பெண் சக்தியை நிரூபிக்க ஒரு பயணம்!! (மகளிர் பக்கம்)
சுற்றுலா என்றாலே நம் அனைவருக்கும் கொள்ளை பிரியம் உண்டு. அதிலும் வீடு போன்று அனைத்து வசதிகளும் கொண்ட கேரவன் வேனில் சுற்றுலா செல்வதென்றால் யாருக்குதான் கசக்கும். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமின் மலைப்பாங்கான இடங்களில் இயற்கையை ரசித்தபடி தங்களின் உற்சாக பயணத்தை தொடங்கியுள்ளனர் 2 பெண்கள்.
அவர்கள் பெங்களூரை சேர்ந்த அங்கிதா குமார் மற்றும் மும்பையை சேர்ந்த சரண்யா. கன்டன்ட் கிரியேட்டராக பணியாற்றி வரும் இவர்கள் தங்களுடன் ஆண்கள் யாரையும் துணைக்கு அழைத்து ெசல்லவில்லை.
பெண் சக்தியை நிரூபிக்கதான் இந்த பயணம் என்கிறார்கள் இருவரும்இவர்களின் இந்த பயணத்துக்கு முன்னோடியாக இருந்தது தன்னுடைய முந்தைய பயண அனுபவம் தான் என்கிறார் அங்கிதா. இவர் கடந்த 2017ம் ஆண்டு 100 நாட்கள் சாகச பயணம் ஒன்றை மேற்கொண்டார். அதுதான் மற்றும் ஒரு பயணம் ெசய்ய அவரை தூண்டியுள்ளது.
அந்தப் பயணத்தை அங்கிதா தன் நண்பர்களான, பைக்கர் ரோகித் சுப்ரமணியன் மற்றும் புதுமை விரும்பியான அயர்லாந்து நாட்ைட சேர்ந்த வில்லியத்துடன் மேற்கொண்டுள்ளார். அந்த சுற்றுலா பயணம் தான் இப்போது அவருக்கு கைகொடுத்துள்ளது. கேரளாவில் தொடங்கி இமாச்சல் வரை மெடாடர் காரில் சாகச பயணம் மேற்கொண்டனர் அங்கிதா மற்றும் நண்பர்கள்.
என்னதான் இந்தியாவிற்குள் பயணம் இருந்தாலும், அதில் பல சட்டச்சிக்கல்களை எதிர்கொள்ள ேவண்டி இருந்தது, குறிப்பாக எல்லைகளில் பயணம் ெசய்யும் ேபாது என்கிறார் அங்கிதா. அதனால் ரிலாக்சாக ஒரு பயணத்ைத மேற்ெகாள்ள விரும்பினார் அங்கிதா. தன் பயணத்தை பற்றி தன் ேதாழி சரண்யாவிடம் கூற. அவரும் அங்கிதாவுடன் கைேகார்த்துள்ளார். அப்புறம் என்ன இரண்டு பெண்களும் பயணத்திற்கு தயாராக ஆரம்பித்தனர்.
ஆண்களால் முடியும் என்னும்போது ஏன் பெண்களால் முடியாதா என்ற கேள்வியுடன் இந்த பயணத்தை இருவரும் திட்டமிட்டனர். அதில் முதலில் அவர்கள் மேற்கொண்டது லூனா என்ற வேனை கேரவனா மாற்றியது. ஜூன் மாதம் முதல் வாரம் சிக்கிமில் தங்களின் அதிரடிப் பயணத்தை தொடங்கியுள்ளனர். உடை மாற்றும் அறை, கழிவறை, டைனிங் ஹால் என சகல வசதிகளும் கேரவனில் அமைத்துள்ளனர்.
‘‘எங்கள் பயணத்தின் முக்கிய ேநாக்கம், மற்ற மாநில மக்களின் கலாச்சாரம், உணவு முறைகள் மற்றும் பழக்கவழக்கம் அனைத்தும் இந்த பயணம் மூலம் தெரிந்து கொள்ள ேவண்டும் என்பது தான்’’ என்றனர். இயற்கை அழகை ரசிப்பதுடன் சுற்றுப்புறச்சூழல் குறித்து விழிப்புணர்வும்
ஏற்படுத்துகிறார்கள்.
‘‘இந்த மாதம் முழுதும் சிக்கிமில் தான் எங்களின் பயணம். இங்குள்ள மக்கள் தங்களின் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த பயணத்தின் முக்கிய நோக்கமே ெபண்களின் சக்தியை நிரூபிக்கத்தான்’’ என்கின்றனர் இருவரும் கோரசாக.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating