ஆயுர்வேதம் கூறும் முதியோர் நலம்! (மருத்துவம்)

Read Time:10 Minute, 12 Second

இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் இருக்கின்றனர். சிறப்பு மருத்துவத்துறைகளின் முன்னோடி ஆயுர்வேதம் எனலாம். ஆம்… அக்காலம் முதல் இன்று வரையும் ஆயுர்வேதம் மருத்துவத்தில் ஒவ்வொரு நோய்க்கான சிறப்பு மருத்துவத்துறைகள் இயங்கி வருகின்றன.

ஆயுர்வேத மருத்துவம் மொத்தம் எட்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. பொது மருத்துவம், குழந்தை மருத்துவம் (இதில் பெண்களுக்கு உண்டான சிகிச்சை. மகப்பேறு ஏற்பட கர்ப்பிணி சிகிச்சை, பிரசவம் போன்றவைகள் அடங்கும்), மனோதத்துவ சிகிச்சை, வாய்க்கான சிகிச்சை, அறுவை சிகிச்சை, விஷ சிகிச்சை, ரசாயன சிகிச்சை, இனப்பெருக்க சிகிச்சை இவற்றுடன் கண், காது, மூக்கு மற்றும் தொண்டைக்கான சிகிச்சை என எட்டு வகையாக பிரிக்கப்படுகிறது.

இது தவிர மருத்துவத்தில் இன்றும் எவ்வளவு நோய் கண்டுபிடிக்கப்பட்டாலும் மேற்கண்ட 8 வகை குணங்களில் உட்படுத்தி விடலாம்.மேற்கண்டவற்றில் ரசாயன சிகிச்சை என்பது வயது முதிர்வை தடுத்து நோய் வராமல் தடுத்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துறை ஆகும். வயது முதிர்வை தடுக்கும் துறை என்றுதான் குறிப்பிட்டுள்ளதே தவிர வயது ஆனவர்களுக்கு என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாரங்கதாரர் என்ற ஆயுர்வேத ரிஷி ரசாயனம் என்பது வயதான காலத்தில் ஏற்படும் வியாதியைப் போக்கும் மருத்துவமும் அடங்கும் என்று குறிப்பிட்டு மேலும் இவர் மனிதரின் வயதின் நிலையை குறித்து, மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

பொதுவாக ஆயுர்வேத மருத்துவத்
துறையில் மனித வாழ்வை மூன்றாகப்
பிரித்துப் பார்க்கப்படுகிறது.
(1)இளமை பருவம்: 1 வயது முதல் 16 வயது வரை.
(2) நடுத்தர வயது: 16 வயது முதல் 60 வயது வரை.
(3)வயதானவர்கள்: 60 வயதுக்கும்
மேற்பட்டவர்கள்.

மனிதன் தன் வாழ்நாளில் 10 யதில் தன்னுடைய பால பருவத்தை இழக்கிறான். 20 வயதில் தன்னுடைய வளர்ச்சியை இழக்கிறான். 30 வயதில் இருந்து தன்னுடைய அழகை இழக்கிறான். 40 வயதில் இருந்து தன்னுடைய கூர்ந்தாயும் திறனை இழக்கிறான். 50 வயதில் இருந்து தோலின் வனப்பை இழக்கிறான்.

60 வயதில் இருந்து தன்னுடைய கண் பார்வையை இழக்கிறான். 70 வயதில் இருந்து தன்னுடைய உடல்உறவு கொள்ளும் சக்தியை இழக்கிறான். 80 வயதில் இருந்து தன்னுடைய சக்தியை இழக்கிறான். 90 வயதில் இருந்து தன்னுடைய புத்தியை இழக்கிறான். 100 வயதில் ஐம்புலன்களின் செயல்பாடு மற்றும்உடலின் செயல்பாட்டை இழக்கிறான்.

வயது முதிர்வு என்பதை இயற்கையாக ஏற்படக்கூடிய வயது முதிர்வு மற்றும் இயற்கையாக மாறாக ஏற்படக்கூடிய வயது முதிர்வு என்று பிரித்துக் கூறுகிறது. இயற்கைக்கு மாறாக என்பது 60 வயதிற்குள் வயதானவர்களுக்கு உண்டாகும் நோய்கள்தான் தோற்றத்தை குறிப்பதாகும். இவை இரண்டிற்கும் ஆயுர்வேதம் தீர்வை தருகிறது.

வயதான காலத்தில் ஏற்படக்கூடிய நோய்களாக அஜீரணம், மலச்சிக்கல், சுவாசம், இருமல், உடல் இளைப்பு, தோலில் சுருக்கம், அரிப்பு, தலை வழுக்கை, எலும்பு தேய்மானம், மூட்டுகளில் வலி, நடக்க முடியாமை, நடுக்கம், மனஉளைச்சல், தூக்கமின்மை கண்பார்வை குறைபாடு, ருசியின்மை போன்றவை இருக்கும்.

மருந்துகளை பொறுத்தவரை நோய் வராமல் தடுத்து வயது முதிர்வை தடுக்கக் கூடியவைகளில் மிகச் சிறந்தது நெல்லிக்காய். (இப்போது தெரிகிறதா? பாரி ஏன் அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்தான் என்று….)கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்கனியைக் கொண்டு தயாரிக்கப்படும் திரிபலா சூர்ணம் என்ற மருந்து மூன்று வருடகாலம் தொடர்ந்து எடுத்து வந்தால் 100 வருட காலம் நோய் இல்லாமல் வாழலாம் என்கிறது.

திரிபலா சூர்ணம் முதியவர்களுக்கு ஏற்படும் அஜீரணம். மலச்சிக்கல், இருமல், மூச்சிரைப்பு போன்ற தொந்தரவுகளுக்கு மிகச்சிறந்த மருந்தாக இருக்கும். இக்கலவை தற்போது மாத்திரை வடிவிலும், சிரப் வடிவிலும், வெளிச்சந்தைகளில் கிடைக்கின்றன. ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ளலாம். நெல்லிக்கனி தேன் ஊறல், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ரசம், துவையல், நெல்லிக்காய் பானகம், நெல்லிக்காய் ஜாம் போன்ற வடிவில் நெல்லிக்கனி எடுத்துக் கொள்ளலாம். நெல்லிக்காய் சாற்றில் சிறிதளவு கறி மஞ்சள் பொடி கலந்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய்க்கு மிகச் சிறந்த மருந்தாக விளங்கும்.

நெல்லிக்கனி முக்கிய மருந்தாகக் கொண்டு தயாரிக்கப்படும் ‘சயவனப்பிதாறு லேகியம்’, ‘பிரம்ம ரசாமணம்’ போன்ற ஆயுர்வேத மருந்துகள் முதியவர்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளுக்கு பயனுள்ளதாகயிருக்கும்.நெல்லிக்கனி வயது வராமல் தடுத்து வந்த நோயை குணமாக்கி மீண்டும் வராமல் தடுப்பதில் மிகச்சிறந்தது.

வயதானவர்களுக்கு உலகத்திலேயே மிகச்சிறந்தது பாலும், நெய்யும் என்கிறது ஆயுர்வேதம். பாலைக் கொண்டு நிறைய மருந்துகள் ஆயுர்வேத மருத்துவத்துறையில் காணப்படுகின்றன. முதியவர்களுக்கு பயன்படும் பால் மருந்துகள் பால் என்று சொன்னால் அது பசும்பாலைத்தான் குறிக்கும். எனவே, கீழ்க்கண்ட மருந்துகளை தயாரிக்க பசும்பாலைத்தான் பயன்படுத்த வேண்டும். 1 பங்கு மருந்து 8 மடங்கு அதிகமாக பால் அதற்கு சம அளவு தண்ணீர் என கலந்து நன்றாக கொதிக்க வைத்து 8 மடங்கு வரை வற்ற வைக்க வேண்டும்.

பூண்டு பால்: பூண்டை ஒன்றிரண்டாக இடித்து மேற்கண்ட அளவில் பால் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி பயன்படுத்தவும். இது அதிக கொழுப்பு, இதய நோய் இடுப்பு வலி, இருமல், மூச்சிரைப்பு நோய் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மருத மரப்பட்டை பால்: இதய நோய்க்கும், எலும்புகளுக்கும் உகந்தது.

அதிமதுரப் பால்: வறட்டு இருமல், வயிற்றுப் புண், மன உளைச்சல் போன்றவற்றுக்கு மிகவும் உகந்தது.
அமுக்கிராக்கிழங்கு பால்: பலகீனம், தூக்கமின்மை, உடல் வலி, மனஉளைச்சல், போன்றவற்றிற்கு மிக உகந்தது.

சிற்றாமூட்டி பால்: மூட்டுவலி, எலும்பு தேய்மானம், வாதநோய் போன்றவற்றுக்கு மிகச்சிறந்தது.
தசமூலம் பால்: உடலுக்கு வளமையைக் கொடுக்கும். தசைப்பிடிப்பு வலியை விரைவில் குணமாக்கும்.
திரிகடுகம் பால்: சளித்தொந்தரவு, அஜீரணக் கோளாறு போன்றவைகளுக்கு உகந்தது.

பால் மருந்துகளை ஜீரண சக்தியை அனுசரித்து உணவுக்குப்பின் அல்லது உணவுக்கு முன் எடுத்துக்கொள்ளலாம். மாலை அல்லது இரவு என்றால் மிக நல்லது. வயதானவர்களுக்கு உகந்த மருந்தொன்று.

நெய் இதனை முதியவர்கள் மதிய உணவில் மட்டும் சில துளிகள் சூடான உணவில் கலந்து சாப்பிட வேண்டும். இதனைத் தவிர்த்து காலை மற்றும் இரவு உணவுகளில் நெய் கலந்த உணவை தவிர்த்தல் நலம்.

முதியவர்களுக்கு ஏற்படும் மூட்டுவலி மற்றும் வாத நோய்களுக்கு ஆயுர்வேத மருந்துகடைகளில் கிடைக்கும் ‘க்ஷீர பலா தைலம்’, ‘பிண்டத் தைலம்’ போன்ற தைலங்கள் நல்ல பலனைத் தரும். இதனை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளலாம். இதுபோன்று முதியவர்களின் நலனை பேணிக்காப்பதில் ஆயுர்வேதத்தின் பங்கு அளப்பரியது!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தடம்புரளும் தாம்பத்ய ரயில்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post உலகை கதறவிடும் இந்தியா புதிய ஆயுதம்!! (வீடியோ)