ப்யூட்டி பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 29 Second

கல்லூரிக்குச் செல்லும் பெண்களில் துவங்கி வயதான பெண்கள் வரை உடலை வேக்ஸிங் செய்து கொள்கிறார்கள். சரியாகச் சொல்வதென்றால் கல்லூரி செல்லும் பருவத்தில்தான் பெண்களுக்கு ரோமம் வளர்ந்து சருமத்திற்கு வெளியே எட்டிப் பார்க்கத் துவங்கும். இளம் வயதுப் பெண்கள் பெரும்பாலும் கைகள் வெளியில் தெரியும்விதமான ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், பாதி கால்கள் தெரியும் விதமாக ஷாட் ஸ்கெட், மிடி, த்ரீ ஃபோர்த் உடைகளை விரும்பி அணிவர். எனவே கைகளின் கீழ் பகுதியான (Under arm), கை முழுவதும் மற்றும் கால்களை வேக்ஸ் செய்துகொள்ள பெரும்பாலும் இப்பெண்கள் விரும்புகின்றனர்.

சேலை உடுத்தும் பெண்களாக இருந்தால் முதுகு, வயிற்றுப் பகுதி, கை மற்றும் கால்களில் செய்து கொள்கிறார்கள். திரை நட்சத்திரங்கள், மாடலிங் துறை சார்ந்தவர்கள், செலிபிரேட்டிகள் தவிர்த்து திருமணம் முடிவான பெண்களும் உடல் முழுவதும் வேக்ஸ் செய்துகொள்வதை விரும்புகிறார்கள். வேக்ஸ் செய்வதால் சருமம் அழகாகவும் மினுமினுப்பாகவும் தோற்றம் தருகிறது. முடி நீக்கிய பகுதியில் உள்ள சருமத்தின் நிறம் கொஞ்சம் தூக்கலாகத் தெரியும். உடலில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை மெழுகு எடுக்கும் முறையே வேக்ஸிங்.

மெழுகு சூடேறினால் எப்படி உருகுகிறதோ அதுபோலவே வேக்ஸ் ஹீட்டர் கொண்டு திக்கான நிலையில் இருக்கும் வேக்ஸை சூடேற்றும்போது உருகத் தொடங்குகிறது. கல்லூரிக்குச் செல்லும் பெண்கள் சுகர் வேக்ஸ், சாக்லெட் வேக்ஸ் மற்றும் ஃப்ளேவர் வேக்ஸ் இவைகளை அதிகம் விரும்புவர். சந்தைகளில் பியர்ல் வேக்ஸ். ஸ்டாபெர்ரி வேக்ஸ், பியர்ல் கோல்ட் வேக்ஸ் என வெரைட்டியாகவே கிடைக்கிறது. மிகவும் சென்ஸிட்டிவ்வான சருமத்தினை கொண்டவர்கள் ரோஸ் பெடல்ஸ் வேக்ஸ், வறண்ட சருமத்தைப் பெற்றவர்கள் ஆலுவேரா வேக்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.

சூடேற்றப்பட்ட நிலையில் இருக்கும் வேக்ஸினை சருமத்தில் தடவுவதற்கு முன்பு சருமத்தின் பாதுகாப்பிற்கான சொல்யூஷனை அப்ளை செய்தல் வேண்டும். அதன் மேல் ஸ்டிக் வைத்து சூடேற்றப்பட்ட வேக்ஸை முடியின் வளர்ச்சி எந்தப் பக்கம் நோக்கி இருக்கிறதோ அந்தப் பக்கம் நோக்கி தடவுதல் வேண்டும். பின் அதன் மேல் ஸ்ட்ரிப் ஒன்றை ஒட்டி டக்கென முடி வளர்ச்சியின் எதிர் பக்கம் இழுப்பதன் மூலம், சருமத்தில் ஒட்டியிருக்கும் முடி வேக்ஸோடு இணைந்து இழுத்துக் கொண்டு வந்துவிடும். அந்த இடம் முழுவதும் முடிகள் அகற்றப்பட்ட நிலையில் பார்க்க பளிச்சென பளபளப்பாய் இருக்கும்.

நமது கையின் கீழ் பகுதியின் (Under arm) முடி வளர்ச்சி ஏழு முதல் எட்டு விதமான வகையில் பிரிந்து வளர்ந்திருக்கும். சிலருக்கு நான்கு திசை நோக்கியும், சிலருக்கு பாதி மேல் நோக்கி பாதி கீழ் நோக்கிய வளர்ச்சியிலும் இருக்கும். அவரவர் சருமத்தைப் பொருத்தே முடியின் வளர்ச்சி தீர்மானமாகிறது. யாருக்கு எந்தப் பக்கம் முடி வளர்ந்திருக்கிறதோ அந்த திசை நோக்கி வேக்ஸினை அப்ளை செய்தல் வேண்டும். வேக்ஸ் செய்வதற்கு முன்பு பிஃபோர் லோஷன், வேக்ஸின் செய்த பிறகு ஆடர் லோஷன் பயன்படுத்த வேண்டும்.

வேக்ஸிங் செய்வதற்கு மிதமான சூடே எப்போதும் நல்லது. அதிகமாக சூடேற்றி பயன்படுத்தினால் சருமத்தில் தழும்புகள் தோன்ற வாய்ப்புள்ளது. வேக்ஸிங் செய்யும்போது அதில் உள்ள சூட்டில் இயல்பாகவே கொப்புளம் மற்றும் சின்னதான ஒவ்வாமைகள் தோன்றும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்காக வேக்ஸ் முடித்ததும் கேம்பர் லோஷனை பயன்படுத்த வேண்டும். சில பெண்கள் சுயமாக வேக்ஸ் ஹீட்டர் வாங்கி வைத்து அவர்களாகவே வேக்ஸ் செய்து கொள்கிறார்கள். வேக்ஸ் செய்வதை மட்டும் மிகவும் கவனமாக கையாள வேண்டும். செய்முறை தெரிந்து செய்வதே எப்போதும் நல்லது.

அதேபோல் நமது உடலின் சூடு மற்றும் வேக்ஸின் சூடு இணையும்போது சருமம் வியர்க்கத் துவங்கும். வியர்க்கும் நிலையில் வேக்ஸின் சருமத்தோடு ஒட்டாது. ஒட்டாத நிலையில் தோலில் இருக்கும் முடி வராது. எனவே கட்டாயம் வேக்ஸின் செய்யும்போது அறை குளிரூட்டப்பட்டிருக்க வேண்டும். சில பெண்கள் பிளேடு, ரேஷர் கொண்டு முடியினை நீக்க முயற்சிப்பார்கள். அவ்வாறு செய்வதால் சருமத்தின் மேல்முடி எளிதில் வந்துவிடும்.

உள்ளிருக்கும் முடி அப்படியேதான் இருக்கும். அது சருமத்திற்கு சொரசொரப்புத் தன்மையை தரத் துவங்கும். வேக்ஸினால் மட்டுமே நிமிடத்தில் முடி முழுவதும் நீங்கி தோற்றப் பொலிவு தோன்றும். சருமத்தில் இருக்கும் முடியை நீக்குவது நல்லதில்லைதான். முடி நம் உடலுக்கு பாதுகாப்பு கவசம் போன்றது. அதை நீக்குவதால் சருமம் பாதிப்படைகிறது. சருமத்தில் உள்ள முடியை நீக்குவதன் மூலம் தேவையற்ற விளைவுகளை நாமே வலியத் தேடிக்கொள்கிறோம். நமது உடலில் அதிகமான குளிர்ச்சி இருத்தல் கூடாது. சருமத்தின் குளிச்சியினை குறைத்து உடல் சூட்டை சமநிலைப் படுத்தவே உடலில் ரோமம் உள்ளது.

நமது உடலில் எதற்காக முடி இருக்கிறது?

நமது உடலின் உள் உறுப்புகளை தோல் கவசமாகச் செயல்பட்டு எப்படி பாதுகாக்கிறதோ, அப்படித்தான் தோலை முடி பாதுகாக்கிறது. நமது சருமங்களில் சின்னதும் பெரியதுமாக முடிகள் நிறையவே பரவியுள்ளன. சூரியனில் இருந்து நேரடியாக நம்மைத் தாக்கும் யு.வி. கதிர் வீச்சில் நம் சருமம் பாதிக்காத வண்ணம் முடிகள்தான் சருமத்திற்கான கவசமாக செயல்படுகிறது. நமது முக்கிய உறுப்புகளான கண், காது, மூக்கு இவற்றிலும், மறைவான இடங்களிலும் சிறு துகள்கள், தூசிகள் உள்ளே நுழைந்து நமது உள்ளுறுப்புகளை பாதிக்காவண்ணம், தடுக்கும் அரணாய் செயல்படவே அங்கெல்லாம் முடிகள் வளர்ந்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சளி, இருமலுக்கு மருந்தாகும் தபசு முருங்கை!! (மருத்துவம்)
Next post மறக்க முடியாத உறவு வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…! (அவ்வப்போது கிளாமர்)