சீறிப்பாய்ந்த தோட்டா!! (மகளிர் பக்கம்)
தோட்டாவிற்கு முன் அவரது அழகிய புன்னகையும் சீறிப்பாய.. ‘இளவேனில் வாலறிவன்’ என்கிற தமிழ்ப் பெயர் இணையத்தில் வைரலானது.
பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறார் இவர்.தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றாலும், தன்னுடைய மூன்று வயதில் பெற்றோருடன் குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு குடிபெயர்ந்தார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனரியோ நகரில் நடைபெற்ற, உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், 72 நாடுகளைச் சேர்ந்த 541 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் வெற்றி பெற்றால் 2020-ல் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெறலாம் என்பதால் இந்தத் தொடர் அதிக முக்கியத்துவம் பெற்றது. இதில் 20 வயதான இளவேனில் பிரிட்டன் மற்றும் சீன வீராங்கனைகளை தோற்கடித்து 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் பெற்று சாதனை படைத்தார்.
இந்த ஆண்டில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கம் இது. உலகக்கோப்பை சீனியர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வெல்லும் மூன்றாவது இந்தியர் என்கிற பெருமையும் இளவேனிலுக்கு கிடைத்துள்ளது. 13 வயதில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் ஆர்வம் ஏற்பட, முறையான பயிற்சியினை எடுக்கத் தொடங்கினார். குஜராத் மாநிலம் சார்பாக துப்பாக்கிச் சுடுதலில், பல்வேறு போட்டிகளில் பங்கேற்றவர், துப்பாக்கிச் சுடும் வீரர் ககன் நராங்கிடம் முறையான பயிற்சியை மேற்கொண்டார்.
2018ல் சிட்னியில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பையிலும் இந்தியா சார்பாக விளையாடி, தங்கம் வென்று சாதனை படைத்தார். மீண்டும் 2019ல் ஜெர்மனியில் நடைபெற்ற ஜுனியர் உலகக் கோப்பை போட்டியிலும் தங்கம் வென்றார். சீனியர் பிரிவில் இளவேனில் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. இவர் குஜராத் வீராங்கனையாக இருந்தாலும், தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட தமிழர். கடந்த ஒரு வருடமாக தமிழகத்தில் பயிற்சியினை மேற்கொண்ட இளவேனில் வாலறிவனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating