Bullet Proof DIET!! (மருத்துவம்)

Read Time:8 Minute, 10 Second

நீங்கள் சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்பின் தரத்தில்தான் இருக்கிறது விஷயம். அளவில் இல்லை; உண்மையில் நிறைவுற்ற கொழுப்பு நல்லது’ என்ற சித்தாந்தத்தை வலியுறுத்தி, புதிதாக உருவாகியிருக்கிறது Bullet Proof diet.

இந்த உணவுமுறை புல்லட் ப்ரூஃப் என்ற பெயரிலேயே புத்தகமாகவும் வெளியாகி அமெரிக்காவைக் கலக்கியதோடு The Newyork Times, Publishers Weekly பத்திரிகைகள் வெளியிட்ட Best sellers list-லும் இடம் பிடித்துள்ளது.புல்லட் ப்ரூஃப் டயட் என்பது என்ன? எதனால் இந்த பரபரப்பு?

2014-ம் ஆண்டில், டேவ் அஸ்ப்ரே(Dave Asprey) என்பவரால் உருவாக்கப்பட்ட உணவுமுறைதான் புல்லட் ப்ரூஃப் டயட். தொழில்நுட்ப வல்லுனரான டேவ் ஆஸ்ப்ரேவிற்கு, அவருடைய உடல் பருமன் காரணமாக மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதையும், அவருடைய வாழ்நாட்களை எண்ணவேண்டிய இறுதிக்கட்டத்தில் இருப்பதையும் கூறி, மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

தன்னுடைய உடல் பருமனை சமாளிக்க, பலவிதமான உணவுக்கட்டுப்பாடுகள், சிகிச்சைகள் என பல வருட போராட்டத்திற்கு பிறகு, ஒரு நாள் தனக்கான உணவுமுறை ஒன்றை கண்டுபிடித்தார். அவரது கண்டுபிடிப்பின் விளைவாக உருவானதே Bullot Proof Diet.

இதற்குப் பிறகே தன் கண்டுபிடிப்புகளை விவரிக்கும் The Bullet Proof Diet என்ற புத்தகத்தை எழுதி ஆஸ்ப்ரே வெளியிட்டுள்ளார். தன்னுடைய பல வருட போராட்டத்திற்குப்பிறகு தானே உருவாக்கிய இந்த உணவுமுறை, உடல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் தனக்கு சிறந்த உணவாக இருப்பதை இந்த புத்தகத்தில் விவரித்திருக்கிறார். ஒருவரின் வாழ்வியல் முறைகளால் உடலில் நுழைந்த நச்சுப் பொருட்களை வெளியேற்றி, மூளை மற்றும் உடல் இரண்டையும் மீட்டெடுக்க உதவுகிறது இந்த புல்லட் ப்ரூஃப் டயட்.

புல்லட் ப்ரூஃப் டயட் என்றால் என்ன?
ஒரு வாரத்தில் 5 அல்லது 6 நாட்களுக்கு கொழுப்பு நிறைந்த உணவுகள் 75 சதவீதமும், 20 சதவீதம் புரோட்டீன் உணவுகளையும், 5 சதவீதம் கார்போஹைட்ரேட் உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். மீதியுள்ள 1, 2 நாட்களுக்கு கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

வாரத்தில் 6 நாட்களுக்கு கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது, உடலுக்குத் தேவையான பெரும்பாலான ஆற்றல் கொழுப்பை எரிப்பதன் மூலம் கிடைக்கிறது. தொடர்ந்து 6 நாட்களுக்கு கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொள்வதால். மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் உருவாவதைத் தடுக்க மற்ற 2 நாட்களில் கார்போஹைட்ரேட் உணவுகள் எடுத்துக்கொள்ளும் வகையில் இந்த உணவுமுறையை வடிவமைத்திருக்கிறார் டேவ் ஆஸ்ப்ரே.

‘புல்லட் ப்ருஃப் டயட்டில், நீங்கள் சாப்பிட நினைப்பதைக் காட்டிலும் குறைவான உணவை சாப்பிட முடியும். ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் அதிக அளவில் காய்கறிகள், பழங்களையும் எடுத்துக் கொள்வதால், வழக்கமாக நீங்கள் சாப்பிடும் உணவைக் காட்டிலும் சிறந்த உணவு இது. எப்பொழுதும் சாப்பிடும் உணவின் கலோரிகளை கணக்கிட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், அடிக்கடி ஏற்படும் பசி உணர்வும் இருக்காது’ என்கிறார்.

எதிர்ப்பு அழற்சி(Anti inflammatory) இயல்பைக் கொண்ட இந்த டயட் எடை இழப்பை வேகமாக தூண்டச் செய்து, தசைகளை பராமரிக்கவும் உதவுகிறது. மேலும், ரத்த சர்க்கரை மற்றும் ஹார்மோன்களை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுவதோடு மூளை ஆற்றலையும் அதிகரிப்பதற்கு ஏற்ற உணவு இது. இந்த உணவு முறையோடு Intermitten Fasting-ம் கடைபிடிக்கும்போது, நீங்கள் எதிர்பார்ப்பதைவிட அதிவேகமாக எடை இழப்பை அடைய முடியும். Intermittent fasting என்றால் என்ன?

சாப்பிடுவதற்கும், சாப்பிடாமல் இருப்பதற்குமான இடைப்பட்ட உண்ணாவிரதமே Intermittent fasting. இரண்டு உணவுகளுக்குமிடையேயான இடைவெளி, நேரம் அதிகமாக இருப்பதே அடிப்படை விஷயம். பல்வேறு Intermittent fasting வழிமுறைகள் உள்ளன. 5:2 – இந்த முறையில் வாரத்தில் 5 நாட்கள் வழக்கம்போல சாப்பிடலாம். மற்ற 2 நாட்களான உண்ணாவிரத நாட்களில் முழுவதுமாக பட்டினியில்லாமல் 500 முதல் 600 கலோரிகள் உணவு மட்டும் எடுத்துக்கொள்வது.

Eat Stop Eat முறை. இதில் வாரத்திற்கு 2 முறை, 1 நாள் விட்டு ஒரு நாள், முழுநாளும் உண்ணாவிரதம் இருப்பது.16:8 – இதில் ஒரு நாள் முழுவதும் உண்ணக்கூடிய உணவை 6 முதல் 8 மணி நேரத்திற்குள் உண்பது. மீதியுள்ள 14 முதல் 16 மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பது. ஒவ்வொரு நாளும் அல்லது வாரத்தில் 3 அல்லது 4 முறை இதை கடைபிடிக்க வேண்டும்.

ஆஸ்ப்ரேவின் ‘யுரேகா’ நொடி, அவருடைய ஒரு கப் காபியுடன் தொடங்கியது. அதாவது, ‘வழக்கமாக அருந்தும் காபியுடன் கூடுதலாக வெண்ணெய் சேர்ப்பதே புல்லட் ப்ரூஃப் காபி. 500 கலோரிகள் மற்றும் 50 கிராம் கொழுப்பு கொண்ட இந்த காபியை காலையில் முதல் உணவாக அருந்திவிட்டால், அதன் பிறகு ஏற்படும் பசியுணர்வை அப்படியே அடக்கிவிடும்.

பின்னர் குறைந்த கலோரிகள் அளவே உணவை எடுத்துக் கொள்ள முடியும்’ என்கிறார்.
காலையில், புல்லட் ப்ரூஃப் காபி, இன்டெர்மிடன்ட் ஃபாஸ்ட்டிங், உயர் கொழுப்பு உணவுகள் இந்த மூன்றும் ஒருங்கிணைந்த உணவுமுறையே ‘புல்லட் ப்ரூஃப் டயட்’ புத்தகத்தின் அடிப்படைக் கருத்து.

புல்லட் ப்ரூஃப் டயட்டில் குறிப்பிட்ட ஆய்வுகள் எதுவும் நடத்தப்பட்டதாக தெரியவில்லை என்பதும், ஒருவர் எத்தனை கலோரிகளை சாப்பிடுகிறார்? அதை அவரால் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியுமா? அது அவரின் எடை இழப்பிற்கு உதவுமா? போன்ற கேள்விகளும் இந்த உணவுமுறைக்கு எதிராக முன் வைக்கப்படுகின்றன. இதற்கு மருத்துவ உலகமும், உணவியல் நிபுணர்களும்தான் பதிலளிக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குறை சொன்னால் குஷி இருக்காது!! (அவ்வப்போது கிளாமர்)
Next post எச்சரிக்கும் நாசா ! அதிர்ச்சியில் இஸ்ரோ ! (வீடியோ)