கருமிளகு 10 குறிப்புகள்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 12 Second

‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்’ என்று நம்பிக்கையோடு சொல்லும் அளவுக்கு மகத்துவம் கொண்டது மிளகு. இதில் வெள்ளை மிளகு, கருமிளகு என இரண்டு வகைகள் உண்டு. இதில் நாம் அதிகம் பயன்படுத்தும் கருமிளகு பற்றி 10 குறிப்புகளைப் பார்ப்போம்…

* கருமிளகுடன் நெய் சேர்த்து சாப்பிடும்போது, அது பசியின்மையை நீக்கி பசியைத் தூண்டுகிறது.

* இது உமிழ்நீரை சுரக்கச் செய்வதால் உணவின் சுவை உணர்வுகளை அதிகப்படுத்துகிறது. எனவே, எல்லாவித ஜீரணக் கோளாறுகளுக்கும், வயிற்றில் ஏற்படும் தொற்றுகளுக்கும் நல்ல மருந்தாக உள்ளது. இது ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

* கருமிளகில் உள்ள Antimicrobial கலவைகள் உணவினை புதிதாக வைத்துக் கொள்வதற்கு உதவுகிறது.

* இது ஆன்டி ஆக்சிடென்ட்டுகளைப் பெற்றிருப்பதோடு, வைட்டமின் ஏ, சி,கே போன்றவற்றையும் நல்ல அளவிலே பெற்றிருக்கிறது.

* இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுவதோடு, அழற்சி மற்றும் கீல்வாதத்தின் விளைவுகளுக்கு எதிர்ப்
பொருளாகவும் செயல்படுகிறது.

* இது இருமல் சிகிச்சையில் நல்ல சுவாசத்திற்கு உதவுகிறது. இருமல், சளி, ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு மிளகு கஷாயம் மிக நல்ல மருந்தாக உள்ளது.

* நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.

* கருமிளகு டீ குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும். ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்து அதை அப்படியே மூடி வைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்க வேண்டும்.

* மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும். பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி. தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக்கட்டுதல் நீங்கும்.

* மிளகை பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து ஒரு கப் மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப் பொருமல், தொற்று, அஜீரணம் குறையும். கல்லீரல், குடல் போன்ற உறுப்புகள் நன்றாக இயங்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சௌதியில் பர்தா அணியாத பெண்ணிற்கு கிடைத்த தண்டனை!! (வீடியோ)
Next post எல்லாவற்றையும் தள்ளிப் போடுகிறீர்களா?! (அவ்வப்போது கிளாமர்)