புளிப்பாக சாப்பிடலாமா? (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 16 Second

மாங்காய் சாப்பிடுவது, சாம்பலை ருசிப்பது என கர்ப்ப காலத்தில் பெண்களின் வித்தியாச தேடல் காலங்காலமாகத் தொடர்கிற ஒன்றே. கர்ப்பிணிப் பெண் கேட்டால் முடியாதெனச் சொல்லாமல், இவற்றை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் ஆட்கள் நிறைய பேர். மசக்கையின் போது இப்படி காரசார, புளிப்பு உணவுகளை உட்கொள்வது சரிதானா? மகப்பேறு மருத்துவர் டாக்டர் ப்ரியா கண்ணன் விளக்குகிறார்.

‘‘கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உமிழ்நீரின் சுரப்பு அதிகமாக இருக்கும். வாந்தி உணர்வு இருக்கும். மாங்காய், நெல்லிக்காய் மாதிரி புளிப்புப் பொருட்களை சாப்பிட்டால் வாய்க்கு இதமாக இருக்கும். அதே நேரத்தில் புளிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகமாக்கி நெஞ்செரிச்சல், எதுக்களிப்பு ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்தும். கர்ப்பிணிகளுக்கு பொதுவாக இரும்புச்சத்து குறைவாக இருக்கும். இதனால் சிலர் சாம்பல் சாப்பிடுவதை விரும்புவார்கள். சாம்பலை சாப்பிடவே கூடாது.

உப்பும், காரமும் அதிகமுள்ள ஊறுகாயைத் தவிர்க்க வேண்டும். உப்பு அதிகமுள்ள உணவுப்பொருட்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம் உருவாகும் வாய்ப்புண்டு. கர்ப்பிணிகள், ஆசைப்பட்ட உணவுகளை அளவோடு சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். காரமான உணவுகளை சாப்பிட நேர்ந்தால் கடைசியாகதயிரோ அல்லது நீர் மோரோ எடுத்துக்கொண்டால் வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை ஓரளவு குறையும்.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீமான் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? (வீடியோ)
Next post கர்ப்ப காலத்தில் பால் குடிப்பது ரொம்ப நல்லது! (மகளிர் பக்கம்)