கண்டிப்பா பேரீச்சை சாப்பிடுங்க!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 53 Second

பேரீச்சம்பழம், நமது உடலுக்கு அதிக ஆற்றலை தரக்கூடியது. ரத்தசோகையை போக்கும். முடி உதிர்வை தடுக்கும். இதில், கால்சியம், சல்ஃபர், இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர் மற்றும் மக்னீசியம் போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளது. உடலுக்கு உறுதி அளிக்கக்கூடிய ரிபோஃப்ளோவின், நியாசின், ஃபோலேட், வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-கே போன்ற அனைத்து சத்துக்களும் கொண்ட ஒரே பழம் பேரீச்சம்பழம்தான். தினமும் இதை சாப்பிடுவதின் மூலம் குடல் இயக்கங்கள் ஆரோக்கியமாக இருக்கும்; மலச்சிக்கலும் நீங்கும். செலினியம், மாங்கனீஸ், தாமிரம், மற்றும் மக்னீசியம் போன்றவை பேரீச்சம்பழத்தில் நிறைந்துள்ளதால், எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் துணை புரிகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட எலும்பு தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. குறிப்பாக, எலும்பு தேய்மானத்தால் பெரிதும் அவதிப்படும் வயதானவர்கள் இதை சாப்பிடுவது நல்லது.

இதில் இருக்கும் நிகோட்டின் அளவு, குடலில் இருக்கும் நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, குடல் கோளாறுகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இதில், அமினோ அமிலம், கரையாத மற்றும் கரையக்கூடிய நார்சத்து நிறைந்துள்ளதால் செரிமான கோளாறுகளை சீராக்குகும்.
இரும்புச்சத்து குறைபாட்டை சரிசெய்ய சிறந்த சாய்ஸ். பெரும்பாலான உணவுகளில் இல்லாத மகத்துவம் பேரீச்சம்பழத்தில் இருக்கிறது. கரிம சல்ஃபர். இது, உடலில் ஏற்படும் அல்ர்ஜி மற்றும் பருவகால ஒவ்வாமைகளுக்கு சிறந்த தீர்வு தரக்கூடியது. இதிலுள்ள வைட்டமின் மற்றும் பொட்டாசியம், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் செயல்பாட்டையும் அதிகரிக்க செய்வதால், மூளை சுறுசுறுப்பாக இயங்கும். ஞாபக மறதியால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த நிவாரணம் தருகிறது. கெட்ட கொழுப்பை குறைக்க, ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரே வழி பேரீச்சம்பழம்தான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினமும் உடற்பயிற்சி வளரும் ஞாபகசக்தி!! (மகளிர் பக்கம்)
Next post ஆதாமின் விலா எலும்பு வளர்ந்ததா? ஆய்வு செய்த விஞ்ஞானிகள்!! ( வீடியோ)