பின்லேடனை போன்று பாக்தாதி உடல், ஆழ்கடலில் வீசப்பட்டது!! (உலக செய்தி)
உலகையே அச்சுறுத்தி வந்தவர், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல் பாக்தாதி (வயது 48). இவரை கொல்வதற்கு நீண்ட காலமாகவே அமெரிக்கா குறி வைத்திருந்தது.
இந்த நிலையில்தான் அவர் சிரியாவின் வடமேற்கு நகரமான இத்லிப் நகருக்கு அருகே பாரிஷா என்ற கிராமத்தில் உள்ள ஒரு பெரிய வளாகத்தில் பதுங்கி இருப்பதை குர்துக்கள் அளித்த ரகசிய தகவல் மூலம் அமெரிக்கா அறிந்தது.
பாக்தாதி பதுங்கி இருந்த வளாகத்தை சுற்றி வளைத்தனர்.
அமெரிக்காவின் கையில் சிக்கித்தவிப்பதை விட தன்னைத்தானே பலியிடுவது மேல் என முடிவு செய்து தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை பாக்தாதி வெடிக்க வைத்தார்.
இதில் பாக்தாதியும், அவருடன் இருந்த 3 குழந்தைகளும் பலியாகினர். இதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்கள் மத்தியில் வெளியிட்டார்.
பாக்தாதியின் உடல் என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தது.
அவரது உடல் ஆழ்கடலில் எடுத்துச்செல்லப்பட்டு வீசப்பட்டு விட்டது. இதை அமெரிக்க இராணுவ தலைமையகம் பென்டகனில் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் உறுதி செய்தார்.
அல் கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனை, பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது 2011 ஆம் ஆண்டு அமெரிக்க சிறப்பு படை சுட்டுக்கொன்றது.
அப்போது அவரது உடலும் ஆழ்கடலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு வீசப்பட்டது. அதே கதிதான், இப்போது பாக்தாதி உடலுக்கும் ஏற்பட்டுள்ளது.
பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் உடல்களை புதைக்காமல் கடலில் வீசுவதையே அமெரிக்கா வழக்கமாக கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்தாதியின் வாழ்வுக்கு அமெரிக்கா முடிவுரை எழுதியதில் முக்கிய பங்கு வகித்தது, சிறப்பு படையின் வேட்டை நாய் தான். இந்த நாயை டிரம்ப் புகழ்ந்து தள்ளினார். ஆனால் அதன் பெயர்கூட ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
பாக்தாதி வேட்டையின்போது அந்த நாய் காயம் அடைந்து தற்போது சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating