சொரி, சிரங்கை குணப்படுத்தும் மருத்துவம்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 45 Second

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவம் குறித்து பார்த்து வருகிறோம்.

அந்தவகையில், காய்ச்சலை தணிக்க கூடியதும், சளி, இருமல் பிரச்னைகளுக்கு மருந்தாக அமைவதும், சொரி, சிரங்கு உள்ளிட்ட தோல் நோய்களை போக்க கூடியதும், நாள்பட்ட புண்களை ஆற்றும் தன்மை கொண்டதுமான தேள்கொடுக்கு இலையின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட தேள்கொடுக்கு இலையானது உள், வெளி மருந்தாகி பயன்தருகிறது. தோல்நோய்களை குணப்படுத்தும்.

நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்கும். காய்ச்சலை தணிக்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தத்தை போக்குகிறது. மாதவிலக்கு, வெள்ளைப்போக்கு பிரச்னையை சரிசெய்கிறது. தேள்கொடுக்கு இலைகளை கொண்டு புண்கள், சிராய்ப்பு காயங்களை குணப்படுத்தும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேள்கொடுக்கு இலை, தேங்காய் எண்ணெய், மஞ்சள். செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன் தேள்கொடுக்கு இலை பசையை சேர்த்து தைலப்பதமாக காய்ச்சி மஞ்சள் சேர்க்கவும். இந்த தைலத்தை பூசிவர அரிப்பு, சொரி, சிரங்கு போன்றவற்றை குணமாகும்.

தேள்கொடுக்கு இலைகளை பயன்படுத்தி காய்ச்சலை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேள்கொடுக்கு இலை, சீரகம், பனங்கற்கண்டு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதனுடன், அரைத்து வைத்திருக்கும் தேள்கொடுக்கு இலை பசையை சிறிய நெல்லிக்காய் அளவுக்கு சேர்க்கவும். சிறிது சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காய்ச்சல் இருக்கும்போது காலை, மாலை என இருவேளை குடித்துவர வியர்வையை உண்டாக்கி காய்ச்சலை தணிக்கும். வண்டுக்கடி, பூச்சிக்கடி இருக்கும்போது இதை குடித்துவர வலி சரியாகும். பூச்சிக்கடி குணமாகும். வெள்ளைப்போக்கு பிரச்னை தீரும். நாள்பட்ட புண்களை ஆற்றும் அற்புத மருந்தாக இது விளங்குகிறது. தேள்கொடுக்கு இலைகளை பயன்படுத்தி சளி, இருமல், இரைப்பு போன்றவற்றை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: தேள்கொடுக்கு இலை பசை, சுக்குப்பொடி, திப்லி, தேன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் விடவும். இதனுடன், கால் ஸ்பூன் தேள்கொடுக்கு இலை பசை, சிறிது சுக்குப்பொடி சேர்க்கவும். 3 திப்லி தட்டிப் போடவும். கொதிக்க வைத்த பின்னர் வடிகட்டி சிறிது தேன் சேர்த்து குடித்து வர சளி, இருமல், உடல் வலி போன்றவை சரியாகும். தொண்டைக்கட்டு, தொண்டை புண்களை சரிசெய்யும். உள்ளங்கை, உள்ளங்காலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பை போக்கும் எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம். நாட்டு கடைகளில் கிடைக்கும் புங்கன் எண்ணெய்யை வாங்கி பூசிவர உள்ளங்கை, உள்ளங்காலில் ஏற்படும் அரிப்பு தடிப்பு சரியாகும். இப்பிரச்னை உள்ளவர்கள் ரசாயன சோப்புகள், திரவங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு பெண்ணுக்கு முழு மகிழ்ச்சியை எவ்வாறு கொடுப்பது!! (அவ்வப்போது கிளாமர்)
Next post அழகுக் குறிப்புகள்!! (மகளிர் பக்கம்)