இந்திய மாணவிக்கு சீட் தர 7 பல்கலைக்கழகம் போட்டி!! (உலக செய்தி)

Read Time:2 Minute, 1 Second

துபாயில் இருக்கும் இந்திய மாணவிக்கு அமெரிக்காவில் உள்ள 7 பிரபல பல்கலைக் கழகங்களில் உயர் கல்வி பயில வாய்ப்புகள் கிடைத்துள்ளன. துபாய் வாழ் இந்திய மாணவி சைமன் நூராலி (17). மிர்டிப்பில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். 9 வயது முதலே நூராலி படிப்பில் முதல் இடம் பிடித்து வந்தார்.

இதனை தொடர்ந்து பல்கலைக் கழகத்தில் சேருவதற்காக நூராலி விண்ணப்பித்தார். நூராலியின் திறமையை கண்ட அமெரிக்காவின் 7 முன்னணி பல்கலைக் கழகங்கள், அவருக்கு வாய்ப்பு வழங்கி உள்ளன. கலிபோர்னியா பல்கலைக் கழகம், ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம், எமோரி பல்கலைக் கழகம், ஜார்ஜ் டவுடன் பல்கலைக் கழகம், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழகம் உள்ளிட்ட 7 பல்கலைக் கழகங்கள் நூாராலிக்கு இடம் வழங்க முன்வந்துள்ளன.

இதுபோன்று பல்வேறு பல்கலைக் கழகங்களில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், இன்டர்நேஷனல் ரிலேஷன் அன்ட் எக்னாமிக்ஸ் பிரிவு எந்த பல்கலைக்கழகத்தில் இருக்கிறதோ அங்கு படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து நூராலி கூறுகையில், “பல்வேறு பல்கலைகளில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் எந்த ரகசியமும் இல்லை. மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை செய்யுங்கள். உங்களை நீங்களே ஊக்குவித்துக் கொள்ளுங்கள்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேஷன் ஷோவில் மயங்கி விழுந்து இறந்த மாடல் அழகி!! (உலக செய்தி)
Next post பழைய சோறு… பலன்கள் நூறு!! (மருத்துவம்)