குறைந்த மக்கள் தொகை வளர்ச்சியை நோக்கி செல்லும் தமிழ்நாடு!! (உலக செய்தி)

Read Time:3 Minute, 44 Second

“இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது” என்று தனது சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்திருந்தார். ஆனால், தரவுகள் முற்றிலும் வேறுபட்ட பார்வையை வழங்குகின்றன.

வருடாந்திர அடிப்படையில் பார்த்தோமானால், 1971 ஆம் ஆண்டு முதலே இந்தியாவின் மக்கள்தொகை குறைந்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமின்றி, 2041 ஆம் ஆண்டு வாக்கில் வருடாந்திர மக்கள் தொகை பெருக்கத்தில், இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் சராசரியைவிட அதிக குறைந்த நிலையை அடையும் வாய்ப்புள்ளது.

எனினும், தமிழ்நாட்டில் பிற மாநிலங்களில் இருந்து குடியேறுவோர் எண்ணிக்கை உயரும் பட்சத்தில் தமிழ்நாட்டில் மக்கள்தொகை குறையத் தொடங்கும் நிலை மாறலாம்.

மக்கள்தொகை கணிப்புகளை பொறுத்தவரை, இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி குறைந்துக்கொண்டே வரும் என்றும், குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், 2020-21 ஆம் ஆண்டில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவும், 2031-41 வரையிலான காலக்கட்டத்தில் 0.5 சதவீதத்திற்கும் குறைவாகவே நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி இருக்குமென்றும் தெரிகிறது.

அடுத்த இரண்டு தசாப்தங்களில் மக்கள்தொகை அதிகரிப்புக்கு மிகப்பெரிய காரணம் மக்கள்தொகை வளர்ச்சியில் உண்டாகும் வேகமும், மக்களின் சராசரி ஆயுட்காலம் தொடர்ந்து அதிகரிப்பதும் ஆகும்.

ஏற்கனவே சரிவடைய தொடங்கிவிட்ட இந்தியாவின் இளையோர் (0-19 வயதுடையோர்) விகிதம், 2011 இல் 41 சதவீதமாக இருந்த நிலையில், அது 2041 இல் 25 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், 2011இல் 8.6 சதவீதமாக இருந்த இந்தியாவின் முதியோர்களின் (60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர்) எண்ணிக்கை, 2041இல் இரட்டிப்படையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் கருவுறுதல் விகிதம் (ஒரு பெண் தனது ஆயுட்காலத்தில் சராசரியாக பெற்றெடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை) தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது.

கருவுறுதல் விகிதத்தில் டெல்லி மற்றும் ஜம்மு & காஷ்மீரில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பெரியளவில் மாற்றமில்லை.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 10.4 சதவீதமாக உள்ள தமிழ்நாட்டின் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை, 2041 ஆம் ஆண்டு 22.6 சதவீதமாக அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. இது நாட்டின் சராசரி அளவைவிட அதிகமானதாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பளிச்சு என்று மாற்றலாம் 4 ரூபாய் செலவில் உங்கள்!! (வீடியோ)
Next post ஜாகிர் நாயக்கை நாடு கடத்தப் போவதில்லை? (உலக செய்தி)