தளர்ந்துபோகும் ஐரோப்பிய கட்டமைப்பு !! (கட்டுரை)
ஐரோப்பிய ஒன்றிய கட்டமைப்பு வெகுவாகவே தளர்ச்சிப்போக்கை காட்டத் தொடங்கியுள்ளது. பிரான்ஸ், ஜேர்மனியின் அதிகரித்துவரும் அதிகார, கொள்கை முரண்பாடுகள் மற்றும் தலைமைத்துவ சமரசங்களால் ஒவ்வொரு முறையும் முரண்பாடுகளைக் களைய முற்படுத்தல், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைத்து நிற்கும் பிடிமானத்தை தளரச்செய்கின்றது. ஐரோப்பிய வெளிவிவகாரக் கொள்கை அண்மைக்காலங்களில் பெருகிய முறையில் பகுதியளவு மற்றும் துண்டு துண்டாகி வருகிறது. மேலும் பல புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது ஐரோப்பிய ஒன்றியத்தை நிர்வகிப்பதில் புதுச்சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தினுள்ளேயே ஒரு ஒருங்கிணைந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு ஒருமித்த கருத்தை எட்டுவது இங்கு மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது.
ஐரோப்பிய ஊடகங்களின் அறிக்கையின்படி, பல ஐரோப்பிய கொள்கைவாதிகள், ஐரோப்பிய ஒன்றியம் 28 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் ஆளும் குழுக்களுக்கு பிரிக்கப்பட்ட அதிகாரத்துவ செயற்பாடுகளை வழங்கத் தயாராக இல்லை என கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்த எதிர்மறைக் கருத்து அண்மையில் நடந்த தேசிய தேர்தல்களால் மிகவும் வெளிப்படையாக காட்டப்பட்டதுடன், இது ஐரோப்பிய நாடாளுமன்றம் கடுமையாக பிளவுபட வழிவகுத்திருந்தது. குறிப்பாக, பிரான்ஸ், றோமானியா மற்றும் ஹங்கேரி ஆகியவை ஐரோப்பிய ஆணையர்களுக்கான வேட்பாளர்களை நிராகரித்த பின்னர், குறித்த அதிகார பிரச்சினைக்கான இக்குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியது. இதன் விளைவாக, புதிய தோற்றமுடைய ஐரோப்பிய ஆணையம் முதலில் திட்டமிட்டபடி கடந்த வெள்ளிக்கிழமைக்குப் பதிலாக அடுத்த மாதம் முதலாம் திகதிக்கு முன்பே தனது செயற்பாடுகளை தொடங்க வழிவகுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் புதுப்புது பிரச்சினைகள் மற்றும் சவால்களை எதிர்கொண்டாலும், குறித்த பிரச்சினைகளை பிளவுபட்டு இருக்கும் ஒன்றியத்தால் தீர்க்க முடியவில்லை. வெளியில் இருந்து, சீனாவும், ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பா மீது அழுத்தத்தை அதிகரித்து வருகின்றன, இது ரஷ்யாவுடன் ஆக்கபூர்வமான உரையாடலை மீட்டெடுப்பதற்கான புறநிலை தேவையை உணர்கிறது. உள்ளிருந்து, ஐரோப்பிய ஒற்றுமையின் அடிப்படை அடித்தளங்கள் தேசிய கொள்கைகளை ஆதரிப்பவர்களால் தொடர்ந்து தாக்கப்படுகின்றன. ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெய்ன் மற்றும் பால்டிக் நாடுகள் உட்பட தாராளமய மதிப்புகளை முறையாக ஏற்றுக்கொள்ளும் நாடுகள் கூட ஐரோப்பிய திட்டத்தின் எதிர்காலம் குறித்து உடன்படவில்லை. இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் இத்தாலியில் கூட்டணி அரசாங்கத்தின் சரிவு, ஜேர்மனியில் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாம் இடத்தைப் பிடித்த ஜேர்மனி கட்சிக்கான தீவிர வலதுசாரி மாற்று என்பன வாக்காளர்கள் பலரின் விதிமுறைகளையும் நிறுவனங்களையும் மாற்றுவதற்கான அடிப்படை விருப்பத்தை பிரதிபலிக்கிறது என்றே கருதப்பட வேண்டிய தேவை உள்ளது.
ஐரோப்பிய வடக்கு மற்றும் தெற்கை பொருளாதார ரீதியாக பிரிக்கும் ஒரு பிளவு கோடு இன்றைய காலப்பகுதியில் மிகவும் வெளிப்படையாகவே காணப்படுகின்றது. மேலும் கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பா இடையே இயங்கும் ஒரு மனிதாபிமான, சுற்றுச்சூழல் மற்றும் கருத்தியல், ஐக்கிய அமெரிக்க விரோதத்தின் வளர்ந்து வரும் அறிகுறிகளுடன் இணைந்து, கண்டத்தின் எதிர்காலம் குறித்து ஐரோப்பிய ஸ்தாபனத்துக்கு இருத்தலியல் கேள்விகளை புறநிலையாக எழுப்புகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் என்ன போக்கை எடுக்க வேண்டும்? மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் “குறுகிய வரையறுக்கப்பட்ட பார்வை” “பரந்த-ஐரோப்பிய” யோசனைகளை குறைத்து, உண்மையான அரசியலை “தந்திரோபாய நடைமுறைவாதத்தின்” நிலைக்கு கொண்டு வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் ஒரு சுதந்திரமான நாடுகளின் கூட்டமைப்பாக மாற்றப்பட்டு, ஒரு பொதுவான சுதந்திர-வர்த்தக மண்டலமாக ஒன்றிணைக்கப்படுகின்றமைக்கு தொடர்ச்சியான எதிர்ப்பு இருக்கின்றமை, உலக அரசியலில் ஐரோப்பிய ஒன்றியம் என்ன வகையான பங்கை வகிக்க முடியும் என்ற கேள்விக்கு விடை பகர்வதாக இல்லை.
இந்நிலையில், ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவை ஐரோப்பிய ஒன்றிய கூட்டாட்சி மயமாக்கலை நோக்கி நகர்கின்றன. இந்த மூலோபாயம் முதன்மையாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது என்பதுடன் இறுதியில் அரசியல் முடிவுகளை செயல்படுத்துவதில் கருவியாக மாறும் என்பதே இவ்விரண்டு நாடுகளினது எதிர்பார்ப்பாகும். எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருக்கான வேட்பாளரின் கோடைகாலத் தேர்தல் பல தசாப்தங்களாக பழமையான நடைமுறையிலிருந்து ஒரு இடைவெளியைக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில், இன்றைய நிலை, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற அதிக வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பிரான்ஸுக்கும், ஜேர்மனிக்கும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களாக தங்கள் பங்குகளை வகிப்பதில் உடன்பட வாய்ப்பளிக்கிறது.
எவ்வாறாயினும், பிரான்ஸ்-ஜேர்மனி முரண்பாடுகள் பெருகிய முறையில் அவற்றின் தலைமைத்துவத்தை பிளவுபடவே செய்கின்றது.
பிரான்ஸும், ஜேர்மனியும் பிரித்தானியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு புதிய உடன்படிக்கையை வழங்குவதில் சில முரண்பாடுகளை தமக்கிடையே பேணுகின்றன.
தவிர, அனைத்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களின் ஒருமித்த முடிவும் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய ஒரு உண்மையான இராணுவ சக்தியாக பிரான்ஸ் தன்னை வடிவமைத்து, ஒரு ஐரோப்பிய இராணுவமாக தன்னை கட்டமைக்க முற்படுகின்றது. ஜேர்மனி, அதன் பங்குக்கு, முயற்சிகளின் ஒருங்கிணைப்பை மய்யமாகக் கொண்ட ஒரு உருவமற்ற கட்டமைப்பாக இதைப் பார்க்கிறது.
ஐரோப்பா பகுதிக்குள் மேலும் ஐரோப்பிய நாடுகளை ஒருங்கிணைப்பதை பிரான்ஸ் ஆதரிக்கின்ற அதே நேரத்தில் ஐரோப்பாவின் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியை தவிர்ப்பதற்காக ஜேர்மனி குறித்த பிரான்ஸின் நிலையை விரும்பவில்லை.
ஐரோப்பாவுக்குள் கூடுதல் புவிசார் அரசியல் செல்வாக்கைப் பெறுவதற்கான விருப்பமாக உலக சக்தியாக தனது பங்கை மீண்டும் பெறுவதற்கான பிரான்ஸின் முயற்சியை ஜேர்மனி தனக்கான போட்டியாகவே கருதுகின்றது. மேலும், ஜேர்மனி, வளர்ந்து வரும் உள்நாட்டு கொள்கை சிக்கல்களுக்கும் புதிய வெளிப்புற சவால்களுக்கு உறுதியான பதிலை நிரூபிக்க வேண்டிய தேவைக்கும் இடையில் தனது வெளிவிவகார கொள்கையை திட்டமிடுவதில் முன்னெச்சரிக்கையாய் இருப்பது, இரண்டு தலைமைத்துவ நாடுகளுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்துகின்றது.
இந்நிலைமைகள், ஒட்டுமொத்தமாக, ஒரு கொள்கை அல்லது கொள்கை நடைமுறைப்படுத்தலில், ஒரு ஐக்கியப்பட்ட ஐரோப்பிய உடன்பாடுகளை எட்டவோ அல்லது, குறிப்பாக உலகளாவிய விவகாரங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முடியும் என்பதை உறுதிசெய்யும் அளவுக்கான சக்தியும் தலைமைத்துவமும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லை என்பதையே இப்போதைக்கு எமக்கு வெளிப்படையாக காட்டுவதாய் உள்ளது.
Average Rating