விண்வெளியில் இடம்பெற்ற முதல் குற்றம் !! (கட்டுரை)

Read Time:1 Minute, 49 Second

தனது முன்னாள் வாழ்க்கை துணையின் வங்கிக்கணக்கை, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இயக்கியதாக விண்வெளி வீரர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

விண்ணில் நடந்ததாக கூறப்படும் இந்த முதல் குற்றச்சாட்டு குறித்து நாசா தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

ஒரு பாலின ஜோடியான மெக்லைன் மற்றும் அமெரிக்க விமானப்படையின் முன்னாள் அதிகாரி சம்மர் வொர்டன் இருவரும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர், 2018ஆம் ஆண்டு விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், சம்மர் வொர்டன், அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையத்திடம் அளித்த முறைப்பாட்டில், மெக்லைன், விண்வெளியில் இருந்து, வங்கி கணக்கை இயக்கியதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது பூமிக்கு திரும்பியுள்ள மெக்லைன், விண்ணில் இருந்து வங்கிக்கணக்கை இயக்கியதை ஒப்பு கொண்டதுடன், தாம் எந்த தவறும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன், சம்மர் வொர்டன் மற்றும் தனது மகனின் நிதி நிலைமை நன்றாக உள்ளதா என பரிசோதனை மட்டும் செய்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக நாசா அதிகாரிகள், இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முருகனிடம் சில கேள்வி கேட்ட லலிதா ஓனர்!! (வீடியோ)
Next post ஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன? (அவ்வப்போது கிளாமர்)