கத்தரி விருந்து!! (மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 35 Second

எல்லா மாதங்களிலும் கிடைக்கக்கூடிய காய்களில் கத்தரிக்காயும் ஒன்று. கத்தரிக்காயை பலவிதமாகச் சேர்த்து சாம்பார் வைப்பார்கள். ஆனால் கத்தரிக்காய் தனித்து நின்றே அற்புதமான சுவையைத் தரும். கத்தரிக்காயால் செய்யக்கூடி சில சுவையான உணவுகள் தோழியருக்காக…

கத்தரிக்காய் கொத்தமல்லி காரம்

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் – 1/4 கிலோ, பச்சை மிளகாய் – 6, இஞ்சி – கொஞ்சம், கொத்தமல்லி – 1 கப், உப்பு – தேவைக்கு, சீரகம் – 1 ஸ்பூன், எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை

கத்தரிக்காயை நாலாக வெட்டிக் கொள்ளவும். அதாவது உள்ளே மசாலா ஸ்டப் செய்வது போல் வெட்டவும். கொத்தமல்லி, சீரகம், இஞ்சி, உப்பு, பச்சை மிளகாய் இவை எல்லாம் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இந்த மசாலா கலவையை கத்தரிக்காயினுள் ஸ்டப் செய்யவும். குக்கரில் எண்ணையை சேர்த்து சூடானதும், அதில் கத்தரிக்காயை சேர்த்து மூன்று விசில் வந்ததும் இறக்கவும். அல்லது கடாயில் எண்ணை சூடானதும் கத்தரிக்காயை சேர்த்து இரண்டு பக்கம் நன்கு சிவக்க எடுக்கவும். இது கறி சாதத்துக்கு சுவையாக இருக்கும்.

கத்தரி மசாலா கறி

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் – 1/4 கிலோ, எண்ணெய் – 4 கரண்டி, வெங்காயம்-2, பூண்டு உரித்தது – 4, கசகசா – 1 ஸ்பூன், ஏலக்காய் – 1, சிகப்பு மிளகாய் – 4, உப்பு – தேவைக்கு.

செய்முறை

கத்தரிக்காயை நாலாக வெட்டி எண்ணெயில் பொரித்து தனியே வைக்கவும். கசகசா, ஏலக்காய், வெங்காயம், பூண்டு, மிளகாய் தேவைக்கேற்ப உப்பு கலந்து நன்றாக மிக்சியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் இந்த மசாலாவை சேர்த்து வதக்கவும். மசாலா பச்சை வாசனை போகும் வரை வதங்கியதும், பொரித்த கத்தரிக்காயினை அதில் சேர்த்து நன்கு பிரட்டவும். இந்த கறி சப்பாத்திக்கு உகந்த சைட் டிஷ்.

கத்தரி குருமா கறி

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் – 1/4 கிலோ, தனியா – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 6, சீரகம் – 1/2 டீஸ்பூன், கசகசா – 1/2 டீஸ்பூன், லவங்கம் – 2, வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது, தேங்காய் துருவல் – 1 கப், எண்ணெய் – 4 கரண்டி, தக்காளி – 1/4 கிலோ.

செய்முறை

கத்தரிக்காயை நான்காக வெட்டிக் கொள்ளவும். தனியா, பச்சை மிளகாய், சீரகம், கசகசா, லவங்கம், வெங்காயம், தேங்காய் இவை எல்லாம் வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும். ஆறியதும் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். இந்த மசாலாவை கத்தரிக்காய் நடுவே ஸ்டப் செய்து கடாயில் எண்ணை சேர்த்து நன்றாக வேகவைத்து தனியே வைக்கவும். தக்காளியை வேக வைத்து தோலுரித்து அரைக்கவும். கடாயில் எண்ணை சேர்த்து அதில் அரைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக கொதித்து வரும் போது கத்தரிக்காயினை சேர்த்து சிறிளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் காரம் சேர்க்கவும். பிறகு 10 நிமிடம் கொதித்த உடன் இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு சுவையாக இருக்கும்.

கத்தரி வெந்தயக்கறி

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் – 1/4 கிலோ, கடலை பருப்பு – 2 ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 2 ஸ்பூன், கா.மிளகாய் – 6, வெந்தயம் – 1 ஸ்பூன், இஞ்சி பேஸ்ட் – 1 ஸ்பூன், உப்பு – தேவைக்கு, எண்ணெய் – 3 கரண்டி, மஞ்சள் – 1 ஸ்பூன், புளி – சிறிதளவு, தனியா – 1 டீஸ்பூன், சீரகம் – 1/2 டீஸ்பூன்.

செய்முறை

கத்தரிக்காயை நாலாக வெட்டிக் ெகாள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் கத்தரிக்காயை சேர்த்து மூடி போட்டு இருபக்கம் நன்றாக வேகவிடவும். மற்றொரு கடாயில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய், தனியா, சீரகம், வெந்தயம், பெருங்காயம், புளி, உப்பு நன்றாக வறுத்து பொடித்துக் கொள்ளவும். இந்த பொடியை வேக வைத்த கத்தரிக்காயில் கலந்து 15 நிமிடம் ஆன பிறகு இறக்கவும். இந்தக்கறி சாதத்துக்கு, சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரிதான விலங்குகள்!! (வீடியோ)
Next post கொல்கத்தாவும் துர்கா பந்தலும்!! (மகளிர் பக்கம்)