ப்யூட்டி பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)
ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது!
வயதும் வாழ்க்கையும் ஒருநாளும் நமக்கு பின்னோக்கிச் செல்லப் போவதில்லை. தினசரி உணவுப் பழக்க வழக்கங்களை முறைப்படுத்தி, நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தினாலும் முதுமை என்பதை முகம் கொஞ்சமாவது காட்டிக்கொடுத்துவிடுகிறது. என்றும் பதினாறாய் வாழ நினைப்பவர்களுக்காகவே இருக்கிறது ‘ஃபேஸ் லிஃப்டிங்’ சிகிச்சை.நமது சருமம் கொலாஜன் (Collagen) என்ற புரோட்டீன் ஃபைபர்களால் நிறைந்தது. கொலாஜன் லெவல் குறையத் துவங்கும்போது தோலில் சுருக்கம் தோன்றும். நெற்றிச் சுருக்கம், காதுக்கு அருகே கன்னத்தில் இருக்கும் சதை கீழ் நோக்கி தொங்குதல், கன்னத்தில் பள்ளம் விழுதல், வாயைச் சுற்றி வளையம், கண்ணுக்கு கீழ் இருக்கும் சதை தளர்வடைந்து கீழ்நோக்கி இறங்குதல், தாடை இரண்டாகத் தெரிதல் போன்ற மாற்றங்கள் தோன்ற துவங்கும். இது பார்க்க வயதான தோற்றத்தைத் தரும். நம் தோலுக்கு உள்ளே இருக்கும் கொலாஜன் லெவலை அதிகப்படுத்த செய்யப்படும் சிகிச்சையே ‘ஃபேஸ் லிஃப்டிங்’.
குழந்தைகளுக்கு கொலாஜன் லெவல் 100 சதவிகிதமும் இருப்பதாலே அவர்கள் மிகவும் மிருதுவாகவும் பப்ளியாகவும் தோற்றம் தருகிறார்கள். வயது ஏற ஏற கொலாஜன் லெவல் இயல்பாய் மனிதனுக்கு குறையத் துவங்கும். சதைகள் தொங்கி கோடுகளோடு சுருக்கங்கள் தோன்றும். இது வயதாவதற்கு உண்டான அறிகுறிகள்.மருத்துவத் துறையைப் பொறுத்தவரை ஃபேஸ் லிஃப்டிங் என்பது அறுவை சிகிச்சை. இது சருமம் தளர்ந்து போகாமல் இறுக்கமாகவும், பெரும்பாலும் இளமையை தக்கவைப்பதற்காகவுமே செய்யப்படுகிறது. சினிமா நட்சத்திரங்களும், பிரபலங்களும் ஃபேஸ் லிஃப்டிங் முறை அறுவை சிகிச்சையினையே மேற்கொள்கிறார்கள். இது ரொம்பவே காஸ்ட்லியான ஒரு சிகிச்சை. வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியப்படுகிறது. பிரபலங்கள் வெளிநாடுகளுக்குப் பறந்து சென்றே இவ்வகை சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள்.
ஒருவர் அறுவை சிகிச்சை செய்ய வருகிறார் என்றால், முதலில் மருத்துவரீதியாக சில பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். அவரின் சருமம் எந்த லெவலில் இருக்கின்றது, ஸ்கின் டிகிரிஸ் என்ன என்பதை மருத்துவர்கள் முதலில் ஆய்வுக்கு உட்படுத்துவர். அனஸ்தீஸியா கொடுத்து செய்யப்படும் அறுவை சிகிச்சை என்பதால் வயதைப் பொறுத்தே அனஸ்தீஸியா லெவல் செக் செய்யப்படும். ஃபேஸ் லிஃப்டிங் அறுவை சிகிச்சை ஒரே நேரத்தில் மொத்தமாக முகத்தில் செய்யப்படுவது கிடையாது. சிலருக்கு நெற்றி மட்டும், சிலருக்கு கன்னப் பகுதிகள் மட்டும், வேறு சிலருக்கு தாடை எனத் தனித்தனியாகவே செய்யப்படும்.
கொலாஜன் லெவல் குறையாமல் சருமத்தின் பளபளப்பை நீட்டிப்பதற்காக சருமத்தின் உள்ளிருக்கும் லேயர்களுக்குள் உள் நுழைந்து கொலாஜன் லெவலை அதிகப்படுத்துவார்கள். அதாவது சருமத்தின் மூன்றாவது அடுக்கில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகிய இரண்டையும் உறுதியாக்கி, இளமைத் தோற்றத்தை நீண்ட நாள் தக்க வைக்கச் செய்கிற சிகிச்சை. அறுவை சிகிச்சை முடிந்து 180 நாட்களுக்குப் பிறகே சருமத்தில் மாற்றம் தோன்றத் துவங்கும். அதுவரை பொறுமை அவசியம். பெண்களே பெரும்பாலும் இந்த சிகிச்சையினை மேற்கொள்கின்றனர். ஆண்களில் 40 சதவிகிதம் இந்த சிகிச்சை மேற்கொள்வதாகக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
அறுவை சிகிச்சையின் பலன்கள்
* முதுமை தெரியாத இளமைத் தோற்றம் நீடிக்கும்.
* முகம் இளமையாகவே இருக்கும்.
* முகத்தில் புத்துணர்ச்சி கூடும்.
* சருமத்தில் பளபளப்பு ஏறும்.
* முகத்தில் தொங்கும் சதைகள் நீங்கி சுருக்கங்கள் குறையும்.
* சருமத்திற்கு இறுக்கத்தை தந்து தோலை இழுத்துப் பிடிக்கும்.
* தோலில் அதிகப்படியாய் உள்ள கொழுப்பினைக் குறைக்கும்.
* பார்லர்களில் கான்டூர் செய்யும் போது வரும் தோற்றம் இயல்பாய் கிடைக்கும்.
உடல் ரீதியாய் நமக்கொரு பிரச்சனை என்றால் அறுவை சிகிச்சை செய்து சரி செய்யலாம். இது பிரச்சனையே இல்லை. முதிர்ச்சியில் ஏற்படும் இயல்பான மாற்றம்.
அறுவை சிகிச்சையின் பக்க விளைவுகள்
* ஸ்கின் லிஃப்டிங் அறுவை சிகிச்சை என்பது ஒரு இன்ஸ்டன்ட் ரிசல்ட்.
* அறுவை சிகிச்சை மூலம் மேற்கொள்ளப்படும் ஸ்கின் லிஃப்டிங் கண்டிப்பாக நல்லது கிடையாது.
* அறுவை சிகிச்சை செய்யும்போது, இளமையை தக்க வைக்க தொடர்ந்து தெரப்பி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
* தெரப்பியை நிறுத்தும்போது கொலாஜன் லெவல் குறைய ஆரம்பிக்கும். பிரச்சனைகளும் உருவாகத் துவங்கும்.
* பக்கவிளைவுகள் உண்டு.
சாதாரண குடும்பத்து பெண்கள் இதைப் பற்றி யோசிப்பதில்லை. வயசாயிறுச்சு அதனால் முகத்தில் சுருக்கம், சதைத் தொங்கல் வருது என இயல்பாய் நினைத்து கடந்து போவார்கள். ஃபேஸ் லிஃப்டிங் அறுவை சிகிச்சை மருத்துவம் குறித்து அதிகம் தெரிந்து கொள்ளவும் விரும்ப மாட்டார்கள். இவ்வளவு பணம் செலவு செய்து இந்த அறுவை சிகிச்சை தேவையா என நினைப்பார்கள். அப்படி நினைப்பவர்களுக்காகவே பார்லர்களில் அறுவை சிகிச்சை எதுவுமின்றி ஒரு சில ஃபேசியல்கள் மூலமாகவும், இயற்கை முறையிலும், மசாஜ் மூலமாகவும், சில மெஷின்களைப் பயன்படுத்தியும் ஃபேஸ் லிஃப்டிங் செய்யும் முறைகள் அழகு நிலையங்களில் புழக்கத்தில் இருக்கின்றன.அறுவை சிகிச்சையில்லாமல், தொங்கும் சதைகளையும், தோலின் சுருக்கத்தை நீக்க நார்ச்சத்து உணவுகள், பழங்கள், கொலாஜன் லெவலை அதிகரிக்கும் உணவாக எடுப்பதுடன், கொலாஜன் ஃபேசியல்களை மேற்கொள்ளும்போது இளமையைத் தக்கவைத்து. முதுமையை சற்றே தள்ளிப்போடலாம்.
நம் தலைப்பின் கூற்றின்படி ஆரோக்கியம் சார்ந்த அழகின் முழு பலனையும் உடனடி யாய் எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் தொடர்ந்து செயல் படுவதன் மூலமாக 60 சதவிகித முன்னேற்றத்தை கண்டிப்பாய் அடைய முடியும்.அழகுக்கலை நிபுணர்கள் மூலமாக மேற்கொள்ளப்படும் ஒரு சில மசாஜ்கள், ப்ரெஸ்ஸர் பாயின்ட், பிளட் சர்குலேஷன், சருமத்தின் கொலாஜன் லெவலை அதிகரிக்கச் செய்யும். மேலும் கொலாஜனை அதிகரிக்க செய்யப்படும் ஃபேசியல், க்ரீம், மாஸ்க் இதெல்லாம் தோற்றப் பொலிவை எந்தவித பாதிப்பும் இன்றி நீட்டிக்கும். நான் சர்ஜிகல் ஃபேஸ் லிஃப்டிங் என்கிற பெயரில் தளர்ந்து போன தசைகளை உறுதியாக்கி இறுக்கிப் பிடிக்க, இதில் பக்க விளைவுகள் இல்லை என்பதால் பயப்படத் தேவையில்லை. ரொம்பவே வயதானவர்கள் இவற்றைச் செய்ய வேண்டியதில்லை. அவர்கள் நல்ல ஆரோக்கிய உணவுகளை எடுத்தால் போதுமானது. 40 வயதைக் கடந்து, முதுமையைத் தொடும் வயதில் இருப்போர் பார்லர்களில் மேற்குறிப்பிட்ட ஃபேசியல்களைச் செய்யலாம்.நமது சரும ஆரோக்கியத்தையும் தோற்றப் பொலிவையும் தக்கவைப்பது சாத்தியமே.
அடுத்த இதழில்…
ஸ்கின் லிஃப்டிங் வீட்டிலே செய்யும் முறை
எழுத்து வடிவம்: மகேஸ்வரி
(தொடரும்)
வயதைக் குறைக்கும் மந்திர மாத்திரை இன்னும் எவராலும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஹார்மோன்களின் மாற்றங்கள் வயதாவதில் அடங்கியிருக்கிறது. குறையும் ஹார்மோன்களைத் திரும்ப செலுத்துவது, வைட்டமின் குறைபாடுகளை நீக்குவது, சருமம் பொலிவாக இருக்க கொடுக்கப்படும் க்ரீம்கள், மருந்துகள் ஆகியவையும் சிகிச்சையில் அடக்கம். இதனால் முழு இளமையுடன் மாறிவிட முடியாது. அறுவை சிகிச்சைகள் சில நேரங்களில் தேவையற்ற விளைவுகளையே உண்டாக்கும்.
வாசகர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு இதழ் முகவரிக்கு ‘ப்யூட்டி பாக்ஸ்’ என்ன்டும். குடும்பத்தில் உள்ளவர் களும் பெண்களை வீட்டு வேலை செய்பவர்களாகவும், குழந்தைகளை மட்டும் பராமரிப்பவர்களாகவும் பார்க்காமல் அவர்களின் திறமையை உணர்ந்து கைகொடுக்க வேண்டும்” என்றார். உணவுக்கு அடுத்து மனிதன் தேடுவது உடைதானே.
Average Rating