட ஒசாமா பின்லேடனைப் போலவே இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கோடிக்கணக்கான சிப்பிகள் கடற்கரையில் கிடந்தன. அங்கு உலாவிக்கொண்டிருந்த போது திடீரென மனித முகம் போன்று உருவம் கொண்ட சிப்பி என் கவனத்தை ஈர்த்தது. பின்பு அதை கையில் எடுத்து உன்னிப்பாக பார்க்கையில், கொல்லப்பட்ட பயங்கரவாத இயக்க தலைவன் பின்லேடனைப் போன்று தோற்றமளித்தது. அதை ஒரு நினைவுப்பொருளாக எடுத்து வந்தேன். பின்லேடனின் உடல் கூட கடலில் தான் வீசப்பட்டது’ என தெரிவித்தார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதி, பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 6 மாதம் சிறை, 5 இலட்சம் அபராதம்!!! (உலக செய்தி)
Next post பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்? (சினிமா செய்தி)