அணு ஆயுதம் தயாரிக்க இணையத்தில் பணம் திருடிய வடகொரியா!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 54 Second

தனது அணு ஆயுத திட்டங்களுக்கு தேவையான நிதியை பெறுவதற்காக, இணைய திருட்டில் ஈடுபட்டு 2 பில்லியன் டொலர்களை வடகொரியா பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கிகள் மற்றும் கிரிப்டோகரன்சிகள் எனும் மின்னணு பணத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களின் மூலம் 2 பில்லியன் டொலர்களை வடகொரியா திருடியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான 35 இணைய தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரித்து வருவதை பிபிசிக்கு கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த 2 வாரங்களில் தனது 4 வது ஏவுகணை சோதனையை நேற்று வடகொரியா மேற்கொண்டது. அப்போது 2 ஏவுகணைகள் விண்ணில் ஏவப்பட்டன.

தென்கொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான கூட்டு இராணுவ பயிற்சிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே இந்த சோதனையை நடத்தியுள்ளதாக வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருநாடுகளின் கூட்டு இராணுவ பயிற்சி, பிராந்தியத்தின் அமைதி உடன்படிக்கைகளுக்கு எதிரானது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனி ஓராண்டுக்கு கவலை இல்லை!! (அவ்வப்போது கிளாமர்)
Next post காதல் இல்லா உலகம்? (அவ்வப்போது கிளாமர்)