ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் தமிழ் சிறுமி பற்றிய குறும்படம் !! (சினிமா செய்தி)
மகாபலிபுரத்தை சேர்ந்த 9 வயது சிறுமி கமலி மூர்த்தி. ஸ்கேட்டிங்கில் அசாத்திய திறமை கொண்டவர். கமலி கவுன் அணிந்து ஸ்கேட்டிங்போர்டை பயன்படுத்தியபோது எடுத்த புகைப்படம் சர்வதேச அளவில் பிரபல ஸ்கேட்போர்டரான டோனி ஹாக்கின் கண்ணில் பட்டது.
காலணிகள் கூட இல்லாமல் ஒரு சிறுமி அசாத்தியமாக ஸ்கேட்டிங்போர்டை பயன்படுத்தியதை பார்த்து வியந்த டோனி அந்த புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பகிர கமலி உலக அளவில் பிரபலமானார்.
இதையடுத்து நியூசிலாந்தை சேர்ந்த ஷஷா ரெயின்போ என்கிற இயக்குநர் தமிழகத்திற்கு வந்து கமலியை பற்றி கமலி என்ற பெயரிலேயே 24 நிமிட குறும்படத்தை இயக்கினார்.
அந்த குறும்படம் கடந்த மாதம் நடந்த அட்லாண்டா திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை பெற்றது. 6 வாரங்களாக படமாக்கப்பட்ட அந்த குறும்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மும்பை சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றது.
கமலி, அவரின் தாய் சுகந்தி மற்றும் பாட்டியை பற்றிய அந்த குறும்படம் 2020 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. கமலியின் தாய் சுகந்தி இதுபற்றி கூறும்போது ‘என் மகளுக்கு பின் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை இது’ என்றார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating