கேரள கஞ்சா 122.5 கிலோ கிராம் மீட்பு!!

Read Time:1 Minute, 32 Second

பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் யாழ்ப்பாணத்தின் மாதகல் துறை பகுதியில் தேடுதல் நடத்தியத்திய போது, நேற்று (31) 122.5 கிலோ கேரள கஞ்சாவைக் கண்டுபிடித்தனர்.

இளவாலை பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மாதகல் துறை பகுதியில் தேடுதல் நடத்தியதில், கடற்கரைக்கு அருகில் ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல பொதிகள் கண்டு பிடிக்கப்பட்டன.

பொதிகள் திறக்கப்பட்ட போது, அவற்றில் 122.5 கிலோ கேரள கஞ்சா காணப்பட்டது.

கேரள கஞ்சா தொகை கடல் வழி வழியாக நாட்டிற்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா தொகை குறித்து இளவலை பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில், நாட்டில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக கடற்படை தொடர்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களுக்கு அழகு சேர்க்கும் மூலிகைகள்!! (மருத்துவம்)
Next post ஜிகா…எபோலா…நிபா…!! (மருத்துவம்)