‘டொய்லெட் சீட்’ஐ எவ்வாறு பயன்படுத்துவது !! (மருத்துவம்)
பொதுவாக கழிப்பறைச் சுத்தம் என்பது, காலங்காலமாக நமக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்ற ஒரு சுகாதாரப் பழக்கமாகும். ஆனாலும், கழிவறைச் சுத்தம் என்பது, நம்மை எரிச்சலடையச் செய்கின்ற விடயமாகத் தான் இன்றுவரை இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணமும் நாம்தான். கழிவறையைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் பயன்படுத்தத் தெரியாமல் இருப்பதுதான் இதற்குக் காரணமாகும்.
சிலர் வெஸ்டர்ன் டொய்லெட்டுகளைப் பயன்படுத்துவதில் அருவருப்படைவது உண்டு. மேலும் சிலர், இந்தத் டொய்லெட்டுகள்தான் ஆரோக்கியமாக இருக்கினறன என்றும், இரண்டு வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கிறாரகள்.
இது இவ்வாறிருக்க, வெஸ்டர்ன் டொய்லெட்டைப் பல காலமாகப் பயன்பத்தி வருபவர்களுக்குக்கூட, ஒரு சந்தேகம் இருக்கிறது. அது என்னவென்றால், வெஸ்டர்ன் டொய்லெட் சீட், எதற்காக நடுவில் இருக்கிறதென்பது ஆகும். அதை மேலே தூக்கிவிட்டுப் பயன்படுத்தலாமா கூடாதா, சீட் மேலே அப்படியே உட்காரலாமா என்ற சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கினறன. அதில் எது சரி, எது தவறு என்றுப் பார்க்கலாம்.
பொதுவாக வெஸ்டர்ன் டொய்லெட் சீட்டில் உட்காருவதற்கு முன்பாக, டிஸ்யூ பேப்பரை வைத்துத் துடைத்துவிட்டு அமருவோம். ஆனால், நாம் ஒன்றைப்பற்றி யோசிக்க வேண்டும். வெறும் டிஸ்யூ பேப்பரை மட்டும் வைத்துத் துடைத்தால், நீங்கள் நினைப்பதைப் போல், அது சுத்தமாகிவிடாது. ஆனால் என்ன, ஏனைய சுகாதாரப் பிரச்சினைகள் அளவுக்கு அது கொண்டுசெல்லாது. உங்களுக்கான நோய்த்தாக்கம் குறைவாக இருக்கும்.
கழிவறை இருக்கைகளால் ஏற்படக்கூடி சுகாதாரப் பிரச்சினைகளால், இரைப்பை, குடல் ஆகியவற்றில் நோய்த்தொற்று பரவக்கூடும். அத்தோடு, பாலியல் நோய்த் தொற்றுகளைப் பரப்பும் என்றும் நிறைய பேர் நம்புகின்றனர். ஆனால், அது எந்தளவுக்கு உண்மை என்று, ஆராய்ச்சிபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
நோய்த்தொற்றை அதிகமாகப் பரப்பாதென்று சொல்லப்படுகிறதே ஒழிய, கழிப்பறைகளில் எந்தக் கிருமிகளும் இல்லை என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. கழிப்பறை இருக்கைகளில் உள்ள பெரும்பாலான பற்றீரியாக்கள், பொதுவான தோல் பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற நுண்ணுயிர்களாகும்.
டொய்லெட்டில் உட்காருகின்ற போதுதான், டாய்லெட் சீட்டைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், முடித்து, தண்ணீரைப் பிளஷ் பண்ணுகின்றபோது, டொய்லெட் சீட்டை மேலே தூக்கிவிட்டு பின் பிளஷ் செய்ய வேண்டும். ஏனென்றால், நீங்கள் பிளஷ் செய்கின்றபோது, பிளஷ் செய்யப்படும் தண்ணீர் டாய்லெட் சீட் கவரின் மேலும் உள்ளேயும் படும். அந்தத் தண்ணீர், சீட்டின் ஓரங்களிலும் அடியிலும் அப்படியே தேங்கியிருக்கும். அங்கிருந்துதான், கிருமிகள் அதிகமாகப் பரவத் தொடங்கும்.
சிலர், சீட்டின் மேல் பேப்பரைப் போட்டுக்கூட அமருவார்கள். ஆனால் அது தேவையற்றது. ஏனென்றால், டொய்லெட் சீட்டைப் பொருத்தவரை, எப்படியும் கிருமிகள் சென்றுகொண்டுதான் இருக்கும். அதனால், பதற்றப்படத் தேவையில்லை. உங்களைச் சுகாதாரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
இதேவேளை, டொய்லெட்டுக்குள் போய் நிம்மதியாக இருங்கள். அங்கு போய், நிறைய பேர் நிறைய விடயங்களை யோசிப்பார்கள். அது முற்றிலும் மிகத் தவறு.
Average Rating