Medical Trends!! (மருத்துவம்)
பொதுவாக சாப்பிடும்போது பொறியல், கூட்டு, பச்சடி, சட்னி, சாம்பார் என தொட்டுக்கொள்ளும் அயிட்டங்களை கொஞ்சமாக ஓரத்தில் வைத்துக் கொள்வோம். சாதம், தோசை, சப்பாத்தி போன்றவற்றை மெயின் அயிட்டமாக நடுவில் வைத்துக் கொள்வோம். உணவியல் நிபுணர்கள் இதை அப்படியே ரிவர்ஸில் மாற்றச் சொல்கிறார்கள்.
சைட் டிஷ்ஷாக பயன்படுத்துகிற உணவுகளை முதன்மையாகவும், மெயின் உணவுகளை குறைவாகவும் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், மெயின் உணவுகளில் மாவுச்சத்து அதிகம்; தொட்டுக்கொள்ளும் உணவுகளில் காய்கறி, பருப்பு, தானியங்கள் என அனைத்தும் சத்தானவை என்று ஆலோசனை சொல்கிறார்கள்.
நடந்துகொண்டே செல்போன் பேசுங்கள்
‘மொபைலில் அழைப்பு வந்தால் உட்கார்ந்து கொண்டே பேசுவதைவிட நடந்துகொண்டே பேசுவது நல்லது’ என்கிறார் பிரபலங்களின் பர்சனல் ட்ரெய்னரான அரூஷா நெக்கோனம். நீண்ட நேரம் உட்கார்ந்துகொண்டே பேசும்போது, உடலுக்கு மூவ்மெண்ட் கிடைக்காது. நடந்துகொண்டே பேசினால் பேச்சுக்கு பேச்சும் ஆச்சு; நடைப்பயிற்சியும் ஆச்சு என்பதே அவர் சொல்லும் ரகசியம்.
மூளைக்குப் பயிற்சி
எப்போதும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என சோஷியல் மீடியாவில் இருப்பவரா? அதற்கு பதில் போரடிக்கும் போது ப்ரெயின் கேம்ஸ் ஆப்-ஐ டவுன்லோடு செய்து, சுடோகு, க்ராஸ் வேர்டு, செஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடலாம். அது உங்கள் மூளைக்குப் பயிற்சியை அளிப்பதோடு வயதானால் வரும் அல்சைமர், டிமென்ஷியா போன்ற ஞாபகமறதி நோய்களிலிருந்தும் காப்பாற்றும் என்கிறது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு.
இண்டோர் கேம்ஸ் வேண்டாம்
இப்போதுள்ள குழந்தைகள் கையில் ஸ்மார்ட்போன், டேப்லட், லேப்டாப் என அனைத்திலும் வீடியோ கேம்கள்தான் இருக்கின்றன. அபார்ட்மென்ட் வாழ்க்கையில், பார்க்கிலோ, மைதானத்திலோ விளையாடும் குழந்தைகளை பார்ப்பதே அரிது.
பசுமையான சூழலில் விளையாடும் குழந்தைகள், பெரியவர்களாகும்போது 55 சதவீதம் மனநலக்குறைபாடுகள் குறைவதாக டென்மார்க்கைச் சார்ந்த அர்ஹஸ் பல்கலைக்கழக ஆய்வு சொல்கிறது. ஏற்கனவே, உலகளவில் 45 கோடி குழந்தைகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பதாக உலகசுகாதார அமைப்பு கணித்துள்ளது.
இயற்கைச்சூழல் குழந்தைகளின் மனநலத்தை பாதுகாப்பதால் வீட்டுக்குள் விளையாடுவதைவிட, மரம், செடிகள் நிறைந்த பூங்காக்களில் விளைவாடுவதை ஊக்குவிக்க வேண்டும் என்று இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. அதனால் தாத்தா, பாட்டி பேரக்குழந்தைகளை பார்க்கில் விளையாட கூட்டிச்சென்றால் அவர்களும் காலார நடந்தது போலவும் இருக்கும்.
அழுகையும் நல்லதே!
தினமும் சீரியல் பார்த்து அழும் பெண்களை, நம்மூரில் கேலி செய்கிறோம். ஜப்பான் நாட்டு மனநல மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ‘மனநலம் காக்க வாரத்தில் 3 நாட்களாவது நல்லா அழுங்க’ என்று பரிந்துரைக்கிறார்கள். இதற்காக டீச்சர் வைத்து எப்படி அழுவது என்று வேறு சொல்லித் தருகிறார்களாம்.
ஜப்பானில் ஆண்கள், பெண்கள் இரு பாலருமே நாள் ஒன்றுக்கு 20 சதவீதம் ஓவர் டைம் பார்ப்பதால் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். மன அழுத்தம் ஏற்படும் மக்கள், மனநல மருத்துவர்களிடம் செல்வது அதிகமாகி வருகிறது. எனவே, அந்நாட்டு அரசாங்கமே அதன் மக்களை அழுவதற்கு ஊக்கப்படுத்துகிறது. அங்குள்ள தனியார், அரசு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வாரத்தில் ஒரு நாளாவது சோகப்படங்கள் அல்லது சீரியல்களை பார்த்து அழச்சொல்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
சாப்பிட்டபின் மவுத் வாஷ் போதும்
சாப்பிட்ட பிறகு வாய் pH லெவலை மறுசீரமைப்பதற்கு 1 மணிநேரம் வரை எடுத்துக் கொள்வதால், உணவில் இருக்கும் அமிலமானது பற்களில் உள்ள எனாமலை மென்மையாக்கிவிடுகிறது. எனாமல் மென்மையாக இருக்கும் போது ப்ரஷ் செய்தால், அது அழிந்துவிடும். சாப்பிடுவதற்கு முன் ப்ரெஷ் செய்துவிட்டு சாப்பாட்டிற்குப்பின் மவுத் வாஷ் மட்டும் செய்தால் போதும்.
அதேபோல் காலையில் முதல் 60 நொடிகள் வெறும் பிரஷால் பற்களை தேய்த்துவிட்டு, அதன்பின் பேஸ்ட் போட்டு பல் தேய்ப்பதால் பல்லில் படிந்திருக்கும் கறைகள் எளிதில் நீங்கிவிடும் என்ற தகவலை அமெரிக்கன் டென்டல் அசோசியேஷன் வெளியிட்டிருக்கிறது.
Average Rating