சோளக்காட்டில் தரையிறங்கிய விமானம்!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 22 Second

ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள ஜுகோஸ்கி விமான நிலையத்தில் இருந்து கிரிமியாவில் உள்ள சிம்பெரோபோலுக்கு யூரல் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான ஏர்பஸ் ‘ஏ321’ விமானம் 226 பயணிகள் மற்றும் ஏழு ஊழியர்களுடன் புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை ஒன்று விமானம் மீது பயங்கரமாக மோதியது. இதனால் இரண்டு என்ஜீன்களும் பழுதானது. அத்துடன் லேண்டிங் கியரும் வேலை செய்யவில்லை.

உடனடியாக விமான ஊழியர்கள் விமானத்தை தரையிறக்க வேண்டும் என்று கூறினர். இதனால் எதையும் பற்றி யோசிக்காமல் விமானி மக்காச்சோளம் காட்டில் அவசரமாக தரையிறக்கினார்.

தரையிறக்கும்போது 9 குழந்தைகள் உட்பட 23 பேர் காயம் அடைந்தனர். உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. விமானியின் துணிச்சலான முடிவால் 226 பயணிகள் உயிர்தப்பினர்.

இது ஒரு அபூர்வமான அவசர தரையிறக்கம் என விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு நொடியில் நடந்த விபத்து நேரடிகாட்சி !! (வீடியோ)
Next post 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்க வரும் ஷில்பா!! (சினிமா செய்தி)