ப்யூட்டி பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 19 Second

பரு ஏன் வருகிறது? எதனால் வருகிறது? எந்த மாதிரியான உடலமைப்பு கொண்டவர்களுக்கு அதிகம் வருகிறது போன்ற விபரங்களையும், பருவில் உள்ள நான்கு வகைகள் பற்றியும் சென்ற இதழில் விரிவாகப் பார்த்தோம். நான்கு வகையான பருக்களில் இந்த வகை பருக்கள் அழகு நிலையங்களை அணுகி, சாதாரண டிரீட்மென்ட்களை எடுப்பதன் மூலமாகவே கட்டுப்படுத்திவிட முடியும். முகப்பருவைக் கட்டுப்படுத்த எந்த மாதிரியான டிரீட்மென்ட்டை அழகு நிலையங்களில் தருகிறார்கள் என்பதை இந்த இதழில் சற்றே விரிவாகப் பார்க்கலாம்.

எந்த வகையைச் சேர்ந்த முகப்பரு உங்களைப் பாதித்திருக்கிறது என்பதை முதலில் அறிய வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வரும் முகப்பரு மற்றும் உடல் சூட்டினால் தோன்றும் முகப்பரு போன்றவை முதல் மூன்று வகையான சாதாரண முகப்பருவிற்குள் அடங்கும். இந்த வகை முகப்பரு பிரச்சனைக்கும் அதற்கென தேர்ச்சி பெற்ற அழகுக்கலை வல்லுநர்களை அணுகி சாதாரணமான டிரீட்மென்ட்களை அழகு நிலையங்களிலேயே எடுத்துக்கொள்ளலாம். நான்காவது வகை மட்டுமே அப்நார்மல் வகையைச் சேர்ந்த முகப்பருவாகும்.

இதற்கு மட்டுமே மருத்துவரை அணுக வேண்டும். முகப்பரு இல்லாத சாதாரண முகத்திற்கு ஃபேஷியல் செய்யும்போது, முகத்தில் இருக்கும் ஃபிரஷர் பாயின்ட்களில் அதிகமாகவே மசாஜ் வழங்கப்படும். இதனால் முகத்திற்கும், தோலுக்கும் புத்துணர்வு கிடைத்துவிடும். ஆனால் முகப்பருக்கள் உள்ள முகத்தினை கொண்டவர்களுக்கு முகத்தில் அதிகமாக மசாஜ் கொடுத்தல் கூடாது. சாதாரண கிளின் அப் மட்டுமே செய்தல் வேண்டும். முகத்தில் மசாஜ் தருகிறேன் என்கிற பெயரில் பருவை அழுத்தினால் பருவின் அளவு பெரியதாகிவிடும். முகத்தின் தோல்களையும் அது அதிகமாகப் பாதிக்கும்.

எனவே மசாஜ் பேக்கினை அப்ளை செய்து, பிம்பிள் இல்லாத இடமாகப் பார்த்து மைல்டான மசாஜ் மட்டுமே கொடுக்க வேண்டும். ஸ்க்ரப்பையும் மிகவும் மைல்டானதாகக் கொடுத்தல் வேண்டும். பெரிய பெரிய துகள்களைக் கொண்ட ஸ்க்ரப்களை முகப்பரு உள்ளவர்களுக்கு பயன்படுத்தவே கூடாது. நார்மலான முக அமைப்பினருக்கு ஃபேசியல் செய்யும்முன் ப்ளீச் செய்து விட்டே பேசியலைத் தொடங்குவோம். ஆனால் முகப்பரு இருப்பவர்களுக்கு ப்ளீச் செய்தல் கூடாது. வாடிக்கையாளர் தனது முகம் மினுமினுப்பாக‌ இருக்க வேண்டும் என விரும்பினால், அமோனியா இல்லாத ப்ளீச்சாக அல்லது அவர்களுக்கு மில்க் ப்ளீச்சிங் வழங்கலாம்.

முகப்பரு அதிகம் உள்ளவர்களுக்கு முகத்தில் ஸ்டீரிமிங்கும் தருதல் கூடாது. குறைவான அளவில் முகப்பரு உள்ளவர்களுக்கு மட்டுமே மைல்ட் ஸ்டீரிமிங்காகப் பார்த்து வழங்க வேண்டும். முகப்பருவை நீக்க செய்யப்படும் டிரீட்மென்டிற்காக பயன்படுத்தப்படும் அனைத்து தயாரிப்புகளுமே பாக்டீரியாவின் வளர்ச்சியை (antibiotics) அழிக்கக்கூடியவை. அனைத்து க்ரீம்களுமே மூலிகையில் தயாரிக்கப்பட்டவை. இருபது நாட்கள் இடைவெளிவிட்டு மூன்று அமர்வுகளை டிரீட்மென்ட் வழியாக எடுப்பதன் மூலம் 75 சதவிகிதம் முகப்பரு குறைந்து முகத்தை பொலிவடையச் செய்யலாம்.

இரண்டாவது அமர்விலேயே அதற்கான மாற்றம் வாடிக்கையாளர் முகத்தில் தெரியத் துவங்கும். உணவுப் பழக்கவழக்கம் சரியில்லாமை, ஹார்மோன் இம்பாலன்சிங் பிரச்சனை உள்ளவர்கள் மட்டும் இருபது நாட்கள் இடைவெளியில் ஏழு அமர்வுகள் கட்டாயம் டிரீட்மென்ட் எடுக்க வேண்டும். இவர்கள் முகப்பரு டிரீட்மென்ட் எடுப்பதோடு நின்றுவிடாமல், உணவுப் பழக்கவழக்கத்தை முறைப்படுத்துதல், முறையாக தண்ணீர் அருந்துதல் போன்ற வற்றையும் தொடர்ந்து பின்பற்றுதல் வேண்டும்.

ப்யூட்டி பார்லரில் பிம்பிள் டிரீட்மென்ட்…

“டீ டிரீ ஆயில்” ஹெர்பல் டிரீட்மென்டிற்கு தேவையானவை
* க்ளன்சிங் (cleasing)
* ஸ்க்ரப்பிங் (scrubbing)
* மசாஜ் (massage)
* ஜெல்(gel)
* ஃபேஸ் பேக் (face pack)
* ஸ்கின் டானிக் (skin tonic)

1 ஆஸ்டிஜென்ட்(astringent) கலந்த தண்ணீரால் முகத்தை முதலில் சுத்தம் செய்தல் வேண்டும். இந்த நீர் முகத்தில் பருக்கள் பரவுவதை கட்டுப்படுத்தும்.

2 க்ளன்சிங்கை எடுத்து முகத்தில் தடவி இரண்டு நிமிடங்கள் விட வேண்டும்.

3 மைல்ட் ஸ்க்ரப்பிங்கை முகத்தில் தடவி இரண்டு நிமிடங்கள் விட வேண்டும்.

4 படத்தில் காட்டியுள்ளதுபோல் ஆஸ்டிஜென்ட் கலந்த நீரால் முகத்தில் போட்டுள்ள க்ளன்சிங் மற்றும் ஸ்க்ரப்பிங்கை நீக்குதல் வேண்டும்.

5 மசாஜ் க்ரீமை முகத்தில் தடவி முகப்பரு இல்லாத இடங்களில் மைல்ட் மசாஜ் தர வேண்டும். 20 நிமிட இடைவெளி தர வேண்டும்.

6 முகத்தை சுத்தம் செய்த பின் ஜெல்லை முகத்தில் தடவுதல் வேண்டும். இதற்கும் 20 நிமிடங்கள் தேவைப்படும்.

7 ஃபேஸ் பேக்கை படத்தில் காட்டியுள்ளதுபோல் ப்ரெஷ் கொண்டு முகத்தில் தடவுதல் வேண்டும். இதற்கு 15 நிமிடங்கள் இடைவெளி விட வேண்டும்.

8 இறுதியாக ஸ்கின் டானிக்கை முகத்தில் தடவ வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அலர்ட் ஆக வேண்டும் இன்றே! (மருத்துவம்)
Next post உடலுக்கும் உதட்டுக்கும் பீட்ரூட்!! (மகளிர் பக்கம்)